நம் வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. திடீரென எதிர்பாராத பெரிய செலவுகள் ஏற்படலாம். அந்த நேரத்தில் உடனடி பணத் தேவையை சமாளிக்க, வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குவது அல்லது வங்கிகளில் தனிநபர் கடன்களை பெறலாம்.
இதனால் தனிநபர் கடன்கள் மற்றும் தங்கக் கடன்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. அதேசமயம் இந்த இரண்டு கடன்களில் எது சிறந்தது என்று கேள்வி பலருக்கு உள்ளது. முதலில் தனிநபர் மற்றும் தங்க கடன்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொண்டாலே உங்களுக்கு எந்த வகையான கடன் சிறந்தது என்பதை நீங்கள் தெரிந்து முடிவு செய்யலாம்.

கடன் ஒப்புதல் வாய்ப்பு
தனிநபர் கடன்கள்: இந்த கடன்களை பெற பிணையம் தேவையில்லாததால், கடன் வழங்குபவர்கள், கடன் விண்ணப்பதாரர்களை மதிப்பீடு செய்யும் போது எச்சரிக்கையான அணுகுமுறையை கையாளுவர். விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோர், மாதாந்திர வருமானம், வேலை விவரங்கள், வேலை பார்க்கும் நிறுவனத்தின் சுயவிவரங்கள் போன்ற பல காரணிகளை கருத்தில் கொண்டு கடன் தகுதியை வங்கிகள் மதிப்பீடு செய்கின்றன.
தங்க கடன்கள்: கடன் வாங்கியவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் அவர் அடமானம் வைத்த தங்கத்தை விற்று கடனை வசூலித்து கொள்ளலாம் என்பதால், தங்க கடன் விண்ணப்பதாரர்களை மதிப்பீடு செய்யும் போது கடன் வழங்குபவர்கள் மிகவும் நிதானமான அணுகுமுறையை கையாளுவர்.
எனவே, தனிநபர்கள் மோசமான கிரெடிட் ஸ்கோர் அல்லது கிரெடிட் அறிக்கை காரணமாக தனிநபர் கடன்களை பெற முடியாதவர்கள் தங்க கடன்களை பெறுவதை கருத்தில் கொள்ளலாம்.
வட்டி விகிதம்
தனிநபர் கடன்கள்: விண்ணப்பதாரரின் கடன் விவரம் மற்றும் கடன் வழங்குபவர்களின் கடன் விலை கொள்கை ஆகியவற்றை பொறுத்து, தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் பொதுவாக ஆண்டுக்கு 10.5 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. சில பொதுத்துறை வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்கலாம்.
தங்க கடன்கள்: கடன் காலம், கடன் தொகை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் விருப்பத்தை இந்த வகை கடன்களுக்கான வட்டி விகிதங்கள் பொறுத்து மாறுபடும்.
தங்க கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கு இடையே உள்ள வட்டி விகிதங்களில் உள்ள வேறுபாடு நல்ல கடன் விவரங்களை கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு அதிகமாக இருக்காது. இருப்பினும், மோசமான கிரெடிட் விவரங்களை கொண்டவர்களுக்கு தனிநபர் கடன்களை விட தங்க கடன்களின் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.
கடன் தொகை
தனிநபர் கடன்கள்: பொதுவாக இந்த பிரிவில் ரூ.50,000 முதல் 15 லட்சம் வரை வழங்கப்படுகிறது. சில கடன் வழங்குபவர்கள் ரூ.40 லட்சம் வரை வழங்குவதாக கூறப்படுகிறது. இருப்பினும், விண்ணப்பதாரரின் திருப்பி செலுத்தும் திறன் மற்றும் அவர் தேர்ந்தெடுத்த கடன் காலத்தை பொறுத்துதான் தனிநபர் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை நிர்ணயம் செய்யப்படும்.
தங்க கடன்கள்: கடன் பெறுபவர் பிணையமாக அளித்த தங்கத்தின் மதிப்பையும், கடன் வழங்குபவர் நிர்ணயித்த மதிப்பு கடன் விகிதத்தையும் (எல்டிவி) பொறுத்தது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள ஒழுங்குமுறை வரம்பு காரணமாக தங்க கடன் எல்டிவி விகிதம் 75 சதவீதத்தை தாண்ட முடியாது. அதாவது பிணையம் வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதத்துக்கு மேல் கடன் வழங்க முடியாது.
கடன் காலம்
தனிநபர் கடன்கள்: தனிநபர் கடன் காலம் பொதுவாக 1 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கும். சில கடன் வழங்குபவர்கள் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்குகின்றனர்.
தங்க கடன்கள்: தங்க கடன்களை திருப்பி செலுத்துவதற்கான காலம் மிகவும் குறுகியதாக இருக்கும். இருப்பினும் பெரும்பாலான கடனளிப்பவர்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை அவகாசம் கொடுக்கின்றனர். சில தங்க கடன் அளிப்பவர்கள் 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்குகிறார்கள்.
குறைவான திருப்பி செலுத்தும் காலம் குறைந்த வட்டி செலவுகளுக்கு வழிவகுக்கும். எனவே அதிக சமமான மாதாந்திர தவணைகள் மற்றும் கடனை குறுகிய திருப்பி செலுததும் திறன் பெற்றவர்கள் தங்க கடனை தேர்வு செய்ய வேண்டும். அதிக கடன தொகைகள் அல்லது குறைந்த திருப்பி செலுத்தும் திறன் காரணமாக நீண்ட கால அவகாசம் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள் தனிநபர்க கடன்களை தேர்வு செய்ய வேண்டும்.
கடன் வழங்குவதற்கான காலம்
தனிநபர் கடன்கள்: பெரும்பாலான கடன் அளிப்பவர்கள் தனிநபர் கடன்களை வழங்குவதற்கு 2 முதல் 7 வேலை நாட்களை எடுத்து கொள்கின்றன. இருப்பினும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள் 100 சதவீத டிஜிட்டல் கடன் மதிப்பீடு மற்றும் உள்கட்டமைப்பு செயல்முறையை அதிகரித்து வருவதால், ஆன்லைனில் கடனுக்காக விண்ணப்பம் செய்தவர்களில் நல்ல கடன் விவரங்களை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் அல்லது உடனடி கடன் வழங்குகிறார்கள்.
தங்க கடன்கள்: தனிநபர் கடன்களை விட தங்க கடன்கள் மிக வேகமாக வழங்கப்படுகிறது. கடன் வழங்குபவர்கள் தங்க கடனை விண்ணப்பித்த சில மணி நேரங்களுக்குள் வழங்குவார்கள். ஏனென்றால் அவர்கள் கடன் பெறுபவர் பிணையம் வைக்கும் தங்கத்தின் தரத்தில் மதிப்பிடுகின்றனர். கடன் பெறுபவரின் கடன் விவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
திருப்பி செலுத்தும் விருப்பங்கள்
தனிநபர் கடன்கள்: இந்த கடன்கள் இ.எம்.ஐ.க்கள் வடிவத்தில் செலுத்தப்படும். இதில் அசல் மற்றும் வட்டி அடங்கும். இருப்பினும் சில கடன் வழங்குபவர்கள் ஓவர் டிராப்ட் வசதிகள் வடிவில் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றனர். இதில் கடன் பெறுபவருக்கு கடன் வரம்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடன் பெற்றவர் தனது பணப்புழக்கத்திற்கு ஏற்ப பலமுறை திரும்ப பெறலாம் மற்றும் டெபாசிட் செய்யலாம். பயன்படுத்தப்பட்ட வரம்பின் அடிப்படையில் வட்டி விதிக்கப்படும்.
தங்க கடன்கள்: கடன் வழங்குபவர்கள் தங்க கடன்களை திரும்ப செலுத்தும் முறையில் ஏராளமான தேர்வுகளை வழங்குகிறார்கள். வழக்கமான இ.எம்.ஐ. தவிர்த்து, தங்க கடன் வாங்கியவர்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி தொகையை மட்டும் செலுத்தும் மற்றும் முதன்மை தொகையை முதிர்வு காலத்தில் திரும்ப செலுத்தும் வசதியை கடன் அளிப்பவர்களிக்கிறார்கள். சில கடன் வழங்குபவர்கள் வட்டியை கடன் வழங்கும்போது முன்கூட்டியே திருப்பி செலுத்த அனுமதிக்கின்றனர். அதேசமயம் கடன் முதிர்வு காலத்தில் அசல் தொகையை திருப்பி செலுத்த அனுமதிக்கின்றனர். சில கடன் அளிப்பவர்கள் வட்டி மற்றும் அசலை கடன் முதிர்வின்போது திருப்பி செலுத்த அனுமதிக்கின்றனர்.
தங்க கடன்களில் இ.எம்.ஐ. அல்லாத திருப்பி செலுத்தும் விருப்பங்கள், திருப்பி செலுத்தும் நெகிழ்வுத் தன்மை விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கும், அவர்களின் குறுகிய கால பணப் புழக்கத்தில் உள்ள முரண்பாடுகளை நிர்வகிக்க நிதி தேவைப்படுபவர்களுக்கும் இது சரியாக இருக்கும். அதேசமயம், அதிக திருப்பி செலுத்தும் நெகிழ்வுத்தன்மையை விரும்பும் கடனாளிகள் தங்க கடன்களுக்கு மாற்றாக தனிநபர் கடன் ஓவர் டிராப்ட் வசதிகளையும் கருத்தில் கொள்ளலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications