காலம் காலமாக தங்கத்தில் செய்யப்படும் முதலீடு தான் பாதுகாப்பான முதலீடு என்ற கருத்து நிலவி வருகிறது.இந்தியாவை பொறுத்தவரை நமது வீட்டு விசேஷங்களில் தொடங்கி, தங்கத்திற்கும் நமக்குமான உறவு என்பது மிக நெருக்கமானது. ஆனால் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருவதை பார்த்தால் இந்த உறவு விரைவில் முறிந்துவிடும் போல் இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,650 ரூபாய்க்கும் ஒரு பவுன் 53,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தங்கத்தை நகையாக, நாணயமாக அல்லது பத்திரங்கள், ஈடிஎஃப் என எந்த வழிகளில் வாங்குவது சிறந்தது என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்..

தங்க நகை/நாணயம்: தங்கத்தில் முதலீடு என்றாலே பெரும்பாலானவர்கள் நகை தான் வாங்குவோம். நாம் கடைகளுக்கு சென்று நகையாக அல்லது நாணயமாகவோ, பார்களாகவோ தங்கத்தை தொட்டு பார்த்து வாங்கும் போது அத்துடன் நமக்கு ஒரு பிணைப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி நகைகள் நமக்கு பல நினைவுகளை தரக்கூடியதாகவும் நம்மிடம் இருந்து வாரிசுகளுக்கு கொடுத்து ஒரு பாரம்பரியத்தை கொண்டதாகவும் இருக்கும். ஆனால் முதலீட்டுக்காக நகையை வாங்குவது சிறந்த முடிவாக இருக்காது.
ஏனெனில் நகை வாங்கும் போது தங்கத்தின் விலையோடு சேர்த்து ஜிஎஸ்டி, செய்கூலி ஆகியவற்றையும் நாம் செலுத்த வேண்டியுள்ளது. நாணயங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவோம். இது போன்ற நகைகளையும், நாணயங்களையும் பத்திரமாக பாதுகாப்பது நமக்கு பெரிய வேலை.
தங்க பத்திரம்: தங்க நகைகளுக்கும், நாணயங்களுக்கும் மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது தான் தங்கப் பத்திரங்கள்.மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை நமது வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் வழியாக தங்க பத்திரங்களை விற்பனை செய்கிறது.
தங்கத்தை முதலீடாக கருதுபவர்கள் இதில் தாராளமாக முதலீடு செய்யலாம். அரசு ஒரு கிராமிற்கு இவ்வளவு என நிர்ணயம் செய்யும். அந்த தொகையை கொடுத்தால் வங்கிகள் உங்களுக்கு கிராம்களை ஒதுக்கி பத்திரத்தை கொடுக்கும். இந்த தங்க பத்திரத்திற்கு ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும்.
8 ஆண்டுகள் முதிர்ச்சி காலம், அப்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை என்னவோ அந்த விலையை உங்கள் கணக்கில் பணமாக வரவு வைத்து விடுவார்கள். இதில் தங்கம் பத்திர வடிவில் இருக்கும். தங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு நமக்கு கிடையாது.
டிஜிட்டல் கோல்டு: பெயருக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் முறையில் தங்கத்தை வரவு வைப்பது. இதற்கென பல்வேறு இணையதளங்கள் செயல்படுகின்றன. ஆன்லைனில் நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ற அளவிலான டிஜிட்டல் தங்கம் உங்கள் பெயரில் வரவு வைக்கப்படும்.
பின்னர் தேவைப்படும் போது இதனை விற்பனை செய்யலாம். ஆனால் இதற்கு ஒழுங்குமுறை அமைப்புகள் இல்லாததால் ரிஸ்க்காக பார்க்கப்படுகிறது.
ஈடிஎஃப்: அண்மைக்காலமாக இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே ஃபேமஸ் ஆகி வரக்கூடிய ஒரு முதலீடு. அதாவது இந்த முறைகளில் தங்கத்தை சிறு சிறு தொகைகளில் முதலீடு செய்து யூனிட்டுகளாக வாங்கி வைத்துக்கொள்ள முடியும். அதாவது குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றன.
அதனை பங்குச்சந்தையில் யூனிட்டுக்களாக கோல் ஈடிஎஃஒ என்ற பெயரில் வெளியிடுகின்றன. நாம் நம்முடைய டீமேட் கணக்கிற்கு சென்று கோல்ட் ஈடிஎஃப்களை வாங்கி வைத்துக் கொள்ள முடியும்.இது பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்டது என்பதால் குறிப்பிட்ட அளவு புரோக்கரேஜ் தொகை மற்றும் எக்ஸ்பென்ஸ் ரேஷியோவை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும்.
பங்குச்சந்தையில் எப்படி பங்குகளை வாங்கி விற்பனை செய்கிறீர்களோ அதே போல கோல்ட் ஈடிஎஃப்களையும் வாங்கவும் விற்பனை செய்யவும் முடியும்.இதில் உங்களுக்கு தங்கத்தின் தூய்மை தன்மை தங்கத்தை பாதுகாப்பது அதனை பணமாக்குவது என்பன போன்ற பெரிய அளவிலான கவலைகள் தேவையில்லை.
கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்: கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் தற்போது கிடைக்கின்றன. மியூச்சுவல் ஃபண்டுகளில் நாம் எப்படி யூனிட்களை வாங்குகிறோமோ அதே போல கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து யூனிட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்த யூனிட்டுக்களும் ஏறு இறங்கும். மியூச்சுவல் ஃபண்டுகளை போலவே இந்த மேலாண்மை செய்யும் ஃபண்டு நிறுவனத்திற்கு குறிப்பிட்ட தொகையை நாம் செலுத்த வேண்டும்.
நகையாக தங்கத்தை வாங்கும் போது அது உணர்வுப்பூர்வமானதாக தோன்றும், ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் அவ்வளவு தொகை இல்லாதவர்கள் மற்ற முதலீட்டு வாய்ப்புகளை கருத்தில் கொள்ளலாம். ஈடிஎஃப், மியூச்சுவல் ஃபண்டு போன்றவை குறைந்த தொகைக்கே தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பினை தருகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications