இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதி ரீதியாக மிக முக்கியமான அடையாளமாக இருப்பது பான் கார்டு (PAN Card) தான். வருமான வரி தாக்கல் முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை, பணப் பரிவர்த்தனை நடக்கும் அனைத்து இடங்களிலும் இது ஒரு தவிர்க்க முடியாத ஆவணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது வருமான வரிச் சட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் முக்கிய மாற்றங்கள், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளன.
பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த சிக்கலான பழைய விதிகளுக்கு விடை கொடுத்துவிட்டு, வரி நிர்வாகத்தை எளிமையாக்கும் முயற்சியில் அரசு இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, சாமானிய மக்கள் அன்றாட வாழ்வில் செய்யும் பணப் பரிவர்த்தனைகள், சொத்து வாங்குதல், வாகன கொள்முதல் மற்றும் வங்கி சேமிப்பு போன்றவற்றில் பான் கார்டு சமர்ப்பிப்பதற்கான வரம்புகளை அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றங்கள் வரி செலுத்துபவர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்குமா? எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு கட்டாயம்? எந்தெந்த தேவைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

தற்போது உள்ள விதியின் படி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை (வீடு, மனை, பிளாட்) வாங்கவோ அல்லது விற்கவோ பான் கார்டு சமர்ப்பிப்பது கட்டாயம். ஆனால் ஏப்ரல் 1 முதல் இந்த வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் 20 லட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்பிலான சொத்துக்களை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த புதிய மாற்றமானது சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் சாமானிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
பான் கார்டு கையில் இல்லையா? டிஜிட்டல்e-PAN கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?
உதாரணமாக நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காலி மனையை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தற்போதைய விதியின்படி, 10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ளதால், நீங்கள் பான் கார்டை கட்டாயம் காட்ட வேண்டும். ஆனால் ஏப்ரல் 1-க்குப் பிறகு இந்த 15 லட்ச ரூபாய் சொத்து பரிவர்த்தனைக்கு நீங்கள் பான் கார்டு காட்ட தேவையில்லை. இது தேவையற்ற காகித வேலைகளை குறைத்து, உங்கள் பணப் பரிவர்த்தனையை மிகவும் எளிதாக்கும்.
இதே சொத்துக்களை பரிசாக வழங்குதல் அல்லது கூட்டு கட்டுமான ஒப்பந்தங்கள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் போதும் இந்த புதிய விதி பொருந்தும். சொத்தின் மதிப்பு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே பான் கார்டு கட்டாயம் தேவைப்படும். சமீப காலங்களாக அதிகரித்து வரும் சொத்து மதிப்புகளை கருத்தில் கொண்டே அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
பான் கார்டு எண்ணில் உங்க ஜாதகமே இருக்கு.. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ரகசியம் இருக்கு..!
இந்த புதிய விதியானது பான் கார்டை ஒழித்து கட்ட கொண்டு வரப்படவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக மக்களின் சுமையை கருத்தில் கொண்டு இவ்விதி அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து பெரிய அளவிலான சொத்து பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணித்து, அவற்றை வருமான ஆதாரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கவே இந்த விதி அமல்படுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications