கொரொனாவின் தாக்கம் மக்களை ஆட்டிப்படைத்து வரும் இந்த நேரத்தில் நாங்கள் எங்கே முதலீடு செய்வது? இது இப்போது தேவையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அரசின் 21 நாள் ஊரடங்கின் காரணமாக மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய அவசியம் உள்ளது.
மக்கள் தங்களது நேரத்தை தேவையில்லாமல் வீணடிக்காமல், இதுபோன்ற அவசியமான விஷயங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வேமோ?
இது இன்று இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் உங்களுக்கு உதவும் அல்லவா. பொதுவாக முதலீடு என்றால், கிராமப்புறங்களில் தங்கம் என்றும், இதே நகர்புறங்களில் வங்கி வைப்பு நிதியும் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
என்ன வித்தியாசம்?
சரி விஷயத்துக்கு வருவோம். நாம் நமது முதலீட்டினை தங்கமாகவும், தங்க ஆபரணமாகவும், வாங்கி வைப்பதை விட, பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்யலாமே. அதாவது இன்றைய காலகட்டத்தில் கோல்டு பண்டுகள் அல்லது கோல்டு இடிஎஃப் என பல விதங்களில் முதலீடு செய்யலாம். சரி கோல்டு பண்டுகள் அல்லது கோல்டு இடிஎஃப் என்ன வித்தியாசம் நாம் எதில் முதலீடு செய்யலாம்.
கோல்டு ஃபண்டுகள் என்றால் என்ன?
கோல்டு ஃபண்டுகள் என்பது, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள கோல்டு இடிஎஃப்-களில் முதலீடு செய்யக் கூடிய ஈக்விட்டி ஓரியண்டேடு திட்டங்களாகும். இவை தங்கத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. இவ்வகை முதலீடுகளில் பணப்புழக்கம், தங்க விலைகளை நேரடியாக ட்ராக் செய்யும் கோல்டு இடிஎஃப்களின் அடிப்படையிலேயே அமையும். கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளுக்கான பராமரிப்புக் கட்டணம், இடிஎஃப் உடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கும்.
இதனை தெரிந்து கொள்ளுங்கள்
பங்கு வர்த்தகத்தில் பற்றி அறியாத முதலீட்டாளர்கள், அதனை பற்றி முழுமையாக தெரிந்திராத முதலீட்டாளர்கள் மற்றும் டிமேட் கணக்கு இல்லாதவர்கள் என பலர் இதனை தேர்வு செய்யலாம். எனினும், கோல்டு ஃபண்ட் மற்றும் கோல்டு இடிஎஃப் ஆகியவற்றுக்கு பராமரிப்புத் தொகை செலுத்த வேண்டி உள்ளதால் இவை கூடுதலான விலை கொண்டுள்ளன.
யார் முதலீடு செய்யலாம்
எனினும் பலருக்கும் மியூச்சுவல் மிக அச்சத்துக்குரிய முதலீடுகளாகவும் உள்ளது. ஆனால் இது அப்படி அல்ல ஏனெனில் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய தெரியாதவர்கள் அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்து தங்கள் பணத்தை இழந்தவர்கள் அல்லது பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கான சரியான மாற்று மியூச்சுவல் பண்டுதான் எனலாம். இன்னும் எளிமையாகப் சொல்ல வேண்டுமானால் பல முதலீட்டாளர்களிடமிருந்தும் பணத்தை பெற்று, லாபம் ஈட்டி தரும் பல திட்டங்களில் முதலீடு செய்து, சம்பாதித்து திருப்பி தருவதுதான் தான் மியூச்சுவல் பண்ட்.
முதலீட்டு திட்டங்கள்
இந்தியாவில் மட்டும் அல்ல, உலகளவில் பாதுகாப்பின் புகலிடமாக கூறப்படும் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது மிக நல்ல விஷயம் தானே. அதனை இன்னும் எளிமையாக செய்ய சிறந்த வழி கோல்டு ETF தான். இந்த கோல்டு ETF, கோல்டு பண்ட் தங்க விலை நிலவரத்தினை அடிப்படையாகக் கொண்ட மற்றும் தங்க சந்தையில் முதலீடு செய்யக் கூடிய பேஸிவ் முதலீட்டு திட்டங்களாகும்.
விலை அதிகம்
இந்தியாவில் வழக்கமாக தங்கம் ஆபரணமாகவும், பார்களாகவும் வாங்கி வைக்கப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட அளவிலான செய்கூலி மற்றும் சேதாரம் உண்டு. இதனால் தங்கத்தினை விலையுடன் கூடாக, செய்கூலி மற்றும் சேதாரத்துடன் சேர்த்து கூடுதலாக விலை இருக்கும். இதனால் தான் சந்தையில் உள்ள தங்கம் விலையினை விட, தங்கம் ஆபரணம் விலை அதிகமாகத் தான் இருக்கும்.
மின்னணு முதலீடு
ஆனால் கோல்டு ETF-கள், பண்டுகள் மின்னனு வடிவில் நம்மிடம் இருக்கும். நீங்கள் பங்குகளில் முதலீடு செய்வது போன்றே கோல்டு ETF, கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யலாம். அங்கு பங்குகளில் உள்ளதை போல நீங்கள் விற்கவும் முடியும். வாங்க முடியும். அதோடு கோல்டு ETFக்களை விற்கும் போது தங்கத்திற்கு உண்டான தொகையை முழுமையாக திரும்ப பெறுவீர்கள். இதனை டீமேட் மூலம் அதற்கான மீயூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மூலம் நீங்கள் இந்த வர்த்தகத்தினை மேற்கொள்ள முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications