பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக உயர்ந்து வரும் நிலையில், உலகின் 100 செல்வாக்குமிக்க, நிதித் துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் பெண்களின் பட்டியலை வெளியிட்ட Barron's நாளிதழில் ஐந்து இந்திய வம்சாவளி பெண் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச நிதி துறையில் ஆண்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கும் நிலையில் இந்த இந்திய வம்சாவளி பெண்கள் அசத்தியுள்ளனர்.
Barron's நாளிதழ் வெளியிட்ட 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனு அய்யங்கார், ரூபால் ஜே.பன்சாலி, சோனல் தேசாய், மீனா ஃபளையன், மற்றும் சவிதா சுப்பிரமணியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். யார் இவர்கள்..?
அனு அய்யங்கார் (Anu Aiyengar): J.P. Morgan நிறுவனத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் J.P. மோர்கனில் உள்ள Mergers and Acquisitions (M&A) இன் உலகளாவிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.2020 ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தின் இணைத் தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நீண்ட காலமாகவே சட்ட ஒப்பந்தங்கள், வாடிக்கையாளர்களுடன் ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குவதில் சிறப்பான முறையில் செயல்பட்டு J.P. Morgan நிறுவனத்தில் M&A பிரிவின் தலைவராக உயர்ந்துள்ளார்.

ரூபால் ஜே.பன்சாலி (Rupal J.Bhansali) : 55 வயதான ரூபால் ஜே.பன்சாலி Ariel Investments' இல் உலகளாவிய பங்கு உத்திகளின் தலைமை முதலீட்டு அதிகாரி மற்றும் போர்ட்ஃபோலியோ மேலாளராகவும் உள்ளார். மேலும் இவர board of directors of 100 Women in Finance உறுப்பினராகவும் உள்ளார்.
மீனா ஃபளைன் (Meena Flynn) : இவர் 1999 களில் J.P. Morgan நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அதனையடுத்து கோல்ட்மென் சாட்சஸ்-க்கு மாறி, இன்று அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகவும் உள்ளார். இவர் கோல்ட்மேன் சாட்சஸ் குழுமத்தில் (Goldman Sachs Group) தனியார் வெல்த் மேனேஜ்மெண்டின் துணைத் தலைவராக உள்ளார்.
சோனல் தேசாய் (Sonal Desai) : சோனல் தேசாய் 2018 ஆம் ஆண்டு Franklin Templeton global investment fund நிறுவனத்தின் முதல் பெண் தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்று ஒரு வரலாற்று சாதனை படைத்தார் என்றே கூறலாம். 58 வயதான சோனல் தேசாய் IMF (International Monetary Fund) Wasserstein, and Thames River Capital போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அதன்பின் 2009 ஆம் ஆண்டு ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தில் சேர்ந்து, இன்று அதன் முக்கியப் பொறுப்பில் உள்ளார். வெளியான அறிக்கையின்படி இவரின் நிகர சொத்து மதிப்பு 134 பில்லியன் அமெரிக்க டாலர் எனக் கூறப்படுகிறது.
சவிதா சுப்பிரமணியன் (Savita Subramanian) : 50 வயதான சவிதா சுப்பிரமணியன் Bank of America வின் head of US equity and quantitative strategy தலைவராக உள்ளார். இவரும் உலகின் 100 செல்வாக்குமிக்க பெண் தலைவர்கள் பட்டியலில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். இவர் அமெரிக்க பங்குகளுக்கான துறை ஒதுக்கீடுகளை பரிந்துரைப்பதற்கும், S&P 500 மற்றும் பிற முக்கிய அமெரிக்க குறியீடுகளுக்கான முன்னறிவிப்புகளைத் தீர்மானித்தல் போன்ற முக்கிய பொறுப்புகளில் உள்ளார்.
More From GoodReturns

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications