இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கு மேலாக சரிவில் இருந்து வருகின்றன. தினந்தோறும் புது புது இறக்கங்களை எட்டி முதலீட்டாளர்களை கலங்கடிக்க செய்துள்ளன.
இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான தொகையை திரும்ப பெறுவதே இதற்கு காரணம். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் இன்டெக்ஸ்கள் ஆகிய அனைத்தும் சரிவிலேயே இருக்கின்றன. அதிகபட்சமாக ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் இன்டெக்ஸ் 20 சதவீதத்துக்கும் மேல் வீழ்ந்துள்ளன.

ஐந்து மாத காலத்தில் நிஃப்டி 16 சதவீதமும், சென்செக்ஸ் 15 சதவீதமும் சரிவில் இருக்கிறது. நாள்தோறும் இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கும் மதிப்பை விட விற்பனை செய்யும் மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் சில்லறை முதலீட்டாளர்கள் பலரும் தங்களுடைய போர்ட் போலியோ மைனஸில் இருப்பதைக் கண்டு அச்சத்தில் இருக்கின்றனர். இந்த சூழலில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் பல்வேறு யோசனைகளை அளித்துள்ளனர்.
பைனோகிராப் டெக்னாலஜிஸ்(Fynograph technologies) நிறுவனத்தின் இயக்குனர் கௌரவ் கோயல் பங்கு சந்தை சரிவடைந்து வந்தாலும் அனைத்து பங்குகளும் இந்த வீழ்ச்சியில் சிக்கவில்லை என கூறுகிறார். முதலீட்டாளர்கள் இந்த சமயத்தில் சரியான நிறுவனத்தை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும் என யோசனை வழங்குகிறார். PE ratio மற்றும் earnings potential இரண்டையும் கவனித்து மிகச்சிறந்த அடிப்படை கொண்ட பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும் என கூறுகிறார். சில்லறை முதலீட்டாளர்கள் தங்களுடைய அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டும் என்கிறார். PE ratio 10 முதல் 15க்குள் இருக்கும் நிறுவனங்கள் சிறந்த வளர்ச்சி பெறும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
பங்குச்சந்தை சரிவில் இருக்கும் போது முதலீட்டாளர்கள் 40 -30-30 என்ற விதிமுறையை கையாள வேண்டும் என்றும் கௌரவ கோயில் யோசனை தெரிவிக்கிறார். இதன்படி பங்குச்சந்தை இதுபோல சரிவில் இருக்கும் போது அல்லது திருத்தத்தில் இருக்கும் போது தங்கள் வசம் இருக்கும் தொகையில் 40 சதவீதத்தை சரியான நிறுவன பங்குகளில் முதலீடு செய்து விட வேண்டும், பங்குச்சந்தை மேற்கொண்டு சரிவடைந்தால் 30 சதவீதம் தொகையை மீண்டும் முதலீடு செய்ய வேண்டும். பங்குச்சந்தை சரிவிலிருந்து மீண்டு வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் முதலீட்டாளர்கள் மீதமுள்ள 30 சதவீதத்தையும் முதலீடு செய்ய வேண்டும்.இது முதலீட்டு ஆபத்துகளை பெருமளவு குறைக்கும் என்று கூறுகிறார்.
மற்றொரு முதலீட்டு நிபுணரான மோகித் கண்ணா பங்குச் சந்தைகள் இதுபோல ஏற்ற இறக்கத்துடனும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஒரு குழப்பமான சூழல் நிலவும் போதும் முதலீட்டாளர்கள் அச்சமடைய கூடாது என்கிறார். எஸ்ஐபி முறையில் தங்களுடைய முதலீட்டை தொடர வேண்டும் என தெரிவிக்கிறார். நீண்ட கால நோக்கத்திற்காக மாதம் தோறும் முதலீடு செய்பவர்கள் சந்தை ஏறுகிறது இறங்குகிறது என பார்க்காமல் நீண்ட காலத்திற்கு முதலீட்டை தொடர வேண்டும் என கூறுகிறார். சந்தையின் அனைத்து சூழல்களிலும் முதலீடு செய்வதற்கு ஏற்ற ஒரு அமைப்பு தான் எஸ்ஐபி என அறிவுரை வழங்குகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications