ஷாங்காய், சீனா: சீனாவில் முதன்முறையாக தங்கத்திற்கான ஏடிஎம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏடிஎம்-ஐ பயன்படுத்தி மக்கள் தங்களுடைய தங்கத்தை அதில் விற்பனை செய்து 30 நிமிடங்களில் பணமாகப் பெறலாம்.
சீனாவின் ஷாங்காய் நகரில் இந்த தங்கத்திற்கான ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் தங்களுடைய தங்கத்தை டெபாசிட் செய்தால் அது அதன் எடை ,அதன் தூய்மை தன்மை உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து அதற்கு எவ்வளவு தொகை உங்களுக்கு கிடைக்கும் என்பதை திரையில் காண்பிக்கும். இதனை அடுத்து மக்கள் அந்த தங்கத்தை டெபாசிட் செய்து அதாவது விற்பனை செய்து பணமாக பெற்றுக்கொள்ள விரும்பினால் திரையில் காண்பிக்கும் மெசேஜுக்கு ஓகே என பதில் கொடுத்தால் அந்த தங்கத்துக்கு நிகரான பணமானது 30 நிமிடங்களில் அவர்களின் வங்கி கணக்கில் சென்று சேர்ந்து விடும்.

தங்கத்தை விற்பனை செய்வதற்காக அவர்கள் எந்த ஒரு ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டியது கிடையாது. வெறும் 30 நிமிடங்களிலேயே தங்கத்தை வழங்கிவிட்டு அதனை பணமாக பெற்றுக் கொள்ளலாம். சீனாவை சேர்ந்த கிங் ஹுட் என்ற நிறுவனம் தான் இந்த புதிய நடைமுறையை கொண்டு வந்திருக்கிறது. இந்த நிறுவனம்தான் இந்த கோல்ட் ஏடிஎம்-ஐ வடிவமைப்பு செய்திருக்கிறது.
ஷாங்காயில் இருக்கக்கூடிய ஒரு மாலில் இந்த ஏடிஎம் தற்போதைக்கு நிறுவப்பட்டுள்ளது. 3 கிராமுக்கு மேல் இருக்கும் தங்கத்தை மட்டுமே இதில் டெபாசிட் செய்து பணமாக பெற்றுக்கொள்ள முடியுமாம். அதன் தூய்மை தன்மை குறைந்தது 50 சதவீதமாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இயந்திரம் இந்த தங்கத்தை ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏடிஎம் நிறுவப்பட்டதை எடுத்து ஷாங்காயில் இருக்கக்கூடிய இந்த மாலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுடைய தங்கத்தை ஏடிஎம் வாயிலாக விற்பனை செய்துவிட்டு பணமாக பெற்றுக் கொள்கிறார்களாம். இதற்கு அதிக டிமாண்ட் வந்திருப்பதாக சீனாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைக்கு அப்பாயின்மென்ட் முறையில் மக்கள் இந்த ஏடிஎம் பயன்படுத்த முடியுமாம்.
மே மாதம் வரையிலான அப்பாயின்மென்ட் புக் செய்யப்பட்டு இருப்பதாக சீனா டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. இது தொடர்பான டெமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 40 கிராம் கொண்ட தங்க நெக்லஸ் டெபாசிட் செய்யப்படுகிறது அந்த இயந்திரம் அதனை ஆய்வு செய்து ஒரு கிராமுக்கு 9,200 கிடைக்கும் எனக் கூறுகிறது இதன் மூலம் அந்த நபருக்கு 4.2 லட்சம் ரூபாய் பணம் கிடைத்திருக்கிறது. 30 நிமிடங்களிலேயே அது அவரின் வங்கி கணக்கிற்கும் சென்றுவிட்டது.
ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதாக கிங் வுட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிக லாபத்திற்காக தங்கள் வசம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் என எண்ணுகின்றனர். அவர்களுக்கு இந்த ஏடிஎம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தங்கத்தை விற்பனை செய்துவிட்டு பணமாக மாற்ற வேண்டும் என்பதற்காக நகைக்கடைகளிலும் , அடகு கடைகளிலும் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை ஆவணங்கள் எதையும் வழங்க வேண்டிய தேவை இல்லை என இந்த நிறுவனம் கூறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications