தங்கத்தின் விலை உயர்வு உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது . வழக்கமாக தங்க முதலீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வாரன் பஃபெட் அண்மையில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதற்கு ஒரு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இதுதான் சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
ரிச் டேட் புவர் டேட் புத்தகத்தின் எழுத்தாளரும் அமெரிக்க தொழிலதிபருமான ராபர்ட் கியோசாகி சர்வதேச பொருளாதார சூழல்களை தொடர்ச்சியாக கண்காணித்து சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக முதலீட்டு ஐடியாக்களை வழங்கி வருபவர். அவர் அக்டோபர் ஒன்றாம் தேதி ஒரு முக்கியமான பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதில் வாரன் பஃபெட் தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஆதரவாக பேசுகிறார் , பல ஆண்டுகாலம் தங்கமும் வெள்ளியும் ஒரு முதலீடு கிடையாது எனக் கூறி வந்தவர் திடீரென தங்கம் வெள்ளி முதலீட்டுக்கு சாதகமாக பேசுவதன் பின்னணி என்ன என கேட்டிருக்கிறார்.

வாரன் பஃபெட் இப்படி கூறுகிறார் என்றால் கண்டிப்பாக பங்குச்சந்தைகளும் பத்திரங்களும் பெரிய வீழ்ச்சியை அடையப் போகின்றன என்று தானே அர்த்தம் என தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக நான் வெள்ளியில் முதலீடு செய்யுங்கள் என கூறி வருகிறேன் இத்தனை காலம் தங்கம் , வெள்ளியே வேண்டாம் என்பவர் திடீரென அவற்றில் முதலீடு செய்யுங்கள் எனக் கூறுவதை நாம் உற்று கவனிக்க வேண்டும் என தெரிவித்துள்லார்.
வாரன் பஃபெட்டின் வார்த்தைகளை நாம் பின்பற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எரித்திரியம் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டிய நேரம் என ராபர்ட் கியோசாக்கி தெரிவித்திருக்கிறார். பங்குச் சந்தைகளும் பத்திரங்களும் பெரிய வீழ்ச்சி அடையும் என்பதை கணித்துதான் வாரன் பஃபெட் இப்படி ஒரு கருத்தினை கூறியிருக்கிறார் என ராபர்ட் கியோசாகி தெரிவித்திருக்கிறார்.
எப்பொழுதுமே தங்கத்தில் முதலீடு செய்வதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் வாரன் பஃபெட். தங்கம் என்பது ஒரு வளராத சொத்து என கூறுவார். நாம் செய்யக்கூடிய முதலீடு அல்லது அந்த நிறுவனம் என்பது ஒரு பொருளை பல மடங்கு பெருக்கக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும் ஆனால் தங்கம் நீங்கள் இன்று வாங்கிய ஒரு கிராம் தங்கம் 10 ஆண்டுகள் கழித்தாலும் ஒரு கிராம் ஆக தான் இருக்குமே தவிர அதன் எண்ணிக்கை அதிகரித்து இருக்காது என கூறுபவர் .
அவரே தற்போது தன்னுடைய கவனத்தை தங்கம் மற்றும் வெள்ளியின் பக்கம் திருப்பி இருப்பது தான் கவனம் பெறுகிறது. வாரன் பஃபெட்டின் பெர்க்சயர் ஹேத்வே நிறுவனம் பல லட்சம் கோடி டாலர்களை சந்தையில் இருந்த பணமாக மாற்றி வைத்திருக்கிறது சரியான ஒரு முதலீட்டு தருணம் வரும்போது முதலீடு செய்வதற்காக காத்திருக்கிறது என சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!



Click it and Unblock the Notifications