பொதுவாக நிறுவனங்கள் தங்களது அடுத்த கட்ட வளர்ச்சிக் தேவைக்கு நிதி திரட்ட புதிய பங்கு வெளியீட்டில் ஆதாவது ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் களம் இறங்கி முதலீட்டை திரட்டுகின்றனர். ஆனால் ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு முன்பே, க்ரே மார்க்கெட்டில் அந்த பங்குகள் மீது வர்த்தகம் நடைபெறும். இந்த க்ரே மார்க்கெட் குறித்து கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
க்ரே மார்க்கெட் என்பது அதிகாரப்பூர்வமற்ற மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சந்தையாகும். மும்பை பங்குச் சந்தை அல்லது தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு முன்பே பங்குகள் மீது வர்த்தகம் நடைபெறும்

மின்னணு முறையில் இந்த வர்த்தகம் நடைபெறாது, க்ரே மார்க்கெட்டில் பங்கு பரிவர்த்தனை நேரில் நடக்கும். விதிமுறை வரம்புகளுக்கு வெளியே இந்த வர்த்தகம் நடந்தாலும் இது சட்ட விரோதமாக கருதப்படுவதில்லை.
க்ரே மார்க்கெட் பிரிமீயம் : க்ரே மார்க்கெட் பிரிமீயம் என்பது பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடபடுவதற்கு முன்பு முதலீட்டாளர்கள் க்ரே சந்தையில் ஐபிஒ விலைக்கு மேல் கொடுக்க தயாராக இருக்கும் கூடுதல் விலையை குறிக்கிறது.
உதாரணமாக ஒரு நிறுவனத்தின் ஐபிஓ-விற்கான ஒரு பங்கு பங்கின் வெளியீட்டு ரூ.450ஆக இருக்கிறது என்று வைத்து கொள்வோம். க்ரே மார்க்கெட்டில் பங்கு விலை ரூ.470ஆக இருந்தால், ஐபிஓ-வின் க்ரே மார்க்கெட் பிரிமீயம் (GMP) ரூ.20ஆக இருக்கும்.
ப்ரீமியம் விலை நிர்ணயம்: ஐபிஓ-வில் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம் செய்வது போல், க்ரே மார்க்கெட்டிலும் உயர்தர ப்ரீமியம் விலை நிர்ணயம் செய்யப்படுவது வாடிக்கை. ஐபிஓ-வில் பங்குகளின் தேவை மற்றும் சப்ளை நிலவரத்தை பொறுத்து GMP கணக்கிடப்படுகிறது.
ஐபிஓ-வில் பங்குகளுக்கு விண்ணப்பிக்கும்போது, GMP விலையை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடாது. GMP விலை 70 முதல் 80 சதவீதம் துல்லியமானது, பட்டியலிடப்பட்ட விலையை பொறுத்தவரை 5 சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்ததாக ஐபிஓ-வில் பங்குகள் கோரப்படுவதை சார்ந்தும் GMP விலை அமையும். ஐபிஓ-வில் முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை கோரியிருந்தால் அதிக GMP விலைக்கு வழிவகுக்கும். அதேசமயம் பங்குகள் அதிகளவில் கோரப்படவில்லை என்றால் GMP விலை குறைய வழிவகுக்கும். இருப்பினும் ஐபிஓ-வில் பங்குகள் கோரப்படுவதை பொறுத்து ஏற்படும் GMP விலையின் அசாதாரண எதிர்வினைகளை எச்சரிக்கையுடன் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
பங்குகள் விற்பனை: ஐபிஓ-வில் பங்குகளை வாங்க விரும்புவர்கள் க்ரே மார்க்கெட்டில் தரகர்களை அணுகி ஒரு குறிப்பிட்ட விலையில் அல்லது பிரீமியம் விலை வாங்கலாம். பங்கு வாங்குபவர்கள் தன்னை அணுகியதும் தரகர் ஐபிஓ-வில் விண்ணப்பித்த சாத்தியமான விற்பனையாளர்களை அணுகுவார்.
பட்டியலிடப்பட்ட விலை நிச்சயமற்றதாக இருந்தால் அல்லது ரிஸ்க் வைத்திருக்க விரும்பாதவர்கள் பங்குகளை விற்பனை செய்வார்கள். ஐபிஓ-வில் விற்பனையாளருக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டவுடன், அவை தரகர் மூலம் வாங்குபவர்களுக்கு ரொக்க தீர்வுகளுடன் பரிமாற்றப்படும்.
பங்கு வெளியீட்டு விலை அடிப்படையில் பங்கு பரிமாற்றம் ஏற்படும். பட்டியலிடப்பட்ட விலைக்கும் முன்னர் மேற்கோள் காட்டப்பட்ட விலைக்கும் இடையே ஏதேனும் வித்தியாசம் இருந்தால் பட்டியலிடப்பட்ட நாளில் தீர்க்கப்படும்.
பட்டியலிடப்பட்ட நாளில் காலை 9.45 மணிக்கு வர்த்தக அளவு பல ஐ.பி.ஓ.க்களில் உயரும். இருப்பினும் பங்குச் சந்தைகள் மற்றும் செபி ஆகிய இரண்டின் கண்காணிப்பு வெளியே இந்த வர்த்தகங்கள் நடைபெறுவதால் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
ஐ.பி.ஓ. நிலவரம் பிரதிபலிப்பு: க்ரே மார்க்கெட் பிரீமியம் விலை ஒரு குறிப்பிட்ட நிறுவன ஐ.பி.ஓ.வுக்கான சந்தை உணர்வை பிரதிபலிக்கிறது. GMP விலை அதிகமாக இருந்தால், ஐபிஓ-வில் பங்குகளுக்கு வலுவான தேவை உள்ளது மற்றும் பங்குகள் பட்டியலிடப்படும்போது விலை உயர வாய்ப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. அதேசமயம் குறைந்த GMP விலை, ஐபிஓ-வில் பங்குகளுக்கான பலவீனமான தேவை மற்றும் பட்டியலிடப்படுவதை குறிக்கிறது.
பட்டியலிடப்படும் பங்கின் விலை போக்கு: பங்கு பட்டியலிடப்படும் சரியான விலையை GMP விலை பிரதிபலிக்காது என்றாலும், GMP விலை போக்கினை கவனிப்பது, பங்குகள் பட்டியலிடப்பட்ட பின் விலை எந்த திசையில் பயணிக்கும் என்பது பற்றிய நுண்ணறிவு வர்த்தகர்களுக்கு கிடைக்கும். பொதுவாக ஒரு பங்கு அதன் GMP விலையை சுற்றி 15 முதல் 20 சதவீத வரம்புக்குள் பட்டியலிடப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
GMP விலை கட்டுப்படுத்துதல்: பெரிய நிறுவன ஐ.பி.ஓ.களுக்கு க்ரே மார்க்கெட்டில் GMP விலையில் சூழ்ச்சி செய்வது சவாலானது. இருப்பினும் சிறிய ஐ.பி.ஓ.க்கள் GMP விலையில் கட்டுப்படுத்துதல் நடைபெறக் கூடும் என்று சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிறிய மற்றும் நடுத்தர ஐபிஒக்களுக்கான க்ரே மார்க்கெட்டில் விலைகள் கட்டுப்படுத்தப்படுவது பற்றிய ஊகங்கள் உள்ளன.
ஐபிஓ-வில் பங்குகளுக்கு விண்ணப்பிக்கும்போது, GMP விலை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடாது. GMP விலை 70 முதல் 80 சதவீதம் துல்லியமானது, பட்டியலிடப்பட்ட விலையை பொறுத்தவரை 5 சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications