இன்றைய நவீன உலகில், குடும்பத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாது, பொருளாதாரத்தின் முக்கிய தூணாகவும் பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள். ஒரு பெண் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும், அவளுக்கும் அவள் சார்ந்த குடும்பத்திற்கும் ஒரு வலுவான பாதுகாப்பு அரணாக அமைகிறது.
முதலீடு என்பது ஆண்களுக்கானது, பெரிய வணிகர்களுக்கானது என்ற பிம்பத்தை உடைத்து, புத்திசாலித்தனமாக திட்டமிட்டு முதலீடு செய்யும் பெண்கள், தங்கள் எதிர்காலத்தை மட்டுமல்ல, தங்கள் கனவுகளையும் தாங்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். உழைப்பால் ஈட்டிய பணத்தை, வெறும் சேமிப்பாக மட்டும் வைக்காமல், அதை வளரும் முதலீடாக மாற்றுவது எப்படி? உங்கள் நிதி சுதந்திரத்தை உறுதி செய்யும் அந்தச் சிறந்த வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கான பிரத்யேக திட்டங்கள் குறித்த விரிவான அலசல் இதோ..

பெண்களுக்கான சிறப்பு பிக்சட் டெபாசிட் ( FD)
நீங்கள் எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் உங்கள் பணம் பாதுகாப்பாக வளர வேண்டும் என்று விரும்பினால், பெண்களுக்கான பிரத்யேக FD திட்டங்கள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். பல வங்கிகள் சாதாரண வாடிக்கையாளர்களை விட, பெண்களுக்கு 0.25% கூடுதல் வட்டி வழங்குகின்றன. இதுவே முதியவர்கள் எனில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, சாதாரண பொதுமக்களை விட 0.50% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. இது பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்திற்கு உகந்த திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
நீண்ட கால லாபத்திற்கு SIP
சிறிய தொகையை முதலீடு செய்து, காலப்போக்கில் பெரிய தொகையை ஈட்ட விரும்புகிறீர்கள் என்றால், மியூச்சுவல் ஃபண்டில் உள்ள SIP உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். மாதம் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம், நீண்ட காலத்தில் சந்தையின் வளர்ச்சியோடு இணைந்து சிறப்பான லாபத்தை பெறலாம்.
அரசு உத்தரவாதத்துடன் NSC
மத்திய அரசின் பாதுகாப்பான மற்றும் நீண்ட கால சேமிப்பு திட்டங்களில் ஒன்றான தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டமாகும். இதன் முதிர்வு காலம் 5 முதல் 10 ஆண்டுகள். இதற்கான வட்டி விகிதம் தற்போதைய சூழலில் 7.7% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கும் பெறலாம். ஆக இது பாதுகாப்பாக வரி சலுகையுடன் முதலீடு செய்ய நினைக்கும் பெண்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு.
ஓய்வுக்கால நிதியை எங்கே முதலீடு செய்வது? SCSS Vs Senior citizen FD ? எது பெஸ்ட்?
ஓய்வுக்காலத்திற்கான பாதுகாப்பு - NPS
உங்கள் முதுமையின் தேவைகளுக்காக இப்போதே திட்டமிடுவது புத்திசாலித்தனம். தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS), உங்கள் ஓய்வு காலத்திற்கு பிறகு மாதம் தோறும் பென்ஷன் (ஓய்வூதியம்) கிடைக்க வழிவகை செய்கிறது. உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை இதில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரி சலுகையையும் பெறலாம்.
நிதி சுதந்திரம் என்பது வெறும் ஆசையல்ல, அது ஒவ்வொரு பெண்ணின் உரிமை. சிறிய முதலீடுகளே உங்கள் எதிர்காலத்தின் பெரிய அடித்தளமாக அமையும். இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் இன்றே முதலீட்டை தொடங்குங்கள். உங்கள் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications