நாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..!

அட்சய திருதியை என்றாலே, அந்த நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது தான் பொருள். இதனால் தான் நம்மவர்கள் அந்த நாளில் பொன்னும் பொருளும் வாங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பொதுவாக அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க நினைக்கும், நம்மவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

வீடுகளுக்குள் முடங்கினால் என்ன? அதான் உள்ளங்கையிலேயே உலகமே இருக்கிறதே. இன்றைக்கு ஆன்லைனில் இல்லாத வசதிகளே இல்லை எனலாம். அப்படி இருக்கையில் தங்கத்தினை நகையாக வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. அவற்றை டிஜிட்டல் தங்கமாக கூட வாங்கலாம்.

மக்களின் நம்பிக்கை

மக்களின் நம்பிக்கை

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதும், வாழ்வு வளம் பெரும் என்பதும் பழ வருடங்களாக நம் மக்களிடம் இருந்தும் வரும் நம்பிக்கை. குறிப்பாக தமிழக்கத்தில் இது ஒரு பண்டிகை தினம் போலவே கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. கடைகளில் வாழைத் தோரணங்கள், மாவிலை, என கோலகமாய் இருக்கும்.

ஆன்லைனில் விற்பனை

ஆன்லைனில் விற்பனை

அந்த காலகட்டத்தில் மக்கள் கூட்டம் நகைக்கடைகளை நோக்கி அலைமோதுவதை காண முடியும், ஆனால் கொரோனாவால் இரண்டாவது ஆண்டாக மக்கள் வீட்டிற்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில நகைக்கடைகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்கின்றன. தள்ளுபடிகளை வாரி வழங்கி வருகின்றன.

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம்

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம்

ஆக மக்கள் ஆன்லைன் மூலமாக எந்த பிரச்சனையும் இன்றி தங்கித்தினை வாங்கிக் கொள்ளலாம் என்றாலும், ஆசையாய் வாங்கும் நகைகளை பார்த்து வாங்குவது போல் இருக்குமா என்ன? ஆக டிஜிட்டல் தங்கம் போன்ற முதலீடுகளில் இந்த சமயத்தில் முதலீடு செய்யலாம். அப்படி இல்லாவிட்டால் அரசின் தங்க பத்திரம் கோல்டு இடிஎஃப் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

அதென்ன அட்சய திருதியை

அதென்ன அட்சய திருதியை

அதெல்லாம் சரி அட்சய திருதியை என்றால் என்ன? இந்த நாளில் தங்கத்தில் தான் முதலீடு செய்ய வேண்டுமா? வாருங்கள் பார்க்கலாம். சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியை, அட்சய திருதியை என்று அழைப்பர். நடப்பு ஆண்டு அட்சய திருதியை மே 14 அன்று கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக அட்சய திருதியை நாளில் தங்கம் உள்பட மங்கல பொருட்கள் வாங்குவது நம்மவர்களின் பழக்கம். குறிப்பாக பொன் வங்குவது வழக்கம். ஏனெனில் இந்த நாளில் வாங்குவது அபிவிருத்தியாகும் என்பது மக்களின் நம்பிக்கை.

தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம்

தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம்

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே பல நிபுணர்களும் கூறி வரும் நிலையில், பேப்பர் தங்கங்கள் ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாக பார்க்கின்றனர். அந்தவகையில் தங்க பத்திரத்தினை வாங்கி வைக்கலாம். இதனை இந்திய ரிசர்வ் வங்கி விற்பனை செய்வதால் நம்பிக்கையானதாகவும் பார்க்கப்படுகிறது. தங்கம் விலை அதிகரிக்க அதிகரிக்க, இந்த பத்திரங்களின் விலையும் அதிகரிக்கும்.

பத்திரத்தின் மூலம் எவ்வளவு வாங்கலாம்?

பத்திரத்தின் மூலம் எவ்வளவு வாங்கலாம்?

இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கும் சலுகையும் உண்டு. இந்த தங்க பத்திர விற்பனையில் அப்போதைய நிலவரப்படி, ஆர்பிஐ விலையை நிர்ணயிக்கும். பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. எனினும் இதனை ரிசர்வ் வங்கி அறிவிக்கும்போது தான் வாங்க முடியும் என்பதால், அதற்கான நிதியினை ஒதுக்கிக் கொள்ளலாம்.

கடனும் பெறலாம்

கடனும் பெறலாம்

இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன. இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

கோல்டு ஃபண்டுகள் என்றால் என்ன?

கோல்டு ஃபண்டுகள் என்றால் என்ன?

கோல்டு ஃபண்டுகள் என்பது பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள, கோல்டு இடிஎஃப்-களில் முதலீடு செய்யக் கூடிய ஈக்விட்டி ஓரியண்டேடு திட்டங்களாகும். இவை தங்கத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. இந்த வகையான முதலீடுகளில் பணப்புழக்கம், தங்க விலைகளை நேரடியாக ட்ராக் செய்யும் கோல்டு இடிஎஃப்களின் அடிப்படையிலேயே இருக்கும். கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளுக்கான பராமரிப்புக் கட்டணம், இடிஎஃப் உடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே இருக்கும்.

கோல்டு ETF திட்டங்கள்

கோல்டு ETF திட்டங்கள்


இன்று உலகளவில் பாதுகாப்பின் புகலிடமாக கூறப்படும் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது, அதுவும் அட்சய திருதியை நாளில் என்பது மிக நல்ல விஷயம் தானே. அதனை இன்னும் எளிமையாக செய்ய சிறந்த வழி கோல்டு ETF தான். இந்த கோல்டு ETF, கோல்டு பண்ட் தங்க விலை நிலவரத்தினை அடிப்படையாகக் கொண்ட மற்றும் தங்க சந்தையில் முதலீடு செய்யக் கூடிய பேஸிவ் முதலீட்டு திட்டங்களாகும்.

மின்னணு முதலீடு

மின்னணு முதலீடு

பிசிகல் கோல்டின் விலை அதிகமாக இருப்பதால், கோல்டு ETF-கள், பண்டுகள் விலை குறைவு தான். மின்னனு வடிவில் நம்மிடம் இருக்கும். நீங்கள் பங்குகளில் முதலீடு செய்வது போன்றே கோல்டு ETF, கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யலாம். அங்கு பங்குகளில் உள்ளதை போல நீங்கள் விற்கவும் முடியும். வாங்க முடியும். அதோடு கோல்டு ETFக்களை விற்கும் போது தங்கத்திற்கு உண்டான தொகையை முழுமையாக திரும்ப பெறுவீர்கள். இதனை டீமேட் மூலம் அதற்கான மீயூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மூலம் நீங்கள் இந்த வர்த்தகத்தினை மேற்கொள்ள முடியும்.

பாதுகாப்பாக முதலீடு செய்யுங்கள்

பாதுகாப்பாக முதலீடு செய்யுங்கள்

இது ஆபரண தங்கத்துடன் ஒப்பிடும்போது செலவுகள் குறைவு தான். தங்கத்தின் விலையுடன் பொறுத்தே இது வர்த்தகமாவதால், இதன் வெளிப்படையை தன்மையையும் நம்மால் அறிய முடியும். ஆக இந்த அட்சய திருதியை நாளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், இதுபோன்ற திட்டங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+