ரூ.2.25 லட்சம் விலை சரிந்த வெள்ளி..!! மேலும் விலை குறையுமா? வெள்ளியில் முதலீடு செய்யலாமா?

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் வெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 425 ரூபாயும் ஒரு கிலோ 4.25 லட்சம் ரூபாயும் என வரலாற்று உச்சம் தொட்டது. தங்கத்தை விட வேகமாக வெள்ளி விலை உயர்ந்தது. இதனால் இனி வெள்ளியும் எட்டாக்கனி ஆகிவிடும் என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் அதன் பின் வெள்ளி விலை குறைந்து வந்தது.

இன்று தமிழ்நாட்டில் ஒரு கிராம் வெள்ளி 200 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதாவது வெள்ளி விலை தனது வரலாற்று உச்சத்தில் இருந்து ஒரு கிராமுக்கு 225 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 2.25 லட்சம் ரூபாயும் விலை குறைந்துள்ளது. அதாவது வரலாற்று உச்சத்தில் இருந்து வெள்ளி விலை 53% சரிவை சந்தித்துள்ளது.

ரூ.2.25 லட்சம் விலை சரிந்த வெள்ளி..!! மேலும் விலை குறையுமா? வெள்ளியில் முதலீடு செய்யலாமா?

அக்டோபர் மாதத்தில் மட்டும் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 40,000 ரூபாய் விலை குறைந்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி 240 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 2.40 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த 31 நாட்களில் வெள்ளி விலை கிராமுக்கு 40 ரூபாயும் கிலோவுக்கு 40,000 ரூபாயும் குறைந்துள்ளது.

Also Read

வெள்ளி விலை கிட்டதட்ட டிசம்பர் மாதம் விலைக்கே சென்றுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெள்ளி விலை வேகமாக உயர்வதை பார்த்து பலரும் அதில் முதலீடு செய்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் நஷ்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் வெள்ளி விலை இன்னும் சில காலம் இப்படி விற்பனை அழுத்தத்தில் தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தங்கம், வெள்ளி என இரண்டுமே ஜனவரியில் வரலாற்று உச்சத்தை எட்டின. அதன் பிறகு ஏற்பட்ட விலை திருத்தத்தில் தங்கம் விலை சுமார் 25% வரை மட்டுமே சரிந்தது. ஆனால், வெள்ளி மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்து அதன் உச்ச விலையிலிருந்து 53% சரிவை சந்தித்துள்ளது.

Recommended For You

வெள்ளி ஒரு ஆபரணமாக மட்டுமல்ல தொழில்துறை ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மின்சார வாகனம், சோலார் பேனல், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல முக்கிய தொழில்துறைகளிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதனால் வெள்ளி விலை வேகமாக ஏறி இறங்கும் தன்மை கொண்டதாக மாறியுள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வெள்ளிக்கான டிமாண்ட் குறைந்துவிட்டது. இன்னும் சில காலம் வெள்ளி விலை ஒரு அளவிலேயே ஏறி இறங்கி என கணிக்கும் நிபுணர்கள், தற்போதைக்கு வெள்ளி முதலீட்டை தவிர்க்கலாம் என யோசனை தெரிவிக்கின்றனர். வெள்ளி விலை குறைந்துள்ளதே என உடனே முதலீட்டு வாய்ப்பு என கருதி பணத்தை போட வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+