சர்வதேச அளவில் தங்கம் என்பது மிக கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதோடு ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயம் செய்யும் காரணிகளில் தங்கமும் ஒன்று. இதனால் உலக நாடுகள் தங்கம் வாங்கி வைப்பதில் மிக ஆர்வம் காட்டி வருகின்றன.
அதிலும் தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில் தங்கத்திற்குகான மவுசு அதிகரித்துள்ளது என்று கூறலாம். ஏனெனில் தொடர்ந்து வரலாறு காணாத ஏற்றத்தினை கண்டு வருகிறது.
அதிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயம் செய்யும் காரணிகளில் தங்கமும் ஒன்று என்பதால், பல நாடுகளும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன.
தங்கம் சேமிப்பு
இடி-யில் வெளியான ஒரு அறிக்கையின் படி, சீனாவில் ஹெட்ஜிங் என்பது இல்லை என்று கூறப்படுகிறது. வுகான் மாகாணம் சீனாவினை உள்ளடக்கியது மட்டும் அல்லாமல், சீனாவினை பற்றிய அவதூறாக இருக்கும் அனைத்துக்கும் ஒத்ததாக மாறிய ஒரு நகரத்திலிருந்து வெளிப்படுகிறது. ஏனெனில் ஜூன் மாத நிலவரப்படி கிங்கோல்ட் கடன் வழங்குநர்களிடம் 83 டன் தூய தங்கம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றது.
கள்ள தங்கத்தின் மையம்
இது சீனாவின் ஆண்டு தங்க உற்பத்தியில் 22 சதவீதத்திற்கும் சமமாகும். அல்லது சீனாவின் தங்க இருப்பில் 4.2 சதவீதத்திற்கும் சமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் சீனாவின் தங்க இருப்பில் ஏதோ குளறுபடிகள் இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகின்றது. இது குறித்து வெளியான இடி செய்தியில், சீனாவின் உத்தியோகபூர்வ தங்கம் இருப்புகளில், 4 சதவீதத்திற்கும் அதிகமானவை போலியானவை என்றும் கூறப்படுகிறது.
பல மோசடி
ஆனால் வேறு எந்த சீனாவின் தங்க உற்பத்தியாளர்களும், தங்க நகை தயாரிப்பாளர்களும் இது போன்ற மோசடியில் ஈடுபடவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
ஆக சீனாவின் ஜீரோ ஹெட்ஜ் அறிக்கை சீனாவில் எவ்வளவு பலதரப்பட்ட மோசடி என்பதை இது அம்பலபடுத்துகிறது. மேலும் சீனா ராணுவத்துடன் ஆன தொடர்புகளை பயன்படுத்தி, கிங்கோல்டின் நிறுவனர் அடிப்படையில் விரும்பிய எதையும் செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தங்கத்திற்கு பதிலாக காப்பர்
மேலும் இந்த மோசடியான தங்கம் பெரியளவில் எடுத்துக் கொள்ளப்படாவிட்டாலும், இதன் மூலம் வெளியே வரும் பெரியளவிலான நிதியானது, சீனா பொருளாதாரம் வளர்ச்சி காண உறுதுணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஹெட்ஜ் செய்ததாக கூறப்படும் அனைத்து தங்கமும் போலியானவை. அதாவது 83 டன் தூய தங்கத்திற்கு பதிலாக காப்பரும், டங்ஸ்டனும் இருப்பதாக நிரூபணம் ஆகியுள்ளது.
இது ஒரே நிறுவனம் மட்டும் அல்ல
இப்படி அப்பட்டமான மோசடியில் ஈடுபடும் ஒரே நிறுவனம் கிங்கோல்ட் மட்டும் அல்ல என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் கடன் வழக்குனர்கள் தங்கத்தினை சோதிக்க தொடங்கிய போது தான், இந்த அப்பட்டமான மோசடி வெளியே வரத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த மோசடியை ஒப்புக் கொள்ளுதல் அல்லது சிறைக்கு செல்ல வேண்டிய நேரம் தான் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications