கொரோனா வைரஸ் பில் கேட்ஸ் தொடங்கி உள்ளூர் இட்லி கடை சுந்தரி அக்கா வரை யாரையும் விட்டு வைக்கவில்லை.
பில்லியனர்கள் எல்லாம் 2 பில்லியன் 3 பில்லியன் என தங்கள் சொத்து மதிப்புகளை இழந்து கொண்டே இருக்கிறார்கள்.
"எப்படி இருந்தாங்க.. இப்படி ஆயிட்டாங்களே.. பயங்கர சொத்து மதிப்பு சரிவில் இந்திய பில்லியனர்கள்!" என்கிற தலைப்பில் இந்திய பில்லியனர்களில் யார், எவ்வளவு சொத்து மதிப்புகளை இழந்து இருக்கிறார்கள் என விவரித்து இருக்கிறோம். அதைப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்:
முந்திய பெண்
இந்த களேபரத்துக்கு நடுவில், நம் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் மற்றும் இந்திய பிசினஸ் ஜாம்பவான் முகேஷ் அம்பானியை, ஒரு பெண் பில்லியனர் சொத்து மதிப்பிலேயே முந்தி இருக்கிறார். அது எப்படி நடந்தது? பல பில்லியனர்களின் சொத்து மதிப்பு சரியும் போது இந்த பெண்ணின் சொத்து மதிப்பு மட்டும் எப்படி உயர்ந்தது? யார் அந்தப் பெண்?
அந்தப் பெண்
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் & தலைவர் ஜெஃப் பிசாஸை எல்லோருக்கும் தெரியும். அவரின் முன்னாள் மனைவி தான் அந்தப் பெண். அவர் பெயர் மெக்கென்ஸி பிசாஸ். இவர் கடந்த 2019-ம் ஆண்டில் தான் ஜெஃப் பிசாஸை விவாகரத்து செய்தார். விவாகரத்தின் போது தான் ஒரு கணிசமான அமேசான் நிறுவன பங்குகள் அவருக்கு கிடைத்தது.
எவ்வளவு பங்கு
அமேசான் நிறுவனத்தின் மொத்த பங்கில் சுமார் 4 சதவிகித பங்குகள், விவாகரத்து செட்டில்மெண்டாக மெக்கென்ஸி பிசாஸுக்கு கிடைத்தது. இன்று, அமேசான் நிறுவனத்தின் பங்குகளை அதிக எண்ணிக்கையில் வைத்திருக்கும் இரண்டாவது தனி நபர் நம் மெக்கென்ஸி பிசாஸ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பில்லியனர்
இவர் விவாகரத்து செட்டில்மெண்ட் வாங்கிக் கொண்ட உடனேயே அசால்டாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். நேற்று ஏப்ரல் 15, 2020 அன்று அமேசான் நிறுவன பங்குகளின் விலை 5.3 சதவிகிதம் அதிகரித்தது. இதனால், மெக்கென்ஸி பிசாஸ்-ன் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் 8.2 பில்லியன் டாலர் அதிகரித்துவிட்டதாகச் சொல்கிறது பிசினஸ் இன்சைடர்.
45 பில்லியன் டாலர்
ஃபோர்ப்ஸ் பத்திரிகை கணக்குப் படி, தற்போது மெக்கென்ஸி பிசாஸ், 45.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், நம் இந்தியாவின் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி இருக்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42.6 பில்லியன் டாலருடன் பின் தங்கி இருக்கிறார்.
ஒரே மாதத்தில் 9 பில்லியன்
நம் மெக்கென்ஸி பிசாஸின் சொத்து மதிப்பு, கடந்த ஏப்ரல் 2020-ல் 36 பில்லியன் டாலராகத் தான் இருந்திருக்கிறது. அதை ஃபோர்ப்ஸ் உறுதி செய்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களில் அமேசான் நிறுவன பங்குகளின் விலை ஏற்றத்தால் தற்போது 45.1 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது மெக்கென்ஸி பிசாஸ்-ன் சொத்து மதிப்பு.
அமேசான் பங்குகள்
நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் அமேசான் நிறுவன பங்குகள் கடந்த ஒரு மாத காலமாக வெறித்தனமாக ஏற்றம் கண்டு வருகின்றன. கடந்த மார்ச் 16, 2020-ல் 1,689 டாலராக இருந்த பங்கு, நேற்று 2,307 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக ஒரே மாதத்தில் சுமார் 36% விலை ஏற்றம் கண்டிருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications