தங்க நகைக் கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடனாகும்., இதில் கடன் வாங்குபவர்கள் தங்களுடைய தங்க ஆபரணங்கள் அல்லது நாணயங்களை கடன் வழங்கும் நிறுவனத்தில் அடமானமாக வைத்து தேவைப்படும் பணத்தை உடனடியாக வாங்கிக் கொள்ளலாம்.
அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் தூய்மை, எடையின் அடிப்படையில் இந்தக் கடன் வழங்கப்படும். தங்க நகைக் கடன்கள் பொதுவாக எளிய நடைமுறைகள், குறைந்தபட்ச ஆவணங்கள் ஆகியவற்றோடு தரப்படும்.

பர்சனல் கடன் போன்ற பாதுகாப்பற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது இதில் வட்டி விகிதங்கள் குறைவாகவே இருக்கும். திடீரென ஏற்படும் மருத்துவ அவசரச் செலவுகள், பிள்ளைகளின் கல்விச் செலவுகள், தொழில் அல்லது குடும்பத்தில் திடீரென ஏற்படும் தேவைகள், சொத்து வாங்குதல் போன்ற காரணங்களுக்கு தங்க நகைக்கடன்கள் மிகவும் பயனுள்ளதாகும்.
தேவைப்படும் போது நமக்குத் தேவையான பணம் இந்தக் கடன் மூலமே மிக விரைவான நேரத்தில் கிடைக்கும். இதற்கு கிரெடிட் ஸ்கோர் எல்லாம் தேவையில்லை, வேண்டும்போது அடகு வைத்து பணம் வாங்கலாம்.
நினைத்தபோது பணம் செலுத்தி நகையை மீட்கலாம். வங்கிகள், பிரபல வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் அடகு வைத்த நகைகளுக்கு காப்பீடும் இருப்பதால் எந்தபயமும் தேவையில்லை. தங்க நகைக் கடன்கள் வாங்கும்போது நீங்கள் சரிபார்க்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இருக்கிறது.
நாட்டுடமையான வங்கிகளை விட தனியார் வங்கிகளும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் கூடுதல் வட்டியை வசூலிக்கின்றன. எனவே எந்த நிறுவனத்தில் உங்களுக்குத் தோதான குறைந்த வட்டி கிடைக்கிறதோ அதில் கடன் வாங்குவதுதான் லாபமாகும்.
விவசாயிகளுக்கு வங்கிகளில் தங்க நகைக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு அவர்களது நிலப்பட்டாவை வங்கியில் காண்பித்தால் மற்றவர்களைக் காட்டிலும் மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.
அனைத்து நிறுவனங்களுமே கடனுக்கு ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீத வட்டியை அறிவித்திருப்பார்கள். பொதுமாக மக்களிடையே உள்ள சிந்தனை என்னவென்றால் ஓராண்டு காலம் முடிந்து கெடு வந்தவுடன் நகையை திருப்பிக் கொள்ளலாம் என்று சாவதானமாக இருந்து விடுவார்கள்.
பின்னர் நகையைத் திருப்பும்போது கணக்கிட்டால் வங்கி சொன்ன சதவீதத்தை விட வட்டியானது அதிகமாக இருக்கும். காரணம், வங்கி வட்டி விகிதம் ஆண்டுக்கு என அறிவிக்கப்பட்டாலும் அதை மாதா மாதம்தான் செலுத்த வேண்டும்.
அந்தந்த மாதத்துக்கு வட்டியை செலுத்திவிட்டால் வங்கி அறிவித்த அதே வட்டிதான் வசூலிக்கப்படும். இது பல பேருக்குத் தெரியவில்லை. எனவே இனியாவது மாதா மாதம் தங்க நகைக் கடன்களுக்கான வட்டியை செலுத்தத் தவற வேண்டாம்.
அத்தோடு மொத்தமாக ஆண்டு முடிவில் அதிக பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்காது. சிரமமில்லாமல் நகையைத் திரும்ப மீட்கலாம்.
தங்க நகைக் கடன் வாங்கும்போது அதன் தூய்மையை பரிசோதிக்க நிறுவனங்களில் ஒரு அப்ரைஸர் இருப்பார். அவர்தான் தங்கத்தின் தூய்மையை பரிசோதித்து உறுதிப் படுத்துவார்.
இதற்காக அப்ரைஸர் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். இதைத் தவிர வேறு பிராஸசிங் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
இத்துடன் நகையின் மதிப்பு கணிசமாக உயர்ந்தால் அடகு வைக்கப்பட்டுள்ள நகையை மீட்காமலேயே மறுஅடகு வைத்து கூடுதல் தொகையை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
அதேபோல நகையின் மதிப்பு கணிசமாகக் குறையும்போது கடன் தொகையை விட நகையின் மதிப்பு கிட்டத்தட்ட நிகராக வந்தால் உடனடியாக நகையை மீட்கச் சொல்லுவார்கள் அல்லது நிலுவை வட்டியையும், வங்கி அப்போது நிர்ணயிக்கும் நகை மதிப்பை ஈடுசெய்யும் கூடுதல் பணத்தை கட்டச் சொல்வார்கள்.
எப்படிப்பார்த்தாலும் மற்ற எந்தவிதக் கடன் திட்டங்களையும்விட தங்க நகைக்கடன்தான் மக்களுக்கு மிகவும் பலன் தரக் கூடிய ஒன்றாகும். மிகப் பாதுகாப்பானதும்கூட.
தற்போது சந்தையில் தங்க கடனுக்கான வட்டி விகிதம்
பேங்க் ஆஃப் இந்தியா - வருடத்திற்கு 8.80% முதல்
கனரா வங்கி - வருடத்திற்கு 9.25%
பஞ்சாப் நேஷனல் வங்கி - வருடத்திற்கு 9.25% முதல்
IIFL பைனான்ஸ் - வருடத்திற்கு 11.88%-27%
Rupeek - வருடத்திற்கு 8.88% முதல்
ஐசிஐசிஐ வங்கி - வருடத்திற்கு 10%
ஆக்சிஸ் வங்கி - வருடத்திற்கு 17% -19%
இந்தியா தங்கம் - மாதத்திற்கு 0.77%
பாரத ஸ்டேட் வங்கி - வருடத்திற்கு 8.75% முதல்
பஜாஜ் ஃபின்சர்வ் - வருடத்திற்கு 9.50% - 28%
Story Written By: I. Jayachandran
More From GoodReturns

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications