என்விடியா விழுந்த அதே வலையில் AMD சிக்கியது.. புரட்டி எடுக்கும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள்..!

அமெரிக்க ஏஐ மற்றும் சிப் நிறுவனங்கள் அடுத்தடுத்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, என்விடியா சிஇஓ சீன பெண்ணுடன் உறவு வைத்திருந்த விவகாரம் இந்நிறுவனப் பங்குகளுக்கு பெரும் பின்னடைவாக மாறினாலும், மற்ற நிறுவனங்களுக்கு இது பெரும் வாய்ப்பாகவே இருந்தது.

ஆனால் நேற்றைய அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தில் மொத்த ஐடி எகோசிஸ்டம் பங்குகளும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது முக்கிய திருப்பமாகவும், ஏஐ பபுள் பர்ஸ்ட்-ன் முதல் படியாகவும் பார்க்கப்படுகிறது.

என்விடியா விழுந்த அதே வலையில் AMD சிக்கியது.. புரட்டி எடுக்கும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள்..!

இதற்கிடையில் என்விடியா விழுந்த அதே சீன வர்த்தக விலையில் மற்றொரு அமெரிக்க சிப் நிறுவனமான AMD சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதன் எதிரொலியாக ஏஎம்டி பங்குகள் வர்த்தக துவக்கத்திலேயே 6 சதவீதம் சரிந்து 459.71 டாலராகக் குறைந்துள்ளது.

அதானி குழுமத்தைக் கதறவிட்ட ஹிண்டன்பெர்க் நிறுவனத்தைப் போலவே அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு Short-selling நிறுவனமான Hunterbrook Media, AMD நிறுவனத்துக்கும் சீனாவுக்கும், சீன நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய வர்த்தகத் தொடர்பு இருப்பதாக அதிரடியான ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.

Also Read

அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகள், தடைகளைத் தாண்டி என்விடியா போலவே AMD நிறுவனமும் அதிகப்படியான சிப்களை சீனவுக்கு விற்பனை செய்துள்ளதாக ஹண்டரபுக் மீடியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமாக அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருக்கும் சீனாவின் முன்னணி சர்வர் தயாரிப்பு நிறுவனமான IEIT சிஸ்டம்ஸ்-க்கு ஏஎம்டி நிறுவனம் தொடர்ந்து புதிய Firmware வழங்கியதாக ஹண்டர்புக் குற்றம்சாட்டியுள்ளது. இந்த Firmware மூலம் ஏஎம்டி நிறுவனம் தயாரித்த சிப்களை சீன நிறுவனம் தனது சர்வர்களில் பயன்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் ஏஎம்டி நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 20 சதவீத வருவாய் சீனா மற்றும் ஹாங்காங் நாட்டில் செய்யப்படும் வர்த்தகத்தின் மூலம் வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஏஎம்டி நிறுவனம் தனது சிப்களை தயாரிக்க அதிகளவில் சீன பார்ட்னர்களை நம்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அரசு ஏஐ ஏற்றுமதி தொடர்பாக புதிய கட்டுப்பாட்டுக் கொள்கைகளைக் கொண்டு வரும் வேளையில் ஏஎம்டி வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும், தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு சப்ளை செய்யப்பட்டதிற்காக அமெரிக்க வர்த்தக அமைச்சகம் என்விடியா போல் விசாரணை நடத்தவும் வாய்ப்புள்ளதாகக் கூறி, ஹண்டர்புக் நிறுவனம் ஏஎம்டி பங்குகள் மீது ஷார்ட் பொசிஷன் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து ஏஎம்டி வெளியிட்ட விளக்கத்தில், இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் Hunterbrook வெளியிட்ட குற்றச்சாட்டுகள் எங்களுடைய வர்த்தக நடைமுறைகளையும், உறவுகளையும் தவறாகச் சித்தரிப்பதாக மறுத்துள்ளார். மேலும் எங்களுடைய நிறுவனம் அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் சட்ட விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஏஐ சிப்களை விற்பனை செய்த விவகாரத்தில் தற்போது Nvidia நிர்வாக அளவிலும், அரசு தரப்பிலும் விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் Nvidia-வின் போட்டி நிறுவனமான AMD பெரிய அளவில் நன்மை அடைய வேண்டும் ஆனால் ஹண்டர்புக் குற்றச்சாட்டுகளால் மாட்டிக்கொண்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+