தங்கம் விலை உயர்வு- சீனா செய்யும் சதி!! மலை போல் தங்கத்தை வாங்கி குவிப்பது ஏன்?

உலகம் முழுவதுமே தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டி இருக்கிறது. சென்னையில் இன்றைய தேதியில் ஒரு சவரன் 22 கேரட் ஆபரண தங்கம் 90 ஆயிரம் ரூபாயை கடந்து விட்டது . ஒரு சவரன் நகை வாங்க வேண்டும் என்றால் நாம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தீபாவளிக்குள் ரூ.1 லட்சமாகிறதா 1 பவுன்: தீபாவளி பண்டிகைக்குள் ஒரு சவரன் கூட ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவை கூட எட்டி விடலாம் என சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலை நாள்தோறும் பல்வேறு உச்சங்களை எட்டி வருகிறது. தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன . தங்கம் விலை உயர்வு என்பது சர்வதேச நாடுகளின் அரசியலோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது.

தங்கம் விலை உயர்வு- சீனா செய்யும் சதி!! மலை போல் தங்கத்தை வாங்கி குவிப்பது ஏன்?

தங்கம் ஒரு அந்தஸ்து: ஒரு சாதாரண குடும்பம் எப்படி அதிக தங்கம் வைத்திருப்பதை ஒரு அந்தஸ்தாக பார்க்கிறதோ அதுதான் தற்போது உலக நாடுகளுக்கு இடையிலும் இருக்கக்கூடிய ஒரு போட்டி. எந்த நாடு அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கிறதோ அந்த நாடுதான் எதிர்காலத்தில் உலகின் சக்தி வாய்ந்த நாடாக இருக்கும் என்ற ஒரு கருத்தாக்கம் அனைத்து நாடுகள் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

டாலரின் வலிமை: உலக அளவில் அமெரிக்க டாலர் தான் வலிமையான ஒரு நாணயமாக பார்க்கப்படுகிறது . எந்த ஒரு நாடும் சர்வதேச சந்தையில் எந்த ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அமெரிக்க டாலரில் தான் வாங்க வேண்டும். இதற்காக நாடுகள் அமெரிக்க டாலரை வாங்கி கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். அதற்கு ஒரு டாலருக்கு இவ்வளவு ரூபாய் என தங்கள் சொந்த நாட்டு பணத்தில் கொடுத்து வாங்க வேண்டும். அதாவது உலக சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு டாலரை வாங்குவதற்காகவே இந்தியா போன்ற நாடுகள் பல லட்சம் கோடிகளை செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

அமெரிக்கா ஆதிக்கம்: டாலர் வலிமையான ஒரு நாணயமாக இருப்பது தான் அமெரிக்கா உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது . இந்த சூழலில் தான் டாலரின் மதிப்பை இழக்கச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது சீனா. எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் தங்கள் கையில் தங்கம் இருந்தால் எந்த நாடாளும் தங்களை அசைக்க முடியாது என்பதில் மிக வலுவாக கவனம் செலுத்துகிறது .

தங்கத்தை வாங்கி பதுக்கும் சீனா: சீன மத்திய வங்கி தன் இஷ்டத்திற்கு தங்கத்தை வாங்கி குவித்து வைக்கிறது. தொடர்ந்து 11 மாதங்களாக சீன மத்திய வங்கி தங்களால் இயன்ற அளவு அதிக அளவில் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்து வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் சீனா கைவசம் இருந்த தங்கத்தின் மதிப்பு 253.84 பில்லியன் டாலர்கள் அதுவே செப்டம்பர் மாத இறுதியில் 283.29 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது . ஒரே மாதத்தில் சீனா கைவசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பு இத்தனை மடங்கு உயர்ந்திருப்பது வரலாறு காணாத ஒரு உச்சமாக பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை உயர்வு- சீனா செய்யும் சதி!! மலை போல் தங்கத்தை வாங்கி குவிப்பது ஏன்?

ஒரே மாதத்தில் உயர்வு: சீனா கைவசம் இருக்கக்கூடிய தங்கத்தின் அளவு ஆகஸ்ட் மாதம் 74.02 மில்லியன் அவுன்ஸ்களாக இருந்து செப்டம்பர் மாதத்தில் 74.06 மில்லியன் அவன்ஸ்களாக மாறி இருக்கிறது. சீனா அத்துடன் நின்று விடாது அடுத்தடுத்த மாதங்களிலும் மிக தீவிரமாக தங்கத்தை வாங்கும் என சொல்லப்படுகிறது. இதுதான் உலக அளவில் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர் .

அடுத்த 5 ஆண்டுகள்?: சீன அரசாங்கம் இப்படித்தான் 2022 ஆம் ஆண்டு தொடங்கி 2024 மே மாதம் வரை தொடர்ந்து 18 மாதங்களுக்கு தங்கத்தை வாங்கி குவித்தது. பின்னர் 2024 மே மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை அதற்கு பிரேக் விட்டிருந்த நிலையில் நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மீண்டும் தங்கத்தை வாங்க தொடங்கிவிட்டது. உலக தங்க கவுன்சில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தங்களின் தங்க இருப்பை அதிகரித்துவிட்டு டாலர் இருப்பை குறைக்கும் என கூறுகிறது .

உலக நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கிறது என்றால் நிச்சயம் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பே கிடையாது .இதன் மூலம் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க தான் செய்யும் என சொல்லலாம் .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+