அமெரிக்க முதலீட்டாளரும் Rich dad poor dad புத்தகத்தின் எழுத்தாளருமான ராபர்ட் கியோசாகி, அமெரிக்க டாலரின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகி வருவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய நாணயத்தை உருவாக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக கூறும் அவர், அதீத பணவீக்கம் குறித்த புதிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில் ராபர்ட் கியோசாகியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன."அமெரிக்க டாலருக்கு குட்பை!" எனத் தனது X சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள ராபர்ட் கியோசாகி, "பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) 'தி யூனிட்' எனப்படும் தங்க ஆதரவு நாணயத்தை அறிவித்துள்ளன. அமெரிக்க டாலருக்கு குட்பை! விழிப்புடன் இருங்கள் என கூறியுள்ளார்.

அமெரிக்க டாலரை சேமிப்பவர்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்திப்பார்கள் என நான் கணித்துள்ளேன். உங்களிடம் அமெரிக்க டாலர் இருந்தால், அதீத பணவீக்கம் உங்களை அழித்துவிடலாம். தங்கம், வெள்ளி, பிட்காயின் ஆகியவற்றை வைத்திருங்கள் என்பதே என் வழிகாட்டுதல். எச்சரிக்கையாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.
பலமுறை தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் ஈதெரியம் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள் என ராபர்ட் கியோசாகி பலமுறை கூறியுள்ளார். அண்மையில், வெள்ளியை "சிறந்த மற்றும் பாதுகாப்பான" முதலீட்டுத் தேர்வு என்று அவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு மாற்றாக ஒரு புதிய நாணயம் தொடர்பான வதந்திகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், பிரிக்ஸ் நாடுகளின் தரப்பில் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதே உண்மை.
அக்டோபர் 2024 இல் கசான் உச்சி மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு பிரிக்ஸ் 'நோட்டு' முன்மாதிரியைப் பிடித்தவாறு படம்பிடிக்கப்பட்ட நிகழ்வு இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. ஆனால், புதிய நாணயத்தை வெளியிடும் உடனடி நோக்கம் குழுவிற்கு இல்லை என மூத்த அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
2024 பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் விவாதம் உச்சத்தை எட்டியது. அப்போது புதின் ஒரு மாதிரி பிரிக்ஸ் நோட்டை மேடையில் காட்சிப்படுத்தினார். இருப்பினும், டாலரைச் சார்ந்திருக்கும் தன்மையைக் குறைப்பதற்கான தனது முந்தைய அழுத்தமான நிலைப்பாட்டை அவர் பின்னர் மாற்றிக்கொண்டார்.
அமெரிக்க டாலர் அடிப்படையிலான ஸ்விஃப்ட் அமைப்பைக் கைவிடுவதல்ல, மாறாக டாலரை 'ஆயுதமாகப் பயன்படுத்துவதைத்' தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என புதின் தெளிவுபடுத்தினார். பிரிக்ஸ் நாடுகளும் அதன் கூட்டாளர்களும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்தும் மாற்று வழிமுறைகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றார்.
"நாங்கள் டாலரை மறுக்கவில்லை, அதனுடன் சண்டையிடவில்லை. ஆனால், அதனுடன் செயல்பட அவர்கள் அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்? அப்போது நாங்கள் வேறு மாற்று வழிகளைத் தேட வேண்டும், அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது," என்று புதின் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.
மேலும், "இந்தக் கட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒரு ஒற்றை நாணயத்தைக் கட்டமைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இதை மிகக் கவனமாகவும், விவேகத்துடனும் செய்ய வேண்டும், மேலும் தேசிய நாணயங்களைப் பயன்படுத்த வேண்டும். பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கியின் விரிவான திறனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார். மோடி - புதின் சந்திப்பு நிலையில் பிரிக்ஸ் நாணயம் தொடர்பான கியோசாகியின் இந்த பதிவு கவனம் பெறுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications