பிரபல முதலீட்டாளரும் சமூக வலைதள பிரபலமான அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா தனது சமீபத்திய டிவிட்டர் பதிவில் ஒரு வருடத்தில் 100% அதிகமான லாபத்தை தங்கம் கொடுத்த பின்பும், தங்கம் மீதான முதலீட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பதிவு முதலீட்டாளர்களிடையே பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
தங்க விலை உயர்ந்து கொண்டிருந்தாலும், அதில் முதலீடு செய்ய தான் ஆர்வமில்லை என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார். தங்கம், வெள்ளியில் முதலீட்டு செய்யும் வாய்ப்பை தான் தவறவிட்டுள்ளதாகவும், இதற்கு மாறாக தனது மொத்த முதலீட்டு போர்ட்போலியோவில் பங்குச் சந்தையில் 80 சதவீதம் முதலீடு செய்து 45 சதவீதம் வருமானம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தங்கம் vs பங்கு என்ற விவாதத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.

அக்ஷத் தனது பதிவில், தங்க விலை உயர்வால் தற்போது அனைவரும் தங்க முதலீட்டு நிபுணர்களாக மாறிவிட்டதாக கிண்டலடித்துள்ளார் அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா. தான் தங்கத்தில் 0 சதவீதம் முதலீடு செய்து மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். வேறு இடங்களில் வருமானம் ஈட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் தங்கத்தை ஒருபோதும் நான் வாங்கமாட்டேன் என்று சொல்லவில்லை. விலை சரியான அளவுக்கு குறைந்தால் மட்டுமே வாங்குவேன் என்று தெளிவுபடுத்தினார். FOMO (Fear Of Missing Out) என்ற உணர்ச்சியால் துரத்தி வாங்குவதில் ஆர்வமில்லை, லாபமும் இல்லை என்று கூறினார்.
தங்க விலை உயர்வு தொடர்ந்தாலும், அது 50 DMA (Daily Moving Average) அளவுக்கு திரும்பும் என்று அக்ஷத் சுட்டிக்காட்டினார். RSI குறியீடு தங்கம் "அதிக வாங்கப்பட்டது" (overbought) என்று காட்டுகிறது. எனவே இப்போது வாங்குவது நல்ல நேரமல்ல என்று எச்சரித்தார். விலை எவ்வளவு குறையும், எப்போது குறையும் என்பதைப் பொறுத்து வாங்கலாம் என்று அறிவுறுத்தினார்.
இதேவேளையில் அமெரிக்க பங்குகள் இந்த ஆண்டு சிறப்பாக செயல்படும் என்று அக்ஷத் கணித்துள்ளார். டாலர் பலவீனமடைவதால் தங்கம் போன்ற கடின சொத்துகள் (Hard Asserts) உயர்வது மட்டுமல்ல, டாலரில் அளவிடப்படும் அனைத்து சொத்துகள் (பங்குகள் உட்பட) விலை உயரும் என்று விளக்கினார்.
தங்கம்/வெள்ளியில் 200 சதவீதம் வருமானம் கிடைத்தது போல் தோன்றினாலும், அது சிறிய அளவிலான நன்மை அளிப்பதாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளையில் தங்க முதலீட்டாளர்களுக்கு அக்ஷத் மூன்று கேள்விகளை எழுப்பினார்.
1) லாபத்தை எப்போது எடுப்பீர்கள்?
2) லாபத்தை எடுத்தால் எங்கு மறு முதலீடு செய்வீர்கள்?
3) உங்கள் மொத்த சொத்தில் எத்தனை சதவீதம் தங்கத்தில் முதலீடு செய்தீர்கள்?
இந்த கேள்விகள் தங்க முதலீட்டாளர்களுக்கு புதிய கோணத்தை கொடுத்துள்ளது. இதோடு அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா தன்னுடைய சொந்த முதலீட்டு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
தன்னுடைய மொத்த முதலீட்டு சொத்தில் 80 சதவீதம் பங்குகளில் முதலீடு செய்துள்ளார். ஆப்ஷன்கள் (options) மூலம் ஆண்டுக்கு 10-12 சதவீதம் பணப்புழக்கம் பெறுகிறார். கூகுளில் 100 சதவீதம் வருமானம் கிடைத்து சில லாபத்தை எடுத்து மெட்டாவில் மறு முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தங்க முதலீட்டில் கிடைத்த உயர்வை தவறவிட்டாலும், அவரது போர்ட்ஃபோலியோ (டாலர் முதலீடு) இந்த ஆண்டு ரூபாய் அடிப்படையில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
நல்ல முதலீடு என்பது சந்தை டிரெண்டை துரத்தி 1 என்ற சிறிய முதலீட்டை 3 ரூபாயாக மாற்றுவது அல்ல என்று அக்ஷத் வலியுறுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் மொத்த சொத்தை கணிசமான சதவீதம் உயர்த்துவதே உண்மையான முதலீடு என்று கூறினார். தங்கத்தில் சிறிய அளவு (5-10%) முதலீடு செய்து பெரும் வருமானம் பார்த்தாலும், மீதி 95 சதவீத சொத்து எங்கு உள்ளது என்று சிந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா.
இந்த பதிவு முதலீட்டாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் உயர்ந்து கொண்டிருந்தாலும், பங்கு சந்தை போன்ற வேறு வாய்ப்புகளை பயன்படுத்தலாம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சாதாரண மக்களுக்கு இது முதலீட்டு திட்டங்களை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை அளிக்கிறது. நீண்டகால முதலீட்டில் பல்வகைமை (diversification) முக்கியம் என்று இந்த பதிவு மீண்டும் நினைவூட்டுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications