பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து சைலன்ட் மோடில் இருந்து வெள்ளி திடீரென வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு முதலே வெள்ளியின் விலை பல மடங்கு வேகமாக உயர்ந்தது. அதிகபட்சமாக கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்திலேயே ஒரு கிராம் வெள்ளி 425 ரூபாய் என்றும் ஒரு கிலோ 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என்றும் உச்சபட்ச விலை எட்டியது. இதனை அடுத்து படிப்படியாக குறைந்து வந்த வெள்ளி பெரிய அளவில் விலை ஏறவில்லை.
பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்குள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. குறிப்பாக மார்ச் 11ஆம் தேதிக்கு பிறகு ஒரு கிலோ வெள்ளியின் விலை சில்லறை விற்பனையிலேயே 3 லட்சம் ரூபாய் என்று அளவை கூட எட்டவே இல்லை மாறி மாறி 2.90 லட்சத்திற்குள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக வெள்ளியின் விலை திடீரென உயர தொடங்கியுள்ளது.

மே 5ஆம் தேதி அன்று ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாயாக இருந்து அப்படியே படிப்படியாக உயர்ந்த இன்று ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளியின் விலை இன்று பல மடங்கு உயர்வு கண்டது. கிட்டத்தட்ட ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரே நாளில் 1.5% உயர்ந்து 2,82,463 ரூபாய் என ஆனது. தங்கம் விலை உயர்ந்தாலும் அதைவிட வேகமாக வெள்ளி மீண்டும் உயர தொடங்கி இருக்கிறதோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
உலக சந்தையில் ஸ்பாட் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 86.27 டாலர்களாக வர்த்தகமாகிறது. முந்தைய நாளை விட இது கிட்டத்தட்ட 7 சதவீதம் அதிகமாகும். அதாவது கடந்த இரண்டு மாத காலத்தில் உலக சந்தையிலும் சரி இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் சரி குறுகிய காலத்திலேயே வெள்ளியின் விலை இவ்வளவு அதிகமாக உயர்ந்து இருப்பது இதுவே முதன்முறையாகும்.
ஈரானின் போர் பதற்றம் தணியாமல் இருப்பது , ஹார்முஸ் ஜலசந்தியில் முடிவு எட்டப்படாமல் இருப்பது காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்வு கண்டிருக்கின்றன. இதனால் பங்கு சந்தைகள் பெரிய சரிவில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம், வெள்ளி நோக்கி வர தொடங்கி இருக்கிறார்கள். டிரம்ப் இரண்டு நாட்கள் பயணமாக சீனாவுக்கு செல்ல இருப்பதால் அதன் பிறகு இந்த போர் பதற்றம் தணிவதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் தங்கம், வெள்ளி விலைகள் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கின்றன.
ஈரான் போர் தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகளே வெள்ளியின் விலை போக்கை தீர்மானிக்க இருக்கிறது.நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய எண்ணுபவர்கள் வெள்ளியில் முதலீடு செய்யலாம் ஏனெனில் தொழில் துறை ரீதியாக அதன் தேவை அதிகமாக இருக்கிறது என்பதால் போர்ட்போலியோவில் ஒரு பகுதியை வெள்ளிக்கு ஒதுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

