வங்கியில் அடகு வைத்த தங்க நகை திருட்டு போனால் என்ன செய்வது? யார் பொறுப்பு? நகையை திரும்ப பெற முடியுமா?

எல்லோரும் வங்கியில் நகையை அடகு வைத்து கடன் வாங்குகிறோம். வங்கியின் லாக்கரில் இருக்கும் நகை என்பதால் அது பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால், திடீரென அந்த நகையே வங்கியில் திருடுபோய்விட்டதாக சொன்னால் என்ன செய்வது? இப்படியொரு சூழ்நிலையில், உங்களுடைய அடுத்தக்கட்ட ஆக்ஷன் என்னவாக இருக்கும்..?

தங்கக் கடனுக்காக வங்கியிடம் ஒப்படைத்த நகை திருடப்பட்டால், அந்த நகைக்கான இழப்பை வாடிக்கையாளர் தான் ஏற்க வேண்டுமா? அல்லது வங்கி தான் பொறுப்பு ஏற்க வேண்டுமா? என்ற கேள்வி தற்போது அனைவரிடமும் வந்திருக்கும். இதற்கான முழு பதில் இதோ..

வங்கியில் அடகு வைத்த தங்க நகை திருட்டு போனால் என்ன செய்வது? யார் பொறுப்பு? நகையை திரும்ப பெற முடியுமா?

கிட்டதட்ட இதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தின் தும்கூரில் நடத்துள்ளது. இதற்கு அந்த நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றுள்ளார். இந்த தீர்ப்பு இந்திய வங்கித்துறையில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம் இனியொரு சம்பவம் இதுபோல் நடந்தால் இந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இழப்பீட்டை மக்கள் பெறலாம்.

முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும், வங்கிகளில் கொள்ளை என்பது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு விஷயம்.

தும்கூரில் ஒரு நபர் கனரா வங்கியில் ஆகஸ்ட் 2017ல் 2 தங்க நகை கணக்கை திறந்து 2 தங்க நகைகளை தனித்தனியாக அடகு வைத்துள்ளார். இதில் ஒரு நகை 120.80 கிராம், மற்றொரு நகை 133 கிராம். இரண்டு நகைகளுக்கு தலா 1.5 லட்சம் என மொத்தம் 3 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார்.

அடகு வைக்கப்பட்ட தங்க நகை கனரா வங்கியில் பாதுக்காப்பில் இருந்து திருட்டப்பட்டு உள்ளது. வங்கி நிர்வாகம் இதை கண்டதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜூலை 26, 2018 ஆம் தேதி இழப்பீட்டை பெற கடிதம் அனுப்பியது.

வங்கி நிர்வாகம் முதல் நகைக்கு, ஒரு கிராமுக்கு 2600 ரூபாய் மதிப்பில் சுமார் 90 கிராமுக்கு இணையாக தங்கத்தின் மதிப்பிற்கு 1,56,033 ரூபாயை இழப்பீடாக கொடுத்தது. இதேபோல் 2வது நகை 133 கிராம் ஆனால் தங்கத்தின் எடை 85 கிராம் மட்டுமே கணக்கிட்டு 2500 ரூபாய் வீதம் 2,12,500 ரூபாயை இழப்பீடாக கொடுத்தது. இந்த இரண்டு நகையிலும் வங்கிகள் தங்கத்திற்கான மதிப்பை மட்டுமே கொடுத்துள்ளது. கற்களுக்கான எடையை கணக்கிடவில்லை.

இந்த இழப்பீட்டை எற்காத அந்த நபர் நகைகளின் செய்கூலியாக 20 சதவீதமும், கற்களுக்கான மதிப்பு 3 சதவீதம் என கூடுதல் இழப்பீடாக 88,362 ரூபாயும் கேட்டுள்ளார். வங்கி இதை தர மறுத்த காரணத்தால் முதலில் மாவட்ட குறைதீர்ப்பு ஆணையத்தை அனுகினார்.

2020 ஜூலை மாதம் மாவட்ட குறைதீர்ப்பு ஆணையம் கொடுத்த தீர்ப்பில் 30,000 ரூபாய் இழப்பீடு, 10,000 ரூபாய் வழக்கிற்கான செலவுகளை 45 நாட்களுக்குள் செலுத்த உத்தரவு வெளியானது. ஆனால் அந்க நபர் கேட்ட செய்கூலி 20 சதவீதமும், கற்களுக்கான மதிப்பு 3 சதவீதத்திற்கான முழு இழப்பீட்டை கொடுக்க வங்கிகள் மறுத்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த நபருக்கு இழப்பீடாக கேட்ட 88,362 ரூபாய்க்கு 29.08.2018 முதல் 9 சதவீத வட்டி கணக்கிட்டு அளிக்கப்பட வேண்டும் என உத்தரவு வெளியானது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தற்போது வங்கி தரப்பில் இருந்து கர்நாடக மாநிலங்களின் குறைதீர்ப்பு ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணையில் அந்த நபர் நகைகளுக்கான உரிய ஆதாரம் இல்லாமல் செய்கூலி 20 சதவீதமும், கற்களுக்கான மதிப்பு 3 சதவீதம் கேட்கிறார் என வாதிட்டது.

கர்நடாக மாநில குறைதீர்ப்பு ஆணையம் கொடுத்த இறுதி தீர்ப்பில், வங்கி பாதுகாப்பில் இருக்கும் தங்க நகை திருடப்பட்ட நிலையில், இதற்கான முழுப்பொறுப்பையும் வங்கி தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் வங்கிகள் நகை உரிமையாளர்களிடம் நகை வாங்கியதற்கான ஆவணம் கேட்பது என்பது அவசியமற்றது, சந்தையில் விற்கப்படும் அனைத்து நகைகளுக்கும் செய்கூலி, சேதாரம் விதிக்கப்படுகிறது எல்லோருக்கும் தெரியும்.

எனவே வங்கிகள் பாதிக்கப்பட்ட நபர் கேட்ட 88,362 ரூபாய் இழப்பீட்டு தொகைக்கு 29.08.2018 முதல் 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு, 30000 ரூபாய் தொகையை இழப்பீடாகவும், 10000 ரூபாய் வழக்கிற்கான செலவுகளை கொடுக்க இறுதி தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வங்கியில் அடகு வைத்த நகைகள் தொலைந்தாலோ, சேதம் அடைந்தாலோ அதற்கு முழு பொறுப்பு வங்கிகள் மட்டுமே. இதேபோல் தங்க நகை கடன் வாங்கும் போது ஆவணங்களை கேட்காத வங்கி நிர்வாகம் இழப்பீடு கேட்கும் போது மட்டும் ஆவணங்களை கேட்பது நீதிமன்றம் ஏற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+