நியூயார்க்: உலக புகழ்பெற்ற சாக்லெட் விற்பனை நிறுவனமான மார்ஸ், சீஸ் இட் மற்றும் பிரிங்கில் மேக்கரான கெலனோவா நிறுவனத்தை 36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் தின்பண்டங்கள் துறையில் சர்வதேச அளவில் நிகழ்ந்த மிகப்பெரிய தொழில் ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது.
சர்வதேச அளவில் மார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளராக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஸ்னிக்கர்ஸ், பவுண்டி உள்ளிட்ட புகழ்பெற்ற சாக்லெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கூட பசி வந்தா நீ நீயா இருக்க மாட்டா என்ற ஸ்னிக்கர்ஸ் விளம்பரம் புகழ்பெற்றது.

இந்த நிறுவனம் கெலனோவாவை கையகப்படுத்தியதன் மூலம் பெரிய நிறுவனமாக வலுப்பெறுள்ளது. கெலனோவா நிறுவனமும் pringles உள்ளிட்ட தின்பண்டங்களுக்கு பெயர் பெற்றது. முன்னர் இது கெல்லாக்ஸ் என அறியப்பட்டது.
கெலனோவா நிறுவத்தின் தற்போதைய பங்கு மதிப்பை விட 33 சதவீதம் கூடுதலாக செலுத்தி ஒரு பங்கு 83.50 டாலர்கள் என்ற மதிப்பீட்டில் தாங்கள் அந்த நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பதாக மார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ஸ் நிறுவனம் ஃப்ரோசன் பிரேக்ஃபாஸ்ட் மற்றும் தின்பண்டங்கள் , சாக்லேட்டுகள் விற்பனையில் உலகளவில் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதாவது தின்பண்ட சந்தையை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மார்ஸ் தீவிரமாக இருக்கிறது. தற்போது கெலனோவா நிறுவனத்தை இவ்வளவு தொகையை கொடுத்து வாங்கி இருந்தாலும் அந்த சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த மாட்டோம் என மார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகள் அதன் பெரிய சந்தை. ஆனால் அண்மை காலமாக இந்த இரண்டு பிராந்தியங்களிலும் பிராண்டட் தின்பண்டங்களின் விற்பனை சரிந்துவிட்டது. இதற்கு விலை உயர்வு ஒரு காரணம் ஆகும். அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் உணவு பொருட்களின் விலை என்பது 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
இப்படி விலை உயர்வால் மக்கள் உள்ளூரை சேர்ந்த பிராண்டட் அல்லாத தின்பண்டங்கள், சாக்லெட், பிஸ்கட் போன்றவற்றுக்கு மாறி வருகின்றனர். இதனால் இந்த இரண்டு நிறுவனங்களுமே விற்பனை சரிந்து காணப்படுகின்றன. தற்போது ஒன்றாக இணைந்ததன் மூலம் மீண்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இடம் பிடிக்க முடியும் என நம்புகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications