மும்பை: மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள் நீண்ட கால முதலீட்டு வகையில் சிறந்த லாபத்தை தரக்கூடியவை. பலருக்கும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கான பங்குகளை எப்படி தேர்வு செய்வது எதில் முதலீடு செய்வது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம் அல்லது அதற்காக நேரம் ஒதுக்க தயாராக இல்லாமல் இருக்கலாம்.
அப்படி நேரடியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாதவர்கள் பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபண்டுகள் வாயிலாக முதலீடுகள் செய்ய முடியும் அப்படி அண்மை காலமாக இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

புதிய நிதியாண்டு தொடங்கி இருக்கும் நிலையில் கடந்த நிதியாண்டில் முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை தந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்: பெரும்பாலும் சிறிய நிறுவனங்களில் அதாவது ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 50 % லாபத்தை தந்துள்ளன. குறிப்பாக:
பந்தன் ஸ்மால் கேப் ஃபண்டு - 69.54% லாபம்
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டு - 66.51% லாபம்
மகேந்திரா மனுலைஃப் ஸ்மால் கேப் ஃபண்டு - 65.84% லாபம்
ஐடிஐ ஸ்மால் கேப் ஃபண்டு - 62.71% லாபம்
இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்டு - 53.24% லாபம்
ஃபிராங்கிளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனிஸ் ஃபண்டு - 52.90% லாபம்
மிட் கேப் ஃபண்டுகள்: பெரும்பாலும் மிட் கேப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகள் இவை. கடந்த ஓராண்டில் இவை 56 முதல் 65% வரை லாபம் பெற்று தந்துள்ளன.
குவாண்ட் மிட் கேப் ஃபண்டு - 65.56 % லாபம்
ஐடிஐ மிட் கேப் ஃபண்டு - 62.70% லாபம்
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்டு - 60.37% லாபம்
மகேந்திரா மனுலைஃப் மிட் கேப் ஃபண்டு -59.61% லாபம்
ஹெச்டிஎஃப்சி மிட் - கேப் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்டு - 57.23% லாபம்
ஜே.எம். மிட் கேப் ஃபண்டு -56.98% லாபம்
லார்ஜ் கேப் ஃபண்டுகள்: சுமார் 80 சதவிகிதத்தை பெரு நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய ஃபண்டுகள் இவை. இவை 44% முதல் 52% வரை லாபம் தந்துள்ளன.
குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்டு - 52.38% லாபம்
பேங்க் ஆஃப் இந்தியா புளூசிப் ஃபண்டு - 47.74% லாபம்
ஜே.எம். லார்ஜ் கேப் ஃபண்டு - 45.42 % லாபம்
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு - 44.82% லாபம்
டாரஸ் லார்ஜ் கேப் ஃபண்டு - 44.04% லாபம்
story written by: Devika


Click it and Unblock the Notifications