சென்னை: கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளாக மாறி மாதம் தோறும் 7000 ரூபாய் சம்பாதிக்க வழிவகை செய்யக்கூடிய ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி எல்ஐசி நிறுவனத்தின் பீமா சகி யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இந்த திட்டத்தின் நோக்கம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களை இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளாக மாற்றி அவர்களுக்கு வருமானம் கிடைக்க வழிவகை செய்வதுதான். கிராமப்புறங்களில் காப்பீடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்களை காப்பீட்டினை பெறச் செய்யவும் எல்ஐசி நிறுவனம் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி ஓராண்டுக்குள் கிராமப்புறங்களில் ஒரு லட்சம் பெண் காப்பீட்டு முகவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு வாழ்வாதாரம் கிடைப்பதோடு அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு எல்லாம் காப்பீடு குறித்த விழிப்புணர்வும் காப்பீடும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 18 முதல் 70 வயதுக்குட்பட்ட பத்தாம் வகுப்பு வரை பயின்ற கிராமப்புற பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து காப்பீட்டு முகவராக மாறலாம்.
இந்த திட்டத்தில் முதல் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் முகவர்களையும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் பெண் முகவர்களையும் உருவாக்க வேண்டும் என்பதே தங்களுடைய இலக்கு என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகவர்களாக மாறும் பெண்களுக்கு முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அது தவிர அவர்கள் விற்பனை செய்யும் பாலிசிகளுக்கு ஏற்ப கமிஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணையும் பெண்களுக்கு முதல் ஓராண்டு காலத்திற்கு மாதந்தோறும் 7000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
இரண்டாவது ஆண்டிலிருந்து இது 6000 ரூபாயாக குறைக்கப்படும். மூன்றாவது ஆண்டில் இது 5000 ரூபாயாக மாறும். அதன் பிறகு அவர்கள் விற்பனை செய்யும் பாலிசிகளை பொறுத்து கமிஷன் தொகை அவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த வேலையை பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலை செய்ய வேண்டும் என்பது கிடையாது. இந்த திட்டத்தில் இணையும் பெண்களுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் எல்ஐசி நிறுவனம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைய விரும்பக்கூடிய பெண்கள் தங்களுடைய வயதினை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு ஆவணத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதே போல கல்வித் தகுதிக்கான மற்றும் முகவரி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இதில் வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஏற்கனவே எல்ஐசி முகவர்களாக இருக்கும் நபர்களின் உறவினர்களுக்கு இதில் வாய்ப்பு கிடைக்காது. பெண்கள் இந்த இணையதளத்திற்கு சென்று https://licindia.in/lic-s-bima-sakhi விண்ணப்பம் செய்யலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications