சென்னை: தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள் தங்க நகைகளாக வாங்காமல் கோல்டு ஈடிஎஃப்களில் ( Gold ETF) முதலீடு செய்தால் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம் என நிதித்துறை சார்ந்த மற்றும் முதலீடு சார்ந்த நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
அதாவது தங்கத்தை நாம் நகையாக வாங்கும் போது அதற்கு செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவற்றை வழங்குகிறோம். முதலீடாக தங்கம் வாங்க வேண்டும் என்றால் நகையாக வாங்குவோருக்கு செய்கூலி சேதாரம் கூடுதல் சுமை. எனவே அதற்கு பதிலாக கோல்டு ஈடிஎஃப்களாக வாங்கலாம் என கூறுகின்றனர். இவ்வாறு கோல்டு ஈடிஎஃப்-இல் முதலீடு செய்யும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதிக சந்தை மூலதன மதிப்பு: இந்தியாவில் நிப்பான், ஐசிஐசிஐ, எஸ்பிஐ போன்ற பல்வேறு நிறுவனங்கள் கோல்டு ஈடிஎஃப்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகளை வழங்குகின்றன. முதலில் அதிகபட்ச சந்தை மூலதனம் கொண்ட ஈடிஎஃப் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அதிகபட்ச சந்தை மூலதனம் கொண்ட கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யும் போது நாம் நமக்குத் தேவையான நேரத்தில் உடனடியாக அதனை விற்று திரும்ப பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.
அதாவது அதிக சந்தை மூலதனம் கொண்ட ஒரு நிதி எனும் போது அதனை வாங்குவதற்கு எப்பொழுதுமே சந்தையில் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். எனவே நாம் முதலீடு செய்யக்கூடிய கோல்ட் ஈடிஎஃப்பின் சந்தை மூலதனம் எவ்வளவு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
குறைந்த டிராக்கிங் எரர்: குறைந்தபட்ச டிராக்கிங் எரர் கொண்ட ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக தங்கம் 10% வருமானம் தந்திருக்கிறது அதுவே நீங்கள் வாங்கிய ஈடிஎஃப்பும் 10% வருமானம் தந்திருக்க வேண்டும். ஆனால் சில ஈடிஎஃப்கள் 9% அல்லது அதற்கும் கீழ் வருமானம் தந்திருக்கும். இதை தான் டிராக்கிங் எரர் என அழைக்கிறார்கள். எனவே டிராக்கிங் எரர் விகிதம் குறைவாக இருந்தால் அது நமக்கு தங்கத்துக்கு நிகரான வருமானத்தை கொடுக்கும் ஈடிஎஃப் ஆகும்.
எக்ஸ்பென்ஸ் ரேஷியோ: மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே ஈடிஎஃப் திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட நிறுவன திட்டத்தை தேர்வு தேர்ந்தெடுத்து நாம் முதலீடு செய்யும்போது அவர்கள் அதனை நிர்வகிக்க குறிப்பிட்ட சதவீதத்தை எக்ஸ்பென்ஸ் ரேஷியோவாக எடுத்துக் கொள்வார்கள். எந்த நிறுவனம் குறைந்த அளவு எக்ஸ்பென்ஸ் ரேஷியோ வைத்திருக்கிறதோ அந்த நிறுவனத்தை தேர்வு செய்து முதலீடு செய்வது சிறந்தது.
தங்கம் காலா காலத்துக்கு பாதுகாப்பான முதலீடு. நாம் பாரம்பரியமாக தங்கத்தை நகை, நாணயம் மற்றும் பார்களாக வாங்கி சேமித்தோம், அதுவே தற்போது exchange traded fund என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களால் ஈடிஎஃப்களாக கிடைக்கின்றன. பலரும் தற்போது அந்த முதலீட்டை நோக்கி நகர்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் சரியான திட்டத்தை தேர்வு செய்தால் லாபம் கணிசமாக கிடைக்கும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications