எத்தனை சவரன் தங்கம் வாங்கி வைத்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் நமக்கு குறையவே குறையாது. தங்கம் நம்முடைய கௌரவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமில்லாமல் ஒரு அவசர கால தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய ஒரு பொருளாகவும் இருந்து வருகிறது. எனவே தான் வறுமையில் இருக்கும் குடும்பத்தை தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை வாங்கி வைக்கின்றனர்.
தங்கம் விலை: இந்தியாவில் தங்கம் விலை என்பது சர்வதேச காரணிகள் மற்றும் இந்திய சந்தையில் அதன் தேவை ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றம் காண்கிறது . 2025 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மட்டும் இந்திய சந்தையில் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 30 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது.

ஜனவரி முதல் எவ்வளவு உயர்வு: ஜனவரி மாதத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை 7,500 ரூபாய் என இருந்து இப்போது 9,400 ரூபாய் என எட்டி இருக்கிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8,000 ரூபாயில் இருந்து இப்போது 10,000 ரூபாயில் இருக்கிறது. கொரோனா காலத்திற்கு பிறகு தான் மிக வேகமான வளர்ச்சி அடைந்திருக்கிறது தங்கம் விலை. 24 கேரட் தங்கம் இந்திய சந்தையில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மைல்கல்லை எப்போதோ கடந்து விட்டது.
அடுத்த 5 ஆண்டுகளில்: ஆகஸ்ட் 16ஆம் தேதி நிலவரப்படி பார்த்தால் சென்னையில் 24 கேரட் தங்கம் 1 கிராம் 10,118 ரூபாய்க்கு, 10 கிராம் 1,01,180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இப்படி உயர்ந்து கொண்டே வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது எந்த அளவை எட்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு வல்லுநர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயை கடக்கும் என கணிப்பு வெளியிட்டு இருக்கின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் நடந்தது என்ன? : 2019 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 35 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருந்தது, இப்போது அது 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடந்துவிட்டது. 2019ஆண்டு முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 200% உயர்ந்திருக்கிறது அதாவது ஆண்டுதோறும் சராசரியாக 18 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது. இந்த நிலை அப்படியே நீடித்தால் 2030 ஆம் ஆண்டு தற்போது இருக்கும் விலையை விட தங்கத்தின் விலை இரண்டு மடங்காக உயரும். அப்படி பார்த்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயை கடக்கும்.

என்ன நடக்கும்: ஆனால் இது ஒரு கணிப்புதானே தவிர சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையும் நிச்சயம் மாற்றம் காணும். இருந்தாலும் உலக அளவில் ஏற்படக்கூடிய புவிசார் அரசியல் பதற்றங்கள் ,வர்த்தக மோதல்கள் ,பொருளாதார நிலை ஆகிய அனைத்துமே தங்கத்தின் விலையை உயர்த்தும் காரணிகளாக தான் இருக்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவை அனைத்தும் இல்லாமல் உலகம் இயங்குமா? இல்லை என்பது தான் பதில்.
எப்படி முதலீடு செய்ய வேண்டும்: அதாவது தங்கத்தின் விலை சிறிது இறங்குமே தவிர , பெரிய இறக்கம் காண முடியாது நாம் தங்கம் விலை வரலாற்றை பார்த்தால் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் ஏறினால் 100 ரூபாய் 200 ரூபாய் குறையும். முழுமையாக ஏறிய தொகை குறையுமா என்றால் கிடையாது . எனவே மக்கள் எப்பொழுதுமே தங்களுடைய முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கத்திற்கும் ஒரு கணிசமான பகுதியை ஒதுக்க வேண்டும். தங்கத்தை நகையாக வாங்க முடியாது என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறுபவர்கள் தங்கம் சம்பந்தப்பட்ட ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். முழு பணத்தையும் தங்கத்திலேயே போடாமல் ஒரு குறிப்பிட்ட அளவை போட்டு வைப்பது நல்லது என சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?



Click it and Unblock the Notifications