தங்கம் விலை மேலும் குறையும்..!! உலக தங்க கவுன்சில் வெளியிட்ட குட் நியூஸ்..!!

உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கம் விலை கடந்த ஒரு மாத காலமாகவே பெரிய அளவில் விலை சரியவும் இல்லை , உயரவும் இல்லை. ஒரு வித தேக்க நிலையிலேயே இருக்கிறது. ஜூன் மாதம் 10% வரை குறைந்த தங்கம் ஜூலையிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி அன்று ஆபரண தங்கம் 1 கிராம் விலை 14,500 ரூபாய். இதுவே ஜூன் 30ஆம் தேதி 13,200 ரூபாய் என விலை குறைந்திருந்தது. அதுவே ஜூலை மாதம் 1ஆம் தேதி 13,250 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 13,215 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் தங்கம் விலை பெரிதாகவே மாறவில்லை. கடந்த வாரம் தொடர்ந்து 5 நாட்கள் தங்கம் விலை உயர்ந்தது ஆனால் பின்னர் விலை குறைந்துவிட்டது.

தங்கம் விலை மேலும் குறையும்..!! உலக தங்க கவுன்சில் வெளியிட்ட குட் நியூஸ்..!!

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க அரசு பத்திரங்களில் கிடைக்கும் லாப விகிதம் அதிகரித்து வருவது ஆகியவை தங்கம் விலை சரிய காரணம். ஈரான் போர் நிச்சயமற்ற நிலையும் தங்கம் விலை மாறாமல் இருக்க மற்றொரு காரணம். இருப்பினும், இந்த தேக்கநிலை தற்காலிகமானதுதான் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க அரசு பத்திரங்களின் மீதான வருவாய் அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற வட்டி தராத சொத்துக்களில் இருந்து தங்கள் கவனத்தைத் திருப்பி, பத்திரங்கள் பக்கம் செல்கின்றனர். அது தவிர உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக இருப்பதால், தங்கத்தின் விலை அழுத்தத்தை சந்தித்து வருகிறது என தெரிவிக்கிறது.

Also Read

நீண்ட காலத்திற்கு பின் தங்கம் விலை உலக சந்தையில் கடந்த வாரம் 4000 டாலர்களுக்கு மேல் சென்றது. லண்டன் சந்தையிலும் தங்கம் விலை 1.8% உயர்ந்தது. ஆனால் இது தற்காலிகமான உயர்வு தான் என தங்க கவுன்சில் கூறுகிறது. விலை குறையும் போது வாங்கலாம் என்ற முதலீட்டாளர் போக்கு , மேக்ரோ பொருளாதார சூழல்களே தற்காலிக தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என தங்க கவுன்சில் தெரிவிக்கிறது.

தங்கம் விலை மேலும் குறையும்..!! உலக தங்க கவுன்சில் வெளியிட்ட குட் நியூஸ்..!!

தொழில்நுட்ப ரீதியாக தங்கம் விலை போக்கை ஆய்வு செய்தால் உலக சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் 4,020 டாலராக வர்த்தகமாகும் தங்கம் விலை 3,857 டாலர்கள் வரை சரிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது. அதாவது தங்கம் விலை குறையும் என்கிறது. உலக சந்தையில் விலை குறைந்தால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சரியும்.

Recommended For You

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய தலைவர் கெவின் வார்ஷ் , வட்டி விகிதத்தை பெரும்பாலும் மாற்ற மாட்டார். எனவே அமெரிக்க வட்டி சார்ந்த முதலீடுகள் தான் முதலீட்டாளர்களின் விருப்பமான முதலீடுகளாக திகழும். எனவே அது இன்னும் தங்கம் விலையில் அழுத்தத்தை கொண்டு வந்து விலையை குறைக்க செய்யும் என கணிக்கிறது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றங்கள் பணவீக்கம் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இது வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு வலுசேர்த்துள்ளது என தெரிவிக்கிறது. எனவே தங்கம் விலை கடந்த வாரம் உயர்ந்தது ஒரு தற்காலிகம் தான் வரும் நாட்களில் இன்னும் விலை குறைவதற்கான வாய்ப்புகளே தென்படுகிறது என கூறுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+