வெள்ளி விலை திங்களன்று ரீடைல் சந்தையில் மாற்றம் இல்லாமல் வர்த்தகம் செய்யப்பட்டாலும், எம்சிஎகஸ் சந்தையில் கடுமையாக சரிந்ததுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு மூன்று மாதங்களில் இல்லாத உயர்வை கண்டதால், டாலரில் வர்த்தகமாகும் வெள்ளி விலை ரூபாய் மதிப்பில் வாங்கும் போதும் அதிகமாக இருக்கும் காரணத்தால் சந்தையில் விலை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் வெள்ளி தேவை குறைந்தது விலையும் தேக்கமடைந்துள்ளது.
அதேநேரம், உலக எண்ணெய் விலை உயர்வு பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியது. இது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பை தாமதப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது. இது வெள்ளி போன்ற சொத்துகளுக்கு எதிர்மறையாக செயல்பட்டது.

எம்சிஎக்ஸ் சந்தை
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) வெள்ளி விலை இன்று 1.6 சதவீதம் சரிந்து கிலோவுக்கு ரூ.2,64,000 என்ற இன்ட்ராடே குறைந்த அளவை எட்டியது. MCX தங்கம் விலையும் 1.1 சதவீதம் குறைந்து 10 கிராமுக்கு ரூ.1,59,826 ஆனது. சர்வதேச சந்தையில் ஸ்பாட் வெள்ளி கிட்டத்தட்ட 3 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் 79 டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. தங்கம் விலையும் குறைந்தது.
இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை
சென்னையில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இருந்த விலையிலேயே இன்று தொடர்வதால் சந்தையில் மந்தமான வர்த்தகம் நிலவுகிறது.
கடந்த 10 நாட்களின் விலை நிலவரம்
சென்னையில் கடந்த 10 நாட்களில் வெள்ளி விலையில் குறிப்பிடத்தக்க ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. மார்ச் 1ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.3,25,000 என்ற உச்சத்தை தொட்டது. அதன்பின் விலை படிப்படியாக குறைந்து, மார்ச் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் ரூ.3,15,000 அளவில் இருந்தது. பின்னர் மார்ச் 4ஆம் தேதி விலை ரூ.2,95,000 ஆக திடீரென குறைந்தது.
அதற்குப் பிறகு மார்ச் 5ஆம் தேதி வரை அதே நிலையில் தொடர்ந்த வெள்ளி விலை, மார்ச் 6ஆம் தேதி மேலும் ரூ.5,000 குறைந்து ரூ.2,90,000 ஆக சரிந்தது. மார்ச் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விலை மாற்றமின்றி ரூ.2,90,000 என்ற நிலையில் நிலைத்துள்ளது.
மார்ச் மாதத்தில் வெள்ளி விலை மாற்றம்
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்த ரூ.3,25,000 என்ற உச்ச விலையிலிருந்து தற்போது ரூ.2,90,000 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் இந்த மாதத்தில் மட்டும் வெள்ளி விலை சுமார் 10.77% வரை சரிவை சந்தித்துள்ளது. மார்ச் மாதத்தின் அதிகபட்ச விலை ரூ.3,25,000 (மார்ச் 1) என்றும், குறைந்தபட்ச விலை ரூ.2,90,000 (மார்ச் 6) என்றும் பதிவாகியுள்ளது.
சந்தை நிலவரம்
கடந்த சில நாட்களாக விலை குறைந்தபோதிலும் தற்போது வெள்ளி விலை நிலையாக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்கள் சந்தை விலை மாற்றங்களை கவனமாக கண்காணித்து வருகின்றனர். விலை குறைந்துள்ள இந்த நிலை, சிலருக்கு முதலீட்டு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
டாலர் மதிப்பு
அமெரிக்க டாலர் மதிப்பு மூன்று மாதங்களில் இல்லாத உயர்வை கண்டது. இது வெள்ளி மீதான முதலீட்டை குறைத்துள்ளது. டாலர் வலுவடையும் போது வெள்ளி விலை குறைவது இயல்பு. இதனால் முதலீட்டாளர்கள் வெள்ளியை விற்கின்றனர். அமெரிக்க 10 ஆண்டு பத்திர முதலீட்டு லாபம் ஒரு மாத உச்சத்தை எட்டியது.
கச்சா எண்ணெய் சந்தை
உலக எண்ணெய் சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கம் காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலை 26 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து 117 டாலரை தாண்டியது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்ததால் வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைத்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி மூடல் அச்சம் எண்ணெய் விலையை உயர்த்தியது. இது பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications