தங்கம் விலை உயர்வு தங்கத்தில் முதலீடு செய்த பலருக்கும் பெரிய அளவிலான லாபத்தை ஈட்டி தந்து இருக்கிறது. குறிப்பாக தங்க பத்திர திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் தாங்கள் செய்த முதலீட்டை விட பல மடங்கு லாபமாக திரும்ப பெற்றுள்ளனர் .
கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தியாவில் தங்க பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி ஆண்டுக்கு நான்கு முறை இந்திய ரிசர்வ் வங்கியானது தங்க பத்திரங்களை வெளியிடும். ரிசர்வ் வங்கி ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு அதாவது ஒரு கிராமுக்கு இவ்வளவு என மதிப்பீடு செய்து தங்க பத்திரத்தை வெளியிடும். பொதுமக்கள் அந்த தங்க பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம் . எட்டு ஆண்டுகளுக்கு பின் அந்த தங்க பத்திரம் முதிர்வடையும் . அந்த சமயத்தில் அன்றைய நாளில் தங்கத்தின் விலை என்னவோ அந்த பணத்தை நமக்கு திரும்பத் தந்து விடுவார்கள் .

இது மட்டுமில்லாமல் தங்க பத்திரத்தில் நாம் செய்த முதலீடுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியும் வழங்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தற்போது தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது . இது தங்க பத்திர திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தை குவித்து இருக்கிறது. 2017 2018 ஆம் நிதி ஆண்டில் மூன்றாவது கட்ட தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் செய்தவர்களின் தங்க பத்திரங்கள் அக்டோபர் 16ஆம் தேதி ஆன இன்று முதிர்வு பெற்று இருக்கின்றன.
இந்த முதலீட்டாளர்களுக்கு எல்லாம் ஒரு கிராம் தங்கத்திற்கு எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் என்ற தகவலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது . இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைப்படி 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட தங்க பத்திர திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் இன்று முதல் அவர்களின் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளலாம். ஒரு யூனிட் அதாவது ஒரு கிராமுக்கு 12,567 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த தங்க பத்திர திட்டத்தில் ஒரு கிராமை 2866 ரூபாய்க்கு வாங்கியவர்களுக்கு இன்று 12,567 ரூபாயாக அது திரும்ப கிடைத்திருக்கிறது . அப்படி என்றால் அவர்கள் செய்த முதலீடை விட கூடுதலாக 9,701 ரூபாய் சதவீத அடிப்படையில் பார்க்கும்போது 338% லாபம் கிடைத்திருக்கிறது. இது தவிர அவர்களுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைத்திருக்கிறது . எனவே தங்க பத்திர திட்டங்களில் முதலீடு செய்த அனைவருமே தற்போது மிகப்பெரிய லாபத்தை ஈட்டி உள்ளனர். நீங்கள் முதலீடு செய்த அந்த கிராம்களுக்கு நிகரான தொகை உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.


Click it and Unblock the Notifications