காலையில் எழுந்து அவசர அவசரமாக அலுவலகம் ஓட வேண்டியதில்லை. யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டின் ஒரு சிறிய அறையை உங்கள் அலுவலகமாக மாற்றி, மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டுவது என்பது இப்போது வெறும் கனவு மட்டுமல்ல, பலரின் லட்சியம் என்று கூட சொல்லலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில், பெரிய முதலீடு இருந்தால் தான் தொழில் தொடங்க முடியும் என்ற காலம் மறைந்துவிட்டது. ஸ்மார்ட்போனும், சரியான ஒரு ஐடியாவும் இருந்தால் போதும், நீங்கள் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆகலாம். குறிப்பாக பெண்கள், மாணவர்கள் மற்றும் பகுதிநேர வருமானம் தேடுபவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.

பலர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்த துறையில், நீங்கள் எப்படி ஒரு சிறிய முதலீட்டில் தொடங்கி, சில மாதங்களிலேயே லட்சங்களை தொடப்போகிறீர்கள்? அந்த சீக்ரெட் பிசினஸ் ஐடியா என்ன? அதை எப்படி சரியாக திட்டமிட வேண்டும்? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் அந்த தருணம் எது? அப்படி என்னென்ன தொழில் செய்யலாம் என தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஓட்டப்பந்தயத்தில் எல்லோரும் ஜெயிக்க வேண்டும் என்று தான் ஓடுகிறோம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே முதல் சில இடங்களில் வருகின்றனர். பலரும் பாதியிலேயே நின்று விடுகின்றனர். சிலர் நம்மால் எல்லாம் எல்லாம் ஓடவே முடியாது என கலந்து கொள்வதே இல்லை. ஓட முடியுமா என்பதை முயற்சி செய்து பார்த்தால் தானே முடியும். அப்படியே ஒரிரு முறை தோற்றாலும், விடா முயற்சி எடுத்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். அப்படித் தான் ஒரு வணிகமும்.
இன்றைய காலத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சம்பாதிக்க பல ஆயிரம் வழிகள் உள்ளன. ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது, யாரை அணுகுவது என்ற குழப்பத்திலேயே பாதிபேர் இருந்து விடுகின்றனர். நீங்கள் செய்யும் வேலைகளில் சவால்கள் இல்லையா, கொஞ்சம் ஏமாந்தால் அடுத்தவர் உங்களிடத்தை தட்டி பறிக்க காத்துக் கொண்டிருக்கலாம். அதுபோலத் தான் தொழிலும்.
குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழிலில் அதிக வருமானம் ஈட்ட முடியும். சொல்லப்போனால் ஒரு வருடத்தில் பல லட்சங்கள் ஈட்ட முடியும். இன்றைய காலத்தில் கெமிக்கல் இல்லாத இயற்கை உணவுகள் மீதான ஆர்வம் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. அப்படி இருக்கையில் ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை முறையில் செய்யும் தயாரிக்கும் மண் புழு உரங்கள் தயாரிக்கும் தொழிலை தொடங்குவதன் மூலம் உங்களால் சிறந்த லாபத்தை ஈட்ட முடியும். ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரங்களின் தேவை அதிகரித்து வருவது, ஒரு நிலையான வருமானம் தரும் தொழிலாக மாறலாம்.
ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்றாலே, பலரும் முதலீடு மற்றும் விலை உயர்ந்த இயந்திரங்களை நினைத்து பயந்து ஒதுங்குவதுண்டு. பெரிய தொழிற்சாலைகள், கடினமான உபகரணங்கள் மற்றும் அதன் அதீத செலவுகளை நினைத்து அவர்கள் தயங்குகிறார்கள். ஆனால், மண்புழு உரம் (Vermicompost) தயாரிப்பு என்பது முற்றிலும் மாறுபட்டது.
இதை தொடங்க உங்களுக்கு எந்தவிதமான விலை உயர்ந்த இயந்திரங்களோ அல்லது பிரம்மாண்டமான உட்கட்டமைப்போ தேவையில்லை. இது முழுக்க முழுக்க இயற்கையான ஒரு செயல்முறை, யார் வேண்டுமானாலும் எளிதாக செய்ய முடியும்.இன்றைய மக்கள் ரசாயனம் இல்லாத இயற்கை காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கூடுதல் விலை கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இதனால், நீங்கள் தயாரிக்கும் உரத்தை விற்பனை செய்வதற்கு, நீங்கள் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. உள்ளூர் விவசாயிகள், செடி வளர்ப்பு மையங்கள் மற்றும் தோட்டக்கலை அங்காடிகளை நீங்கள் எளிதாக அணுகலாம்.
குறிப்பாக, நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது வீட்டின் மொட்டை மாடிகளில் மாடித் தோட்டம் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மண்புழு உரத்திற்கு மிகப்பெரிய தேவை உள்ளது. நிபுணர்களின் கருத்துப்படி, நீங்கள் ஒரு தொழில்முறை ரீதியாக 20 உரம் தயாரிக்கும் படுக்கைகளுடன் இந்த தொழிலை தொடங்கினால், வெறும் இரண்டே ஆண்டுகளில் உங்கள் ஆண்டு வருமானம் 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புண்டு. இதற்காக நீங்கள் ஆரம்பத்தில் பல லட்சம் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆர்வமும், உழைக்க கூடிய திறமையும் இருந்தால் போதும். ஒரு நாள் நிச்சயம் ஜெயிக்க முடியும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications