உலக அளவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல்கள் இதற்கு ஒரு காரணம் என்றால் பல்வேறு நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிப்பது மற்றொரு காரணமாகும். அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு தங்கத்தை வாங்கி குவிக்க கூடிய ஒரு நாடாக சீனா இருக்கிறது.
சீனாவை பொருத்தவரை சீனாவின் மத்திய வங்கி தன்னுடைய தங்க இருப்பை அதிகரித்து உலக நாடுகளிடையே செல்வாக்கை நிரூபிக்க முயன்று வருகிறது. தான் வாங்குவது மட்டுமல்லாமல் மக்களும் தங்கத்தை வாங்க வேண்டும் என சீன நாட்டு அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. Weekend investing நிறுவனர் அலோக் ஜெயின் இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முக்கியமான ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில் சீன அரசு தன்னுடைய குடிமக்கள் தங்கம் வாங்குவதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது தங்கமே எதிர்காலம் என்பதை அந்நாட்டு அரசு அறிந்திருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். சீனா தங்கள் நாட்டு குடிமக்கள் அதிகளவு தங்கம் வாங்கி கையிருப்பு வைக்குமாறு கூறுகிறது ,தங்கத்தில் அதிக வர்த்தகம் செய்வதற்கு ஊக்குவிக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதே வேளையில் இந்தியாவோ தங்க கடன்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது, ஏற்கனவே சங்கத்தின் மீதான இறக்குமதி வரி இங்கு அதிகமாக இருக்கிறது என குறிப்பிட்டிருக்கும் அவர் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பதில் கவனம் செலுத்துகிறதே தவிர தங்கள் நாட்டு குடிமக்களும் தங்கத்தை வாங்கி இருப்பு வைக்க வேண்டும் என ஊக்குவிக்காமல் இருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.
சீனாவை பொருத்தவரை அமெரிக்க டாலரை வலுவிழக்க செய்ய வேண்டும் என்றால் நிதி ரீதியாக தன்னை வலுப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. அந்த வகையில் தான் தன்னுடைய தங்க கையிருப்பை அதிகரித்து வருகிறது என நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் சீனாவின் மத்திய வங்கியான சிபிஐஆர்சி அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் தங்களுடைய சொத்தில் ஒரு சதவீதம் தொகையை தங்கமாக வாங்கி கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கிறது. இதற்காகவே ஷாங்காய் ஃபியூச்சர் எக்ஸ்சேஞ்ச் தொடங்கப்பட்டு காப்பீட்டு துறை நிறுவனங்கள் நேரடியாக தங்கம் வாங்குவது ஊக்குவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் சீனாவில் தங்கம் நுகர்வு என்பது 34 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2000 ஆம் ஆண்டு சீனா அரசிடம் இருந்த தங்கத்தின் கையிருப்பு 395 டன்கள் அதுவே தற்போது தற்போது 2,200 டன்கள் என அதிகரித்திருக்கிறது. உண்மையில் சீனாவிடம் 5,000 டன்கள் தங்கம் இருக்கும் என ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications