வரலாற்று உச்சத்தில் இருந்து 50% சரிவில் வெள்ளி விலை..!! இனி வரும் நாட்களில் வெள்ளி விலை என்ன ஆகும்?

ஜனவரி மாதம் உலக சந்தையிலும் இந்தியாவிலும் வெள்ளியும் , தங்கமும் வரலாற்று உச்சபட்ச விலையை எட்டின. ஆனால் அதன் பின்னர் படிப்படியாக விலை குறைந்தன. தங்கமாவது ஓரளவு விலை ஏறியது, ஆனால் வெள்ளி கிணற்றில் போட்ட கல்லு போல ஒரே வரம்பிலேயே நீடிக்கிறது.

கடந்த ஜனவரியில் தமிழ்நாட்டில் ஒரு கிலோ வெள்ளி 4.25 லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதுவே இன்று 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக வெள்ளி விலை 2.40 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் என்ற விலை வரம்பிலேயே ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.

சில்வர் இன்ஸ்டிடியூட் தரவுகளின்படி, 2000 ஆம் ஆண்டு முதல் 2026 செப்டம்பர் வரை, வெள்ளியும் தங்கமும் முறையே 1,131% மற்றும் 1,447% லாபத்தை வழங்கியுள்ளன. இதன் மூலம் வெள்ளியின் CAGR 9.9% ஆகவும், தங்கத்தின் CAGR 10.8% ஆகவும் இருந்துள்ளது. அதாவது இரண்டும் தோராயமாக ஒரே அளவில் லாபம் தந்துள்ளன. வெள்ளி சில மாதங்களில் தங்கத்தை விட அதிக லாபம் தரும், அதே சமயம் கடுமையான சரிவையும் சந்திக்கும்.

வரலாற்று உச்சத்தில் இருந்து 50% சரிவில் வெள்ளி விலை..!! இனி வரும் நாட்களில் வெள்ளி விலை என்ன ஆகும்?

இதற்கான முக்கியக் காரணம், வெள்ளி என்பது ஒரு நிதி சொத்தாகவும் , தொழில்துறை பொருளாகவும் இரண்டு முகங்களை கொண்டுள்ளது. இதனால் தான் இதன் விலை அதிக ஏற்றம் இறக்கம் கொண்டதாக காணப்படுகிறது. அதாவது பொருளாதார மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் இரண்டுமே வெள்ளியின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எலக்ட்ரானிக்ஸ், மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற துறைகள் வளரும் போது வெள்ளியின் தேவை அதிகரித்து விலை உயரும், இல்லை என்றால் சரியும்.

ஆக்மண்ட் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் ரெனிஷா சினானி தி பைனான்சியல் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜனவரியில் வெள்ளி மிக வேகமாக உயர்ந்திருந்தது. எனவே சந்தை மனநிலை மாறியதும் ஊக வணிகர்கள் பெருமளவில் விற்றனர். மேலும் சோலார் தயாரிப்பாளர்கள் வெள்ளியின் பயன்பாட்டை குறைக்க தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு தொழில்துறை நுகர்வு 3% குறையும் என சில்வர் இன்ஸ்டிடியூட் எதிர்பார்க்கிறது என்கிறார். இதனால் தான் வெள்ளி விலை சரிந்தது அப்படியே நீடிக்கிறது என கூறுகிறார்.

Also Read

மேலும் முதலீட்டாளர்கள் வெள்ளி ஈடிஎஃப்களில் இருந்து பணத்தை வெளியே எடுத்து பத்திரங்களில் முதலீடு செய்வதும் ஒரு காரணம் என்கிறார். தங்கம் தனது நிலையை தக்க வைக்க மத்திய வங்கிகல் அதனை அதிகமாக வாங்குவது ஒரு காரணம், மத்திய வங்கிகள் தங்கத்தை வெளிநாட்டு செலாவணி இருப்புக்களாக வைத்துள்ளன. ஆனால், வெள்ளிக்கு அத்தகைய ஆதரவு இல்லை என சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையே ஜே.பி. மார்கன் குளோபல் ரிசர்ச் தனது சமீபத்திய அறிக்கையில், வெள்ளி விலைக்கான இலக்கை 84 டாலரில் இருந்து 70 டாலராக குறைத்துள்ளது. இந்த ஆண்டு சோலார் துறையிலிருந்து வெள்ளிக்கான தேவை சுமார் 30% குறைய வாய்ப்புள்ளது என சுட்டுக்காடுகிறது. இதனால் வெள்ளியின் விலை பெரிய அளவில் ஏறாது என சுட்டிக்காட்டுகிறது.

Recommended For You

சில்வர் இன்ஸ்டிடியூட்டும் இதே போன்றதொரு மந்தமான கணிப்பை வெளியிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் மின் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருந்து ஒட்டுமொத்த வெள்ளி தேவை சுமார் 10% குறையும் என மதிப்பிடுகிறது. அதாவது மந்தமான தொழில்துறை தேவை, மேக்ரோ பொருளாதார சூழல் காரணமாக வெள்ளியின் விலை தற்போதைக்கு பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+