தங்கத்தில் செய்யக்கூடிய முதலீடு எப்போதுமே வீணாகாது என்பதற்கு உதாரணமாக தான் உலக அளவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்வு என்பது அமைந்திருக்கிறது. நீண்ட காலமாக தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் லாபம் பெற்று இருக்கிறார்கள்.
அந்த வகையில் பிரபல முதலீட்டாளர் சங்கர் சர்மா 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் வழங்கிய ஒரு அறிவுரை தன்னுடைய வீட்டில் பாதுகாவலராகவும் உதவியாளராகவும் வேலை பார்த்தவரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைத்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

சங்கர் சர்மா அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் எல்லாம் ன் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என முன்கூட்டியே கணித்து முதலீடு செய்து வெற்றி பெற்றவர். 100 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட போர்ட்போலியோவுக்கு உரிமையாளராக இருந்து வருகிறார் . பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் இவர்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய வீட்டு உதவியாளர் தேஜி என்பவருக்கும் பாதுகாவலர் யாதவ் என்பவருக்கும் ஒரு அறிவுரை வழங்கினார் . அந்த அறிவுரை தான் தற்போது அவர்களை மும்பையில் வீட்டு ஓனர்களாக மாற்றி இருக்கிறதாம். அதாவது பங்குச்சந்தை பக்கமே போகாதீர்கள், மாதம் தோறும் கிடைக்கும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் , ஆண்டு தோறும் கிடைக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்யுங்கள் , இதுதான் அவர்களுக்கு வழங்கிய அறிவுரை . அந்த அறிவுரை தான் தற்போது அவர்களுக்கு பெரிய லாபம் ஈட்டி தந்து இருக்கிறது என கூறுகிறார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் சங்கர் சர்மா என் அறிவுரை கேட்டு தங்கம் நிலத்தில் முதலீடு செய்தார்கள் இன்று அதில் ஒரு பகுதியை விற்று பணமாக்கி சொந்தமாக மும்பையில் 2 படுக்கை அறை கொண்ட குடியிருப்பை வாங்கி இருக்கிறார்கள் என கூறியுள்ளார். இவர்களுக்கு பெரிய அளவில் நிதி சார்ந்த பேசக்கூடிய எந்த விஷயங்களும் தெரியாது , ஆர்பிஐ கவர்னர் கூட யாரென தெரியாது. ஆனால் நான் கூறிய ஒரு அறிவுரையை சரியாக பின்பற்றினார்கள் தற்போது அதை கொண்டு வீடே வாங்கி விட்டனர் என தெரிவித்திருக்கிறார்.
அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது . அவர்கள் புதிதாக வாங்கிய இரண்டு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் வீடியோவையும் அவர் பதிவு செய்திருக்கிறார் .கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலை என்பது பல மடங்கு உயர்ந்திருக்கிறது 2004 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் 6000 ரூபாயாக தான் இருந்தது ஆனால் தற்போது ஒரு லட்சம் ரூபாயை கடந்து விற்பனை செய்கிறது.


Click it and Unblock the Notifications