இந்தியாவின் முதலீட்டு ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுபவர் விஜய் கேடியா. இவர் எடுக்கக்கூடிய முதலீட்டு முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் உற்று கவனிக்கப்படும் . சரியான நிறுவனங்களை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்து லாபம் பார்ப்பதில் விஜய் கேடியா வல்லவர்.
1,198 கோடி ரூபாயை சொத்து மதிப்பு கொண்டவராக விஜய் கேடியா இருக்கிறார். 19 வயதில் இருந்தே முதலீட்டு துறையில் கால்பதித்தவர். விஜய் கேடியாவை பொறுத்தவரை சந்தை நிலவரங்களை முறையாக ஆய்வு செய்து டிரெண்டுக்கு ஏற்ப முதலீடு செய்வதில் ஜாம்பவனாக இருக்கிறார். அந்த வகையில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை பயன்படுத்தி இந்த ஆண்டில் மட்டும் அவர் வெள்ளியில் முதலீடு செய்து தன்னுடைய பணத்தை இரட்டிப்பாக்கி இருக்கிறார்.

கோல்டு ஈடிஎஃப்களில் அவர் செய்த முதலீடு 12 மாதங்களில் அவருக்கு 100% லாபத்தை அள்ளித் தந்துள்ளது . உலக சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 61 டாலர்களை கடந்து விட்டது இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1.9 லட்சம் ரூபாயில் வர்த்தகமாகிறது. இந்நிலையில் ஈடி மார்க்கெட்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் விஜய் கேடியா, கடந்த ஆண்டு நான் சில்வர் ஈடிஎஃப்பில் முதலீடு செய்தேன் நான் வாங்கியதை விட தற்போது அதன் மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது எனக் கூறியிருக்கிறார்.
வெள்ளி தங்கத்தை விட சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில்லறை வர்த்தகத்தில் கூட வெள்ளியின் விலை வரலாற்று உச்சமாக ஒரு கிராம் 209 ரூபாய் என்றும், ஒரு கிலோ 2,09,000 ரூபாய் என்றும் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்கிறோம் என்றால் அதன் ஃபண்டமென்டல் , டெக்னிக்கல் பகுப்பாய்வு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
நிறுவனத்தின் லாபம் ,வளர்ச்சி விகிதம் , அவை செயல்படும் துறை உள்ளிட்டவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும். ஆனால் ஈடிஎஃப்களில் முதலீடு செய்வதற்கு எந்த ஒரு பெரிய ஆய்வும் தேவையில்லை. தற்போது வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது வருங்காலத்திலும் வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரிக்கும் . எனவே வெள்ளியின் விலை உயர தான் போகிறது இந்த ஒரு சிம்பிளான கான்செப்ட் பயன்படுத்தி விஜய் கேடியா தன்னுடைய பணத்தை இரட்டிப்பாக்கி இருக்கிறார் .இது முதலீட்டாளர்களுக்கு மிகச்சிறந்த ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.

சோலார் பேனல் ,மின்சார வாகனங்கள் ,எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட அனைத்திலுமே வெள்ளி முக்கியமான ஒரு உபகரணமாக பயன்படுத்தப்படுகிறது . எனவே வெள்ளியின் நுகர்வு அதிகரித்துவிட்டது ஆனால் அந்த அளவிற்கு வெள்ளி நமக்கு சப்ளை கிடையாது. இதுதான் வெள்ளியின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் . உலக அளவில் சில்வர் ஈடிஎஃப்களில் செய்யப்படும் முதலீடுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன .
சில்வர் இன்ஸ்டிட்யூட் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வெள்ளிக்கு தட்டுப்பாடு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது .வெள்ளி தோண்டி எடுக்கப்படுவது குறைந்து வருகிறது என்றும் டிமான்டுக்கு நிகரான சப்ளை இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். விஜய் கேடியா தன்னுடைய போர்ட்போலியோவில் பத்து சதவீதத்தை தற்போது தங்கம் மற்றும் வெள்ளிக்காக ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறுகிறார்.
சில்வர் ஈடிஎஃப் மற்றும் தங்க பத்திரங்களில் அவர் முதலீடு செய்திருக்கிறார் . தங்கம் , வெள்ளி முதலீடு என்பது தலைமுறை தலைமுறையாக நமக்கு சொல்லப்படக்கூடிய ஒரு விஷயம் தற் தற்போது கூட வெள்ளி குறைந்த விலையில் தான் இருக்கிறது .இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் இன்னும் அது இரண்டு மடங்கு அதிகமாகும் என விஜய் கேடியா தெரிவிக்கிறார்.
அதற்காக கையில் இருக்கும் பணத்தை எல்லாம் தங்கம் , வெள்ளியிலேயே போட்டு விடக்கூடாது என தெரிவிக்கும் அவர் , என்னுடைய போர்ட்போலியோவில் 10% தான் வெள்ளி, தங்கத்துக்கு என ஒதுக்கீடு செய்கிறேன் என்கிறார். மக்களும் மொத்தமாக பணத்தை எல்லாம் வெள்ளி, தங்கத்தில் போடாமல் பிரித்து முதலீடு செய்யும்படி அறிவுரை வழங்குகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications