2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை உலகம் முழுவதுமே தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை உயர்வது வாடிக்கைதான் ஆனால் இந்த ஆண்டு தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியின் விலை உயர்ந்து வருவது தான் ஆச்சரியம் தருகிறது.
ரூபாய் மதிப்பில் பார்க்கும் போது தங்கத்தின் விலை இந்த ஆண்டில் மட்டும் 40 சதவீதம் தங்கத்தின் விலை இந்த ஆண்டில் 40 சதவீதமும் டாலர் மதிப்பில் பார்க்கும்போது சுமார் 37% உயர்ந்திருக்கிறது அதேவேளையில் வெள்ளி இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை ரூபாய் மதிப்பில் பார்க்கும் போது 50 சதவீதமும் டாலர் மதிப்பில் பார்க்கும் போது 46 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. அதாவது தங்கத்தை விட வெள்ளி கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிக லாபம் தந்திருக்கிறது.

பாதுகாப்பான முதலீடு என்றாலே அனைவரும் தங்கத்தை நோக்கி தான் செல்வார்கள் காலம் காலமாக இதுதான் நடந்து கொண்டு வருகிறது. பெரிய பெரிய நாடுகளின் மத்திய வங்கிகளில் தொடங்கி ஒரு சாதாரண குடும்பம் வரை தங்கம் தான் வரலாறு வரலாற்று ரீதியாகவே பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது.
அண்மைக்காலமாக வெள்ளியையும் ஒரு பாதுகாப்பான முதலீடாக அனைவரும் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதுவும் வெள்ளியின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஏனெனில் வெள்ளிக்கான டிமான்ட் அதிகரித்துள்ளது. ஒரு பொருளுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் போது அதன் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டுகிறது. அதுதான் தற்போது வெள்ளியில் நடக்கிறது.
வெள்ளியை பொருத்தவரை நாம் ஆபரணங்களாகவும் பொருட்களாகவும் வாங்கி பயன்படுத்துவதை தாண்டி தற்போது தொழில் துறை ரீதியாக வெள்ளிக்கான தேவை என்பது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இதுதான் வெள்ளியின் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம். ஏனெனில் வெள்ளிக்கான டிமாண்ட் இருக்கும் அளவிற்கு சப்ளை இல்லை . இதுவே தங்கத்தை விட வெள்ளியின் மதிப்பு உயர்ந்திருப்பதற்கு காரணம்.
உலக அளவில் தற்போது மின்சார வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட தொடங்கிவிட்டன. இவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது . அதில் ஒரு முக்கியமான ஒரு பொருளாக வெள்ளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூரிய ஒளி சக்தி மின் உற்பத்தியிலும் பல்வேறு நாடுகளும் கவனம் செலுத்துகின்றன . இந்த தொழில்நுட்பத்திற்கும் வெள்ளியின் தேவை என்பது அதிகமாக இருக்கிறது.
நாம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்கள் , ஏஐ சிப்கள் என மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கும் அனைத்து பொருட்களிலும் வெள்ளி முக்கியமான அங்கம் வகிப்பதால் தொழில் ரீதியாக அதன் தேவை அதிகரித்து அதன் விலையும் அதிகரித்து வருகிறது . அடுத்த வரும் ஆண்டுகளிலும் வெள்ளியின் விலை தொடர்ந்து இதேபோல வளர்ச்சியில் தான் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படி என்றால் வெள்ளிக்கான முதலீடு அதிகரிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு நிபுணர்கள் எப்பொழுதுமே நம்முடைய முதலீட்டை ஒரே ஒரு பொருளில் குவித்து விடக்கூடாது ஒரு பகுதி தங்கம் , கணிசமான பகுதி வெள்ளி கணிசமான பகுதி ஈகிவிட்டி என பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.
கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின் நிதி துறை பேராசிரியர் தோஷானி பங்குச்சந்தை உயரும் போது வெள்ளி விலை உயரும் என தெரிவிக்கிறார். அதாவது தொழில்துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்திருப்பதால் பங்குச்சந்தை உயரும் போது வெள்ளியின் விலையும் உயரும் பங்கு சந்தை சரிவடைந்தால் வெள்ளியின் விலை சரியும் என கூறுகிறார். முதலீட்டாளர்கள் வெள்ளி விலை உயர்கிறதே என அதிலேயே பணத்தை குவிக்காமல் தங்கம் , வெள்ளி, ஈக்விட்டி என பிரித்து முதலீடு செய்ய அறிவுரை வழங்குகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!



Click it and Unblock the Notifications