இந்தியாவில் அரசு சார்பில் பல சேமிப்பு திட்டங்கள் பல நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு திட்டமும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருக்கின்றன. திட்டத்துக்கான தகுதி, டெபாசிட் வரம்பு, வட்டி வகிதம், முதிர்ச்சி காலம் என உள்ளன. மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டங்கள் மூத்த குடிமகன்கள், பெண்கள், விவசாயிகள், வேலை செய்யும் தனிநபர்கள் என பல்வேறு குழுவினருக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசின் டாப் 10 சேமிப்பு திட்டங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை வங்கிகள் அல்லது போஸ்ட் ஆபிஸ்களில் இருந்து பெறலாம்.

1. தேசிய சேமிப்பு திட்டம்
- தனி நபர் கணக்கு எனில் ரூ.1000 முதல் ரூ.9 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம், கூட்டு கணக்கு எனில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்
- முதிர்ச்சி காலம்- 5 ஆண்டுகள்
- முன்கூட்டியே திரும்ப பெறலாம். இதில் சில கட்டணம் பிடிப்புகள் இருக்கலாம்.
- வட்டி விகிதம்- 7.4 சதவீதம்
2. தேசிய சேமிப்பு டைம் டெபாசிட் திட்டம்
- முதலீட்டு காலம் - 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு
- குறைந்தபட்ச டெபாசிட்- ரூ.1000
- அதிகபட்ச டெபாசிட்- வரம்பு இல்லை
- வட்டி விகிதம்- மூன்று மாதத்துக்கு 6.9 சதவீதம், 1 ஆண்டுக்கு 7 சதவீதம், 3 ஆண்டுக்கு 7 சதவீதம், 5 ஆண்டுக்கு 7.5 சதவீதம்
3. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
- டெபாசிட்- ரூ.1000 முதல் 30 லட்சம் வரை
- தகுதி- 60 வயதுக்கு மேல் அல்லது ஓய்வு பெற்றவர்களுக்கு 55 வயது
- முதிர்ச்சி காலம்- 5 ஆண்டுகள்
- வட்டி விகிதம்- 8.2 சதவீதம்
4. தேசிய சேமிப்பு சான்றிதழ்
- குறைந்தபட்ச டெபாசிட்- ரூ.1000
- முதிர்ச்சி காலம் - 5 ஆண்டுகள்
- கூட்டு அக்கவுன்ட்- பல வகைகள் உள்ளன
- வட்டி விகிதம்- 7.7 சதவீதம்
என் பில் என் அதிகாரம்.. 1 கோடி ரூபாய் பரிசு வெல்ல மோடி அரசு கொடுக்கும் வாய்ப்பு..!
5. பப்ளிக் பிராவிடண்ட் பண்டு திட்டம்
- டெபாசிட்- ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.1,50,000 வரை
- முதிர்ச்சி காலம்- 15 ஆண்டுகள்
- எக்ஸ்டென்ஷன்- 5 ஆண்டுகளுக்கு ஒரு பிளாக்
- வட்டி விகிதம்- 7.1 சதவீதம்
6.சுகன்யா சம்ரித்தி அக்கவுன்ட்
- டெபாசிட்- ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை
- அக்கவுன்ட் திறப்பு- 10 வயதுக்கு குறைந்த சிறுமிகள்
- முதிர்ச்சி காலம்- 21 ஆண்டுகள்
- வட்டி விகிதம்- 8 சதவீதம்
7. மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்
- டெபாசிட்- ரூ.2 லட்சம் வரை
- முதிர்ச்சி காலம்- 2 ஆண்டுகள்
- வட்டி விகிதம்- 7.5 சதவீதம்
8. கிஸான் விகாஸ் பத்திரம்
- குறைந்தபட்ச டெபாசிட்- ரூ.1000
- முதிர்ச்சி காலம்- பணம் இரட்டிப்பாகும்
- மாற்றக்கூடியது- தனிநபர்களுக்கும் தபால் நிலையங்களுக்கும்
- வட்டி விகிதம்- 7.5 சதவீதம்
9. ரெக்கரிங் டெபாசிட் அக்கவுன்ட் திட்டம்
- குறைந்தபட்ச டெபாசிட்- மாதம் ரூ.100
- முதிர்ச்சி- 5 ஆண்டுகள்
- வட்டி விகிதம்- 5 ஆண்டுகள் ரெக்கரிங் டெபாசிட்டுக்கு 6.5 சதவீதம்
10. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு
- குறைந்தபட்ச டெபாசிட்- ரூ.500
- அதிகபட்ச டெபாசிட்- வரம்பு இல்லை
- வட்டி விகிதம்- 4 சதவீதம்
இந்த அரசு திட்டங்கள் பாதுகாப்பான வழியில் உங்களது எதிர்கால தேவைக்கான சேமிப்பை வழங்குகின்றன. உங்களது நிதி தேவை மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து உங்களுக்கு சிறந்தது எனப் படும் திட்டங்களை தேர்வு செய்யலாம். டெபாசிட் தொகை, முதிர்ச்சி காலம், வட்டி விகிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு முடிவெடுங்கள்.


Click it and Unblock the Notifications