இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கலாமா? தங்கம் சம்பந்தப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யலாமா?

சென்னை: இந்தியாவில் தீபாவளி பண்டிகையை நெருங்குகிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும். மக்கள் தங்கள் சேமிப்புகளை வெளியில் எடுத்து செலவு செய்வார்கள் என்பதால் தீபாவளி என்றாலே மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

இந்தியாவில் பொதுவாகவே தீபாவளி பண்டிகை காலத்தின் போது தங்கம் விற்பனை என்பது அதிகரிக்கும் . ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையை பார்த்தால் சாதாரண மக்கள் இந்த தீபாவளிக்கு தங்கத்தை வாங்க முடியுமா என்பது கூட தெரியாது . 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது . ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு லட்சம் ரூபாய் தேவை என்ற ஒரு நிலைமை வந்துவிட்டது.

இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கலாமா? தங்கம் சம்பந்தப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யலாமா?

இந்த தீபாவளிக்கு தங்க நகை வாங்கலாமா அல்லது தங்க நாணயம் வாங்கலாமா அல்லது தங்கம் சம்பந்தப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யலாமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. ஒன் பைனான்ஸ் நிறுவனத்தின் மூத்த தலைவராக இருக்கக்கூடிய யாஷ் செதானி பிசினஸ் டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில் தங்கம் வாங்குவது, தங்கம் சம்பந்தப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வது ஆகிய இரண்டுமே இரண்டு வித்தியாசமான முதலீட்டு வாய்ப்புகள் என கூறுகிறார் .

தங்கம் வாங்குவது என்பது நாம் ஒரு பொருளில் செய்யக்கூடிய முதலீடு , தங்கம் சம்பந்தப்பட்ட பங்குகளை வாங்குவது என்பது ஈக்விட்டி சந்தையில் செய்யக்கூடிய முதலீடு எனக் கூறுகிறார். இந்த இரண்டுக்குமே அதற்கே உண்டான ஆபத்துகளும் இருக்கின்றன பலன்களும் இருக்கின்றன என கூறுகிறார். தங்கம் என்பது சர்வதேச அளவிலான சப்ளை டிமாண்ட் ஆகியவற்றை பொறுத்து அதன் விலை மாறும் . அதைப்போல தங்கம் சம்பந்தப்பட்ட பங்குகள் என்பது ஒரு குறிப்பிட்ட தொழிலின் செயல் திறன் எப்படி இருக்கிறது ,ஒரு குறிப்பிட்ட பங்குச் சந்தையின் செயல் திறன் எப்படி இருக்கிறது ஆகியவற்றை பொறுத்து அமையும் எனக் கூறுகிறார் .

இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கலாமா? தங்கம் சம்பந்தப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யலாமா?

தங்கம் விலை அதிகரிக்கிறது என்பதற்காகவே தங்கத்தை விற்பனை செய்யக்கூடிய கடைகளின், நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்துவிடும் என கூறி விட முடியாது என தெரிவிக்கிறார் . தங்கத்தின் விலை அதிகரிக்கும் அதே சமயத்தில் தங்கம் வாங்கும் போக்கும் அதிகமாக இருந்தால்தான் தங்கம் சம்பந்தப்பட்ட பங்குகளின் மதிப்பு உயரும் எனக் கூறுகிறார்.

நீண்ட கால அடிப்படையில் என்னுடைய முதலீடு வளர வேண்டும் என எண்ணுபவர்கள் தங்கத்திற்கு மாற்றாக கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என கூறுகிறார் . குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு முதலீடாகவும் , உடனடியாக விற்று பணமாக கூடிய ஒரு முதலீடாகவும் கோல்ட் ஈடிஎஃப் திட்டங்கள் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.

தங்கம் விலை உயர்வதற்கு ஏற்ப தங்கம் சம்பந்தப்பட்ட பங்குகளின் மதிப்பு உயர்வது கிடையாது எனக் கூறும் அவர் ஒரு குறிப்பிட்ட தங்க நகை விற்பனை செய்யக்கூடிய ஒரு கடையை நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொண்டால் அந்த கடையின் விற்பனை அளவு, லாபம், செயல்திறன் ஒட்டுமொத்த சந்தை நிலவரம் ஆகியவற்றை பொறுத்துதான் அந்த குறிப்பிட்ட பங்கின் மதிப்பு உயரும் அல்லது குறையும் . ஆனால் தங்கம் விலை அப்படி கிடையாது என கூறுகிறார்.

எனவே தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் அதில் எனக்கு லாபம் வர வேண்டும் என எண்ணுபவர்கள் தங்கத்திற்கு மாற்றாக தங்கள் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களை நாடலாம் என கூறுகிறார். அதேவேளையில் ஆக்சிஸ் செக்யூரிட்டி நிறுவனத்தின் ஆய்வாளர் ராஜேஷ் பால்வியா கோல்டு பைனான்ஸ் கம்பெனி மற்றும் முன்னணி நகை விற்பனை நிறுவனங்களின் பங்குகள் தற்போது அட்ராக்டிவ் ஆன விலையில் இருப்பதாக கூறுகிறார் .மணப்புரம் பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களை அவர் உதாரணமாக கூறுகிறார் . தங்க நகையாக வாங்க வேண்டும் என்ற தேவை இருந்தால் மட்டுமே தங்கமாக வாங்குங்கள் இல்லை என்றால் செய்கூலி சேதாரம் என முதலீட்டை வீணாக்காமல் ஈடிஎஃப் அல்லது கோல்டு சம்பந்தப்பட்ட நிறுவன பங்குகளில் முதலீடு செய்யுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+