தங்கத்தை வாங்க சிறந்த வழி எது.. எது லாபகரமானது.. உங்களுக்கு உகந்தது எது?

தங்கத்தினை வேண்டாம் என்று கூறுபவர்கள் யாரேனும் உண்டா எனில் நிச்சயம் இருக்க முடியாது. என்ன நடந்தாலும் என் சாய்ஸ் தங்கம் தான் என்பவர்கள் இந்தியாவில் அதிகம். இதற்கு சிறந்த உதாரணம் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைனில் தங்கம் வாங்கியவர்கள் எனலாம்.

கொரோனா காலகட்டத்தில் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழலில் கூட, ஆன்லைனில் தங்கத்தினை வாங்கிக் குவித்தனர் நம் மக்கள்.

அதற்கு காரணம் தங்கத்தின் மீது நம் மக்கள் கொண்டுள்ள மோகம் மட்டும் அல்ல, வருடத்திற்கு வருடம் லாபகரமாக ஒன்றாக இருந்து வருகின்றது.

 தங்கத்தின் விலை போக்கு

தங்கத்தின் விலை போக்கு

குறிப்பாக சொல்லவேண்டுமெனில் நமது பாட்டிமார்கள் சொல்லியிருக்க பலரும் கேட்டிருக்கலாம். எங்க காலத்தில் எல்லாம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? 50 ரூவா 100 ரூவா தான்.. இன்னைக்கு நாம் வாங்குகிற ஒரு ஸ்மார்ட்போன் விலையில் அன்று 10 - 15 சவரன் நகை எளிதில் வாங்கி போட்டிருக்கலாம். இதே இன்னும் 50 வருடங்கள் கழித்தால் 1 லட்சத்தினை தொட்டலாம் ஆச்சரிப்படுவதற்கில்லை. தற்போதே 40,000 ரூபாய்க்கு மேல் சென்று விட்டது. அதோடு எல்லாவிதமான சவாலான நெருக்கடியான காலகட்டத்திலும் தங்கம் பாதுகாப்பு புகலிடமாக உள்ளது. அவசர காலத்தில் உதவும் ஆபத்பாந்தவனாக உள்ளது.

ஸ்மார்ட்டாக செயல்படணும்?

ஸ்மார்ட்டாக செயல்படணும்?

ஜொலி ஜொலிக்கும் தங்கம் சிறந்த ஆபரணம் என்பதை தாண்டி அந்தஸ்தின் அடையாளமாகவும் மாறிவிட்டது. இப்படி பல நல்ல விஷயங்களை தன்னகத்தே கொண்டுள்ள தங்கத்தினை வாங்கலாமா? வேண்டாமா? நிச்சயம் வாங்கலாம். எனினும் இதிலும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் கொஞ்சம் அதிக லாபமும் ஈட்டலாம்.

லாபம் பெரிசா இல்லை

லாபம் பெரிசா இல்லை

பலரும் தங்கம் என்றாலே எதேனும் பிரபலமான தங்க கடைகளுக்கு சென்று நகையாக வாங்கி தள்ளுவோம். இன்னும் தெளிவாக பிசிகல் தங்கமாக வாங்கி வைப்போம். இந்த தங்கத்தில் செய்கூலி,சேதாரம் என செலவினங்கள் அதிகம். பாதுகாப்பு என்ற பிரச்சனையும் உள்ளது. இந்த தங்கத்தினை வைத்துக் கொண்டு அதன் மூலம் நமக்கு லாபம் எதுவும் கிடைக்காது.

எது லாபம்?

எது லாபம்?

மாறாக தேய்மானம் கழிக்கப்படும். அதோடு ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கிராம் 4500 ரூபாய் வாங்குகிறீர்கள். இதன் விலை ஒரு வருடம் கழித்து 5000 ரூபாயாக அதிகரிக்கிறது எனில் நீங்கள் 5000 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய முடியும். இது வட்டி வருவாயோ அல்லது வேறு எந்த விதமான வருமானமும் இல்லை.

குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

எல்லாவற்றிற்கும் மேலாக தங்கத்தினை நீங்கள் பிசிகலாக வாங்கும்போது, குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து வாங்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. குறைந்தபட்சம் அரை கிராம் என்றால் கூட 2500 ரூபாய்க்கு மேலாக இருக்கும். ஆக குறைந்தபட்ச முதலீடு செய்ய முடியாது. இதில் உள்ள ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவெனில் ஆபரணமாக வாங்கிக் கொள்ள முடியும்.

டிஜிட்டல் கோல்டு முதலீடுகள்

டிஜிட்டல் கோல்டு முதலீடுகள்

எனினும் சமீபத்திய காலமாக டிஜிட்டல் கோல்டு மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. இந்த டிஜிட்டல் கோல்டில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இதில் தங்க பத்திரம் (SGB), கோல்டு இடிஎஃப் (ETF), தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் , டிஜிட்டல் கோல்டு (ஆப்கள் மூலம் வாங்கலாம்) என முதலீடு செய்து கொள்ளலாம்.

டிஜிட்டல் கோல்டு

டிஜிட்டல் கோல்டு

கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற ஆப்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். இங்கு நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப உங்கள் நகையாக வாங்கி சேமிப்பார்கள். நீங்கள் இங்கு குறைந்தபட்ச தொகையை கூட வாங்கி வைத்துக் கொள்ள முடியும். இது பாதுகாப்பு பிரச்சனை இல்லை. இது செய்கூலி, சேதாரம் என்பது இல்லை. இதில் சில நிறுவனங்கள் இறுதியில் பிசிகல் கோல்டாகவும் சிலவற்றில் வாங்கிக் கொள்ளலாம். எனினும் இதில் ஜிஎஸ்டி, செய்கூலி என சில கட்டணங்கள் இருக்கலாம்.

டிஜிட்டல் கோல்டு கட்டணம்

டிஜிட்டல் கோல்டு கட்டணம்

பொதுவான இதுபோன்ற திட்டங்கள் உங்களது சேமிப்பினை ஊக்குவிதமாக இருக்கும். ஆக பிசிகல் கோல்டாக கேட்கும்போது சந்தை விலையில் இருந்து சற்று குறைவானதாக இருக்கும். இதனுடன் சில கட்டணங்கள் இருக்கும். எனினும் நீங்கள் வாங்கிய டிஜிட்டல் வடிவிலேயே விற்பனை செய்தால், டிஜிட்டல் வடிவிலேயே விற்பனை செய்து கொள்ளலாம். எனினும் இதற்கும் கட்டணம் (இன்சூரன்ஸ், பாதுகாப்பு என பலவும் மறைமுகமாக கட்டணமாக ) வசூலிக்கப்படலாம். ஆக நீங்கள் ஆப் மூலமாக நீங்கள் வாங்கும்போது அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தங்க பத்திரம் (SGB)

தங்க பத்திரம் (SGB)

தங்கப் பத்திரத்தினை பேப்பர் வடிவில் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் கூடுதலான கட்டணங்களோ அல்லது ஜிஎஸ்டியோ கிடையாது. ஏனெனில் இதில் ரிசர்வ் வங்கி நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப தங்கமாக வாங்கி வைப்பதில்லை. இதனால் உங்களுக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. அதெல்லாம் நம் முதலீட்டுக்கு தங்கமும் வாங்குவதில்லை இது பாதுகாப்பானதா? எனில் நிச்சயம் இது பாதுகாப்பானது தான். ஏனெனில் இதனை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

தங்க பத்திரம் 8 ஆண்டுகள்

தங்க பத்திரம் 8 ஆண்டுகள்

தங்க பத்திரங்களின் முதிர்வுகாலம் 8 ஆண்டுகளாகும். இதில் முதிர்வுக்கு பிறகு கிடைக்கும் வருமானத்திற்கு வரி கிடையாது. இதில் வருடத்திற்கு 2.5% வட்டியும் கிடைக்கும். ஆக இதில் இரண்டு வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் 8 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டுமா? என்றால் 5 ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்து கொள்ளலாம். எனினும் இதில் மூலதன ஆதாய வரி உண்டு. இந்த பத்திரங்களை உங்கள் டீமேட் மூலம் லிங்க் செய்து விற்பனை செய்து கொள்ளலாம்.

கோல்டு இடிஎஃப்

கோல்டு இடிஎஃப்

கோல்டு இடிஎஃப்பினை பொறுத்தவரையில் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம். இது தங்கம் விலை ஏற்ற இறக்கத்தினை பொறுத்து இருப்பதால், லாபம் கிடைக்கும் போது வெளியேறி கொள்ளலாம். எனினும் இதில் செய்கூலி சேதாரம் என்பது கிடையாது. எனினும் இதில் எக்ஸிட் லோடு என்பது இருக்கும். ஆக இதனை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. இதில் முதலீடு செய்ய வேண்டுமெனில் கட்டாயம் டீமேட் கணக்கு தேவை. நீங்கள் பங்கு சந்தையில் பங்குகளை வாங்கி விற்பனை செய்வது போன்று இங்கும் விற்பனை செய்து கொள்ளலாம்.

கோல்டு பண்டுகள்

கோல்டு பண்டுகள்

கோல்டு பண்டுகளும் மியூச்சுவல் பண்டின் ஒரு பகுதி தான். இது பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கோல்டி இடிஎஃப்களில் முதலீடு செய்யக் கூடிய ஒன்று. இவை தங்கம் சார்ந்த நிறுவனங்களிலும் முதலீடு செய்கின்றன. இதில் விலையை நாம் நேரடியாக பார்த்துக் கொள்ள முடியும். எனினும் இதில் கட்டணங்கள் சற்று அதிகமாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+