தங்கம் நம்முடைய கலாச்சாரத்தோடு தொடர்புடைய ஒரு உலோகம் நம் வீட்டின் அனைத்து விசேஷங்களிலும் தங்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவேதான் தங்கத்தின் விலை ஏறுவது நேரடியாகவே சாமானிய மக்களை பெரிய அளவில் பாதிப்படையச் செய்கிறது .
தங்கம் விலை: தங்கத்தை நாம் முதலீடாக பார்க்காமல் நம்முடைய அந்தஸ்தில் ஒன்றாக பார்க்கிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தின் விலை என்பது நகரத்திற்கு நகரம் மாறுபடுகிறது. சென்னையில் விற்கக்கூடிய அதே விலைக்கு மும்பையில் நம்மால் தங்கத்தை வாங்க முடியாது. உதாரணமாக திருவனந்தபுரத்தில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10,280 ரூபாய்க்கும் சென்னையில் 10,290 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரே நாடு ஆனால் நகரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏன் மாறுபடுகிறது என்பதை நாம் தற்போது தெரிந்துகொள்ள போகிறோம்.

வரிகள்: தங்கத்தின் விலையை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. உலக அளவில் அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யக்கூடிய ஒரு நாடு இந்தியா. இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் போது அதற்கான இறக்குமதி வரியை நாம் செலுத்த வேண்டி இருக்கிறது. கூடுதலாக நகையாக வாங்கும் போது ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் உள்ளிட்டவற்றை செலுத்துகிறோம். பல்வேறு நகரங்களிலும் தங்கத்தின் விலை அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படக்கூடிய வரி அடிப்படையில் மாறுகிறது. சில உள்ளூர் வரி விதிப்புகள் தங்கத்தின் விலையில் மாற்றத்தை கொண்டு வருகின்றன.
போக்குவரத்து செலவு: தங்கத்தை பொதுவாக நாம் மும்பை சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் துறைமுகங்கள் வாயிலாக தான் இறக்குமதி செய்கிறோம். அங்கிருந்து பின்னர் பல்வேறு பகுதிகளுக்கும் அது அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த போக்குவரத்து செலவுகள் என்பது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .உதாரணமாக சென்னையில் இறக்குமதி செய்யப்படக்கூடிய தங்கத்தை சென்னைக்குள்ளேயே இடமாற்றம் செய்வதற்கான செலவையும் சென்னையிலிருந்து ஒரு வட மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்கான செலவும் மாறுபடும். ஒவ்வொரு நகரத்திற்கும் தங்கத்தின் விலை மாறுவதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது .
தங்கத்திற்கான தேவை: நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் தங்கத்திற்கான தேவை என்பது ஒவ்வொரு விதமாக இருக்கிறது. சில மாநிலங்களில் கலாச்சார ரீதியாக அதிக தொடர்பு இருப்பதால் தங்கத்திற்கான டிமாண்ட் அங்கே அதிகமாக இருக்கும் போது. இதனால் போட்டி அதிகரிக்கும் இதன் மூலம் தங்கத்தின் விலை உயரலாம் அல்லது இந்த போட்டியை சமாளிக்க நகை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தங்கத்தை தரலாம் . எனவே அந்த ஊரில் இருக்கக்கூடிய டிமாண்ட் பொறுத்து தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் என்பது இருக்கிறது.
ஹால்மார்க்: இந்தியாவில் தங்க நகையின் தூய்மை தன்மையை உறுதிப்படுத்த ஹால்மார்க் என்பது கட்டாயமாகிறது. இதனை பிஐஎஸ் எனப்படும் அமைப்புதான் கண்காணிக்கிறது. ஆனால் அனைத்து நகரங்களிலும் இந்த ஹால்மார்க் மையங்கள் கிடையாது . நகைக்கடை நிறுவனங்கள் ஹால்மார்க் மையங்கள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு தங்கத்தை அனுப்பி அதற்கான சான்றிதழை பெற்று தங்கள் ஊருக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இந்த போக்குவரத்து செலவையும் சேர்த்து தான் நமக்கு தங்கத்தின் விலை மாறுகிறது.
உள்ளூர் சந்தையின் தேவையை , உலக பொருளாதார சூழல் ஆகியவற்ற்ஐ பொறுத்து நகை வியாபாரிகள் மற்றும் சங்கத்தினர் தான் தங்கம் விலையை முடிவு செய்கிறார்கள், ஒவ்வொரு நகருக்கும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications