சென்னையில் தற்போது ஒரு சவரன் ஆபரண தங்கம் வாங்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தியாக வேண்டும் என்ற நிலை வந்து விட்டது . சாதாரண மக்களை பொருத்தவரை ஒரு பவுனுக்கு ஒரு லட்சம் என்பது அவர்களால் இயலாத ஒரு காரியம். எனவே தங்க நகை வாங்குவதையே இனி நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர் .
ஆனால் இந்த விலை ஏற்றத்திலும் குறிப்பிட்ட சில வழிகளில் குறைந்த பணத்திலேயே தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. அதை பற்றிய பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் நாம் தங்கம் விலை உயர்வை பற்றி நாள்தோறும் கண்டு கவலைக் கொண்டிருக்கிறோம். சென்னையில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது . 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்த ஆண்டில் மட்டும் தங்கம் விலை 50% உயர்ந்திருக்கிறது . இத்தகைய சூழலில் குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்காக இருக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

கோல்டு ஈடிஎஃப் : தங்கம் என்றாலே நகையாக தான் வாங்க வேண்டும் என கிடையாது . தங்கத்தில் நாம் முதலீடு செய்யலாம். நமக்கென டீமேட் கணக்கினை தொடங்கிவிட்டால் பல்வேறு வர்த்தக செயலிகள் வாயிலாக நாம் எளிதாக நம்முடைய டிமேட் கணக்கில் முதலீடு செய்ய முடியும். சராசரியாக 100 ரூபாய் முதலே கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் நாம் எளிதாக முதலீடு செய்ய முடியும். அதாவது தங்கத்தை நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கலாம் . ஈடிஎஃப்களில் செய்யப்படும் முதலீட்டை எளிதாக வர்த்தகம் செய்யலாம் நினைக்கும் நேரத்தில் அதனை விற்பனை செய்து உடனடியாக பணமாக மாற்றிக் கொள்ளலாம். தங்கத்தின் மதிப்பு உயர உயர நாம் வாங்கிய அந்த கோல்ட் ஈடிஎஃபின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும்.

டிஜிட்டல் தங்கம்: டீமேட் கணக்கு இல்லை என்பவர்கள் டிஜிட்டல் தங்கம் வாங்கலாம். பல்வேறு நிறுவனங்களும் தற்போது தங்களுடைய செயலிகள் வாயிலாக டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. நகை விற்பனை நிறுவனங்கள், வங்கிகள் , ஃபின்டெக் நிறுவனங்கள் டிஜிட்டல் கோல்டு வாங்குவதற்கான வசதிகளை கொண்டு இருக்கின்றன. இந்த செயலில் சென்று நாம் மிக சொற்பத்தொகையில் கூட தங்கத்தை வாங்கி யூனிட்டுகளாக சேகரித்து வைத்துக் கொள்ளலாம். 100 ரூபாய் இருந்தாலே போதும். டிஜிட்டல் கோல்டில் நாம் மாதந்தோறும் ஒரு தொகையும் முதலீடு செய்து கொள்ளலாம். நமக்கு தேவையாக இருக்கும் போது அந்த டிஜிட்டல் கோல்டை தங்க பார்களாக மாற்றி பெற்றுக் கொள்ளலாம் அல்லது விற்பனை செய்து பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
கோல்டு மியூச்சுவல் ஃபண்டு: தங்கம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகள் இவை. தங்கத்தின் விலை உயர உயர இந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் என்ஏவிக்களின் மதிப்பும் உயரும். பல்வேறு நிறுவனங்களும் தற்போது போட்டி போட்டுக்கொண்டு கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளை வழங்குகின்றன. டீமேட் கணக்கு இருந்தால் போதும் நாம் எளிதாக இந்த கோல்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்தியாவில் சராசரியாக கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு என்ஏவி 50 ரூபாய் முதலே கிடைக்கிறது.

தங்க நாணயம்/பார்கள்: தங்கத்தை நகையாக வாங்கும் போது செய்கூலி சேதாரத்துக்கு என பல ஆயிரங்களை செலுத்த வேண்டி இருக்கிறது. ஆனால் தங்க நாணயம் அல்லது பார்களை வாங்கும் போது தங்கத்தின் மதிப்பு மற்றும் ஜிஎஸ்டி செலுத்தினால் போதும். இதனால் செய்கூலி சேதாரத்துக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பணத்தை சேமிக்க முடியும். கிஃப்ட் வழங்க வேண்டும் என்பவர்களும் நகைக்கு மாற்றாக நாணயங்களை வழங்கினால் செய்கூலி சேதாரத்தை சேமிக்கலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications