பான் கார்டு கையில் இல்லையா? டிஜிட்டல்e-PAN கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?

வங்கி கணக்கு தொடங்குவது முதல் வருமான வரி தாக்கல் செய்வது வரை, இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு (PAN Card) என்பது நமது நிதி வாழ்வின் முக்கிய அடையாள சீட்டாக மாறிவிட்டது. பல நேரங்களில் அவசர தேவைகளுக்காக பான் கார்டு எண் தேவைப்படும்போது, அசல் கார்டு நம் கையில் இல்லாமல் இருக்கலாம் அல்லது தொலைந்து போயிருக்கலாம். இதற்காக நீங்கள் கவலைப்படவோ, மீண்டும் புதிய கார்டுக்கு விண்ணப்பித்து வாரக்கணக்கில் காத்திருக்கவோ தேவையில்லை.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இப்போது உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே சில நிமிடங்களில் e-PAN எனப்படும் டிஜிட்டல் பான் கார்டை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இது அசல் பான் கார்டுக்கு இணையான சட்டப்பூர்வ அங்கீகாரம் கொண்டது. உங்கள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு, வருமான வரித் துறையின் இணையதளத்தில் இருந்தும், NSDL அல்லது UTIITSL தளம் மூலமாகவும் மிக எளிதாக இ-பான் கார்டை டவுன்லோட் செய்யலாம். அதை எப்படி பெறுவது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

பான் கார்டு கையில் இல்லையா? டிஜிட்டல்e-PAN கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?

உதாரணத்திற்கு வருமான வரி தாக்கல் தளத்தில் எப்படி டவுன்லோட் செய்வது என பார்ப்போம்.
வருமான வரி தாக்கல் தளத்தில் இருந்து எப்படி?
ஸ்டெப் 1: முதலில் உங்களுடைய கணினியிலோ அல்லது ஸ்மார்ட்போனிலோ https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லுங்கள்.
ஸ்டெப் 2: அங்கு Quick links என்ற தலைப்பின் கீழ் இருக்கும் Instant e-Pan என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: அதில் உங்களுடைய Check Status| Download e- Pan என்பதன் கீழாக இருக்கும் Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: அடுத்து தொடங்கும் பக்கத்தில் உங்களுடைய ஆதார் எண் கேட்கும். அதை கொடுத்து, Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்களுடைய ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-ஐ கொடுத்து செக் செய்துவிட்டு Continue என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: அடுத்து Downloand e-Pan என்பதை கிளிக் செய்து, e- pan-ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பான் - ஆதார் இன்னும் லிங்க் பண்ணலயா? ஆன்லைனில் ஈஸியா லிங்க் செய்வது எப்படி?
NSDL தளத்தில் இருந்து எப்படி?
ஸ்டெப் 1: உங்களுடைய பான் கார்டை NSDL தளத்தில் இருந்து டவுன்லோட் செய்ய முதலில் அதன் அதிகாரப்பூர்வ தளமான https://tinpan.proteantech.in/ என்ற தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்டெப் 2: கீழாக உள்ள Pan Services Links என்ற பிரிவில் இருக்கும், Request for e-PAN/ e-PAN XML (PANs allotted in last 30 days) அல்லது Request for e-PAN/ e-PAN XML (PANs allotted in prior 30 days) என்பதில் , உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: அங்கு Acknowledgement Number மற்றும் உங்களுடைய பிறந்த தேதி, கேப்ட்சா உள்ளிட்டவற்றை கொடுத்து சப்மிட் கொடுக்கவும்.
ஸ்டெப் 4; உங்களுடைய மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி அல்லது ஏதேனும் ஒன்றை கொடுத்து ஓடிபி ஜெனரேட் செய்யவும்.
ஸ்டெப் 5; ஓடிபி-ஐ பதிவு செய்து, Validate என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: அதன் பிறகு திரையில் வரும் Download PDF என்ற ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
UTIITSL தளத்தில் எப்படி?
ஸ்டெப் 1: இதற்கு நீங்கள் யுடிஐயின் https://www.pan.utiitsl.com/ என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அங்கு முகப்பு பக்கத்தில் உள்ள பான் சர்வீசஸ் என்ற ஆப்சன் கீழாக இருக்கும் டவுன்லோட் e -Pan என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: அங்கு உங்களுடைய பான் எண், பிறந்த மாதம், வருடம், கேப்ட்சா உள்ளிட்டவற்றை கொடுத்து சப்மிட் கொடுக்கவும்.
ஸ்டெப் 4: உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடிக்கு ஒரு லிங்க் வரும்.
ஸ்டெப் 5: மெயிலுக்கு வரும் லிங்கை பயன்படுத்தி, ஓடிபி கொடுத்து e பான் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+