நவீன தொழில்நுட்பங்கள் நம்முடைய தகவல் தொடர்பு முறையையும் பணப்பரிவர்த்தனையும் எளிமையாக்கி இருக்கின்றன. நிதி சார்ந்த மோசடிகளும் இந்த தொழில்நுட்பங்களால் மேலும் எளிமையாகியுள்ளன என்பது தான் உண்மை.
வாட்ஸ் அப்பில் மோசடி: எந்த அளவிற்கு நாம் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறோமோ அதே அளவிற்கு நிதி சார்ந்த மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வகையான ஒரு மோசடி நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் மோசடியாளர்கள் இந்த நிதி சார்ந்த மோசடியை மேற்கொள்கிறார்களாம்.

ஸ்கிரீன் மிரரிங் மோசடி: இதனை WhatsApp Screen Mirroring Fraud என அழைக்கிறார்கள். இந்த மோசடியில் நீங்கள் சிக்கினால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் அனைத்தும் திருடப்பட்டு விடும் என சைபர் கிரைம் பிரிவை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அண்மையில் OneCard என்ற நிறுவனம் கூட தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு WhatsApp Screen Mirroring Fraud குறித்து ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டு இருந்தது.
வீடியோ கால்: எப்படி இந்த மோசடி அரங்கேறுகிறது என்பதை தெரிந்து கொண்டால் நாம் அதிலிருந்து தப்புவது எளிமையாக இருக்கும். மோசடியாளர்கள் நம்முடைய whatsapp எண்ணை தெரிந்து கொண்டு whatsapp வாயிலாக நமக்கு வீடியோ கால் செய்வார்களாம் . அவ்வாறு வீடியோ கால் செய்பவர்கள் தங்கள் வங்கி அதிகாரிகள் என்றும் வங்கி சார்பாக உங்களுக்கு ரிவார்டுகள் மற்றும் சலுகைகள் வழங்கப் போகிறார்கள் என்றும் கூறுவார்களாம்.

என்ன நடக்கும்: இதனை நீங்கள் உங்கள் போனில் ஆக்டிவேட் செய்ய முடியாது நாங்கள் மட்டுமே செய்ய முடியும் எனவே உங்களுடைய ஸ்மார்ட் போன் ஸ்கிரீனை எங்களிடம் ஷேர் செய்யுங்கள் என கூறுவார்களாம். அவர்களின் இந்த பேச்சை நம்பி வாட்ஸ் அப் ஸ்கிரீனை நீங்கள் ஷேர் செய்தால் ஒருமுறை நீங்கள் அதற்கு அனுமதி கொடுத்தால் உங்களுடைய மொபைலில் இருக்கும் அனைத்து தரவுகளும் நிகழ்நேர அடிப்படையில் ஹாக்கர்களுக்கு சென்று விடும். உங்கள் ஃபோனுக்கு வரக்கூடிய அழைப்பு, மெசேஜ், ஒடிபி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மோசடியாளர்கள் எளிமையாக பெற்றுக் கொள்வார்கள்.
வங்கி பணம் முழுவதும் காலி: அதை வைத்துக்கொண்டு உங்களுக்கே தெரியாமல் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடுவார்கள். சில சமயங்களில் உங்களுக்கு வாட்ஸப் காலிலேயே ஏதேனும் ஒரு லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்ய வேண்டும் அல்லது நாங்கள் அனுப்பக்கூடிய இந்த பிரமோஷன் கோடை நீங்கள் உள்ளீடு செய்தால் உங்களுக்கு இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் சலுகை கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறுவார்கள்.
என்ன செய்ய வேண்டும்: எனவே மக்கள் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து அல்லது எண்களிடமிருந்து வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் வீடியோ கால் வந்தால் அதனை ஏற்கக் கூடாது அதேபோல உங்களுடைய ஸ்கிரீனை ஒருபோதும் புதிய நபர்களிடம் ஷேர் செய்யக்கூடாது என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படுகின்றனர். வங்கி சம்பந்தப்பட்ட செயலிகளை வைத்திருப்பவர்கள் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், சந்தேகத்திற்குரிய எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்யக்கூடாது சந்தேகத்திற்குரிய எந்த செயலியையும் இன்ஸ்டால் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications