மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கு இரண்டு விஷயங்களில் வரி விதிக்கப்படும். நீங்கள் பெறும் ஈவுத்தொகை (டிவிடெண்ட்) மற்றும் மூலதன ஆதாயம் ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படும். மியூச்சுவல் பண்ட் திட்டத்தை பொறுத்து வரி விதிப்பில் மாற்றம் இருக்கும். அதாவது பங்கா அல்லது கடனா அல்லது ஹைபிரிட் பண்டா என்பதை பொறுத்து வரி விதிப்பில் மாற்றம் உள்ளது. அதேசமயம், 2024 பட்ஜெட்டுக்கு பிறகு வரி விதிப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது அதை பார்ப்போம்.
பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளுக்கு வரி விதிப்பு
பங்குச் சார்ந்த மியூச்சுவல் பண்ட் யூனிட்கள் விற்கப்படும்போது மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். மூலதன ஆதாயங்கள் நீண்ட கால மற்றும் குறுகிய கால ஆதாயங்கள் என 2 வகை உள்ளன. யூனிட்டை 12 மாதங்களுக்குள் விற்பனை செய்தால் அது குறுகிய கால ஆதாயமாகவும், 1 ஆண்டுக்கு மேல் வைத்திருந்தால் அது நீண்ட கால ஆதாயம் எனவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 2024 பட்ஜெட்டுக்கு பிறகு மூலதன ஆதாயங்கள் மீதான வரி விதிப்பு மாறி விட்டது.

2024 பட்ஜெட்டுக்கு முன்பு
நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கு 15 சதவீதம் வரி விதிப்பு.
2024 பட்ஜெட்டுக்கு பிறகு
நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான வரி 12.5 சதவீதமாக அதிகரிப்பு.
குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கான வரி 20 சதவீதமாக உயர்வு.
ஹைபிரிட் மியூச்சுவல் பண்டுகளுக்கு வரி விதிப்பு
பங்கு மற்றும் கடனில் கலந்து முதலீடு செய்வது ஹைபிரிட் மியூச்சுவல் பண்ட். பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளுக்கு வரி விதிப்பது போல் இதற்கும் மூலதன ஆதாயங்கள் வரி விதிக்கப்படுகிறது. அதேசமயம், யூனிட்டை 36 மாதங்களுக்குள் விற்பனை செய்தால் அது குறுகிய கால ஆதாயமாகவும், 3 ஆண்டுக்கு மேல் வைத்திருந்தால் அது நீண்ட கால ஆதாயம் எனவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 2024 பட்ஜெட்டுக்கு பிறகு, வைத்திருக்கும் காலமும், மூலதன ஆதாயங்கள் மீதான வரி விதிப்பும் மாறி விட்டது.
2024 பட்ஜெட்டுக்கு முன்பு
நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கு உஙகள் வருமான வரி அடுக்கு வரி விதிக்கப்பட்டது.
2024 பட்ஜெட்டுக்கு பிறகு
நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான வரி 12.5 சதவீதமாக அதிகரிப்பு. வைத்திருக்கும் காலம் 24 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும். சரி செய்தல் பலன் கிடையாது.
குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கான வரி உங்கள் வருமான வரி அடுக்கின்படி வரி விதிக்கப்படும். மேலும் வைத்திருக்கும் காலம் 24 மாதங்களுக்கும் குறைவானது.
சரிசெய்தல் சலுகைகள் நீக்கப்பட்டதால், ஹைபிரிட் மியூச்சுவல் பண்டுகள் சற்று குறைந்த வரி செயல்திறனை வழங்கக்கூடும். இருப்பினும் பங்கு மற்றும் கடனுக்கு இடையில் சமநிலையை தேடும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பொருத்தமான தேர்வாகவே இது இருக்கிறது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications