இந்தியாவின் முன்னணி தனியார் நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் அதன் சிறப்பு டெபாசிட் திட்டமான சபையர் டெபாசிட் திட்டமானது அக்டோபர் 14, 2022 அன்று தொடங்கியது.
இது 45 மாதம் கால அவகாசத்தினை கொண்ட ஒரு பிக்சட் டெபாசிட் திட்டமாகும்.
இந்த திட்டத்தினை இந்த நிறுவனம் அதன் 45 ஆவது ஆண்டு விழா திட்டத்தில் அறிமுகப்படுத்தியது.
சிறப்பு டெபாசிட் திட்டம்
இத சிறப்பு டெபாசிட் திட்டத்தில் 2 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை தனி நபர் முதல் அறக்கட்டளைகள் வரையில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு திட்டமானது அக்டோபர் 31, 2022 வரையில் செல்லும் என்றும் அறிவித்துள்ளது.
வட்டி விகிதம்
இந்த திட்டத்தில் டெபாசிட்தாரர்கள் 7.50% வரையில் வட்டி விகிதத்தினை பெறலாம் என அறிவித்துள்ளது. இது பணவீக்கத்திற்கு மேலாக வருமானமாக இருப்பதால், டெபாசிட்தாரர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த சபையர் திட்டம் காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டு, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது மாதம் வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் அதற்கேற்ப டெபாசிட் செய்து கொள்ளலாம்.
மற்ற திட்டங்கள்?
இதில் மாத வருமான திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.25% ஆகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 40,000 ரூபாய் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
காலாண்டு திட்டத்தில் வட்டி விகிதம் 7.30% ஆகும். இதில் குறைந்தபட்ச டெபாசிட் தொகை 20,000 ரூபாயாகும்.
அரையாண்டுக்கான வட்டி விகிதம் 7.35% ஆகும். இதற்காக குறைந்தபட்ச டெபாசிட் தொகை 20,000 ரூபாயாகும்.
வருடாந்திர வருமானத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.50% ஆகும். இதற்கான குறைந்தபட்ச டெபாசிட் தொகை 20,000 ரூபாயாகும்.
எவ்வளவு வருமானம்?
சாதாரணமாக ஹெச்டிஎஃப்சி தற்போது ரெகுலர் டெபாசிட்களுக்கு 6.15% முதல் 6.85% வரையில் வட்டி விகிதத்தினை வழங்குகிறது. இதே மாத வருமான திட்டத்தில் 6.20% முதல் 6.90% வரையிலும், இதே காலாண்டு திட்டத்தில் 6.25% முதல் 6.95 வரையிலும், அரையாண்டு திட்டத்தில் 6.65% முதல் 7.05 வட்டி விகிதத்தினையும், ஆண்டு திட்டத்தில் 6.35% முதல் 7.05 வரையிலும் வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் 12 மாதங்கள் முதல் 120 மாதங்களில் முதிர்வடைகிறது. இந்த திட்டம் செப்டம்பர் 30, 2022 முதலான டெபாசிட்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேட்டிங்ஸ் எப்படி?
கிரிசில், இக்ரா உள்ளிட்ட ரேட்டிங் நிறுவனங்கள் ஹெச்டிஎஃப்சியின் டெபாசிட் திட்டங்களுக்கு 28 ஆண்டுகளாக AAA ரேட்டிங்கினை வழங்கி வருகின்றன. இதற்காக இந்தியா முழுவதும் பரவியுள்ள 420 ஒன்றோடென்று இணைக்கப்பட்ட அலுவலகங்கள் அதனை வைப்பாளர்களுக்கு சேவை செய்கின்றன. 77 டெபாசிட் மையங்கள் உடனடி சேவையினை வழங்கி வருகின்றன. தொடர்ந்து பல தசாப்தங்களாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளார்களை கொண்டுள்ளது.
வயதானவர்களுக்கு என்ன சலுகை?
ஹெச்டிஎஃப்சி-யின் இந்த டெபாசிட் திட்டங்கள் 12 - 120 மாதங்கள் முதிர்வு காலத்தினை கொண்டுள்ளன. இந்த திட்டத்தினை இந்திய குடிமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தேர்தெடுக்கும் திட்டத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. இந்த திட்டங்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு 0.25% கூடுதலாக வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications