ஒவ்வொரு திருமணமான பெண்களுக்கும் தெரியும் தங்க நகை என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல. அது பல உணர்வுகளுடன் கலந்த ஒரு விலை உயர்ந்த உலோகம். அப்பாவோட பல வருட உழைப்பு, அம்மாவோட தாலிப் பொட்டு, தன் பொண்ணோட கல்யாண கனவு.. இப்படி ஏராளமான உணர்ச்சிகரமான காரணிகள் இருக்கும். அப்படி நம் ரத்தமும் சதையுமான சேமிப்பை, பேங்க் லாக்கரில் இருக்கு, அங்க திருடன் வரமாட்டான் என்கிற ஒற்றை நம்பிக்கையில் கொண்டு போய் வைக்கிறோம். ஆனால் அதுவும் முழு பாதுகாப்பானதா? என்றால் நிச்சயம் இல்லை.

ஒருவேளை அந்த வங்கி லாக்கருக்கே ஏதேனும் ஆபத்து நேர்ந்தால்? நிலநடுக்கமோ, எதிர்பாராத விபத்தோ ஏற்பட்டால் என்னவாகும்? திருட்டு போனால், நாங்க வெறும் 100 மடங்கு வாடகையை மட்டும் தான் தருவோம் என்று வங்கி கை விரிக்கும் போது, நம் வாழ்நாள் உழைப்பு வெறும் காகித இழப்பீடாக மாறுவதை யாரால் தாங்க முடியும்? உதாரணத்திற்கு உங்களுடைய வங்கி லாக்கரின் வாடகை 4,000 ரூபாய் என வைத்துக் கொள்வோம். ஆனால் நீங்கள் வாடகை செலுத்தும் லாக்கரில் உள்ள உங்கள் 40 லட்ச ரூபாய் கனவுகளுக்கு, வங்கி தரும் 4 லட்ச ரூபாய் ஆறுதலாகுமா? நம் சென்டிமென்ட்டையும், வியர்வை சிந்தி சேர்த்த சொத்தையும் உண்மையிலேயே இரும்பு பெட்டி மட்டும் பாதுகாத்து விடுமா? வெறும் பூட்டுகளை தாண்டி, உங்கள் தங்கத்திற்கு உண்மையான பாதுகாப்பு கவசம் எது? அந்த கசப்பான உண்மைகளையும், அதைச் சரி செய்யும் வழிகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதுவே உங்கள் வாழ்நாள் சேமிப்பை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
அதிலும் தற்போதைய காலகட்டத்தில் ஒரு சவரன் தங்கம் விலையானது லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் 4 சவரன் லாக்கரின் வைத்திருந்தாலே அதன் மதிப்பு 5 லட்சத்தை தாண்டி விடும். ஆக அப்படி இருக்கையில் வெறும் 4 சவரன் நகைக்கு 4,000 ரூபாய் வாடகை கொடுத்தாலும் பாதுகாப்பு முழுமையாக இல்லை எனும் போது அது சரியான பாதுகாப்பு அம்சம் அல்ல என்பதே மறுக்க முடியாத உண்மை.
அதற்கு பருத்தி மூட்டை குடவுனிலேயே இருக்கலாமோ என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. உங்கள் தங்கத்திற்கு பாதுகாப்பு வெறும் பூட்டும், வங்கி சிசிடிவி கேமராவும் என்றால், அதை வீட்டிலேயே வைத்து விடலாமே. ஏனெனில் வங்கி லாக்கரில் வைத்திருக்கும் நகைக்கு இன்சூரன்ஸ்-ம் கிடையாது. மேலும் உங்கள் லாக்கரில் உள்ள தங்கம் காணாமல் போனால், வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் கட்டணத்தை போல் 100 மடங்கு அபராதம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு 5,000 ரூபாய் வாடகை என்றால், 5 லட்சம் மட்டுமே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். ஆனால் உங்கள் லாக்கரில் உள்ள நகையின் மதிப்பு 10 லட்சம் ரூபாயாக இருந்தால், மீதம் 5 லட்சம் நஷ்டம் தானே.
RBI நிபந்தனைகளில் ஒன்று, லாக்கருக்குள் வாடிக்கையாளர் என்ன பொருட்களை வைத்துள்ளார் அல்லது எவற்றை எடுத்துள்ளார் என்பது குறித்து வங்கிகள் எந்த பதிவுகளையும் வைத்திருக்க கூடாது. ஆக லாக்கருக்குள் இருக்கும் நகைகள் அல்லது ஆவணங்களின் மதிப்பு வாடிக்கையாளருக்கு மட்டுமே தெரியும். உள்ளே என்ன இருக்கிறது என்பதே தெரியாத நிலையில், அதற்கு வங்கியால் இன்சூரன்ஸ்-ம் வழங்க முடியாத நிலை உள்ளது. ஆக நீங்கள் வீட்டிலேயே நகையை வைத்திருந்தாலும் அல்லது வங்கி லாக்கரில் இருந்தாலும், நகைக்கான இன்சூரன்ஸ் போட்டு வைக்கலாம். இதுவும் கட்டாயம் ஆபரணமாக வாங்குபவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
மாறாக முதலீட்டு ரீதியாக வாங்குபவர்கள் இடிஎஃப் அல்லது மியூச்சுவல் போன்ற டிஜிட்டல் வடிவில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் பல செலவுகளும் மிச்சம். பாதுகாப்பும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக சந்தை விலையில் வாங்கி கொள்ளவும் முடியும். விற்பனை செய்து கொள்ளவும் முடியும். தரம் பற்றிய கவலையும் இல்லை. எளிதாக பணமாகவும் மாற்றி கொள்ள முடியும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications
