இன்றைய காலகட்டத்தில் பங்கு சந்தை முதலீடு என்றாலே பயந்து ஓடும் நிலையிலேயே உள்ளனர். ஏனெனில் இதில் முதலீடு செய்யும் பலரும் நஷ்டத்தினையே காண்கின்றனர்.
இதனாலேயே பலரும் இதனை சூதாட்டம் என்றே கூறுகின்றனர். ஆனால் நிச்சயம் இது உண்மையல்ல.
சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான ஒரு விஷயம் தான். ஆக நாம் எங்கே நுழைவது? எப்படி வெளி வருவது என்பதனை தெரிந்து கொண்டால் நீங்கள் தான் வெற்றியாளர்.
பங்கு சந்தை முதலீட்டாளர்
இது குறித்து பங்கு சந்தை முதலீட்டாளர் ஒருவர், ஒரு நிறுவனத்தின் வருமானமும், இலாபமும் உயரும் போது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பும் உயரும். ஆக அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு நிறுவனத்தின் பங்கு விலை ஏற்ற இறக்கம் காணலாம். பங்கு சந்தையில் நீண்டகால முதலீடு நீங்கள் நிலத்தில் முதலீடு செய்வதற்கு இணையானது. ஆக இங்கே சூதாட்டம் என்பது கிடையாது.
ஓரளவு கணிப்பு
நிலத்தின் மதிப்பீடு அந்த நிலத்தின் தேவையை பொறுத்து கூடவோ குறையவோ செய்யும். நிலத்தின் தேவை அதை சுற்றி ஏற்படும் வளர்ச்சியை சார்ந்தது. ஆக எந்த நேரத்தில் எந்த ஏரியா எவ்வளவு வளர்ச்சியுறும் என்பதை ஓரளவு கணிக்க முடியுமே தவிர 100 % உறுதியாக கூற இயலாது. அப்படி தான் பங்கு சந்தையும்.
நிபுணர்கள் துணையுடன் முதலீடு
எந்த வித அடிப்படையும் இல்லாமல் பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்களை வைத்து பங்குகள் வாங்கும் போது அது சூதாட்டமாக தோற்றமளிக்கலாம், ஆனால் உண்மை அதுவல்ல. ஆக உண்மையை தெரிந்து கொண்டு, நிபுணர்களின் உதவியுடன் முதலீடு செய்வது நல்லது. அந்த வகையில் நிபுணர்கள் பரிந்துரைத்த மூன்று பங்குகளை பார்க்க விருக்கிறோம்.
பங்கு பரிந்துரை
ஒன்று எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ், இதன் இலக்கு விலை 1,830 ரூபாயாக கணித்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 1,650 ரூபாய்கும். இந்த பங்கின் தற்போதைய விலை 1,685.90 ரூபாயாகும்.
இதே இரண்டாவது பங்கு பிவிஆர் ஆகும். மிட் கேப் பங்கான இது, கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கின் இலக்கானது 1,453 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இதன் தற்போதைய பங்கு விலை 1298.30 ரூபாயாகும்.
இதே மூன்றாவது பங்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது டைட்டன் பங்கு. இதன் இலக்கு விலையாக 1340 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய விலை நிலவரம் 1279.65 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications