சீனாவில் போலி அமெரிக்க நிதி நிறுவனம்.. அதிர்ச்சியில் சீன அரசு!

பெய்ஜிங்: உலகில் போலியான பொருட்களுக்குப் பெயர்போன இடம் சீனா, இங்கு ரோலக்ஸ் கடிகாரம் முதல் ஆடி கார் வரை அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்படுகிறது (மருந்து பொருட்கள் உட்பட..). இந்த வரிசையில் தற்போது உலகின் முன்னணி நிதியியல் நிறுவனமான கோல்டுமேன் சேச்சஸ் நிறுவனமும் இடம் பெற்றுள்ளது.

அட உண்மையாகத் தான்.. சீனாவில் ஹாங்காங் எல்லைப் பகுதியில் அமெரிக்காவில் செயல்படும் கோல்டுமேன் சேச்சஸ் நிறுவனத்தைப் போலவே துளியும் மாறாமல் அதே பெயருடன்போலியாக ஒரு நிதியமைப்பு 2013ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது..

கோல்டுமேன் சேச்சஸ்

கோல்டுமேன் சேச்சஸ்

ஹாங்காங் எல்லையில் சென்ஜன் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் போலி நிறுவனம் அமெரிக்காவில் செயல்படும் கோல்டுமேன் சேச்சஸ் நிதி நிறுவனத்தைப் போலவே ஆங்கிலத்திலும், சீன மொழியிலும் (gao sheng) பெயர் கொண்டு வெளிப்படையாக இயங்கி வருகிறது.

மேலும் இந்தப் போலியான வங்கி இணையத்தளத்தில், நகரத்தின் மிகப்பெரிய நிதியியல் நிறுவனம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வரவேற்பாளர் பதில்...

வரவேற்பாளர் பதில்...

மேலும் சென்ஜன் பகுதியில் உள்ள இப்போலி வங்கியில் தொர்பு கொண்டால் வரவேற்பாளர் தனது பெயரைத் தெரிவிக்க மறுத்தது மட்டும் அல்லாமல், இது அமெரிக்க நிறுவனத்துடன் கிளை இல்லை என்றும் தெரிவிக்கிறார்.

ஆனால் கிளையில் உள்ள அனைத்து ஆதாரங்களும் உண்மையான கோல்டுமேன் சேச்சஸ் நிறுவனத்தைப் போலவே உள்ளது. இது முற்றிலும் மக்களை ஏமாற்றும் வேலை.

 

2013ஆம் ஆண்டு முதல்...

2013ஆம் ஆண்டு முதல்...

இந்நிறுவனத்தின் இணையதள விபரங்கள் படி சென்ஜன் பகுதியில் உள்ள இந்தப் போலி நிறுவம் மே மாதம் 2013ஆம் ஆண்டு முதல் இயங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

கோனி லிங்

கோனி லிங்

கோல்டுமேன் சேச்சஸ் நிறுவனத்தின் ஹாங்காங் கிளைத் தலைவர் கூறுகையில், எங்களது நிறுவனத்திற்கும் சென்ஜன் பகுதியில் உள்ள நிதியியல் நிறுவனத்திற்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லை, எந்த விதமான உடன்படும், ஒப்புதலும் அளிக்கவில்லை என்று கோனி லிங் தெரிவித்துள்ளார்.

சீன கட்டுமான வங்கி

சீன கட்டுமான வங்கி

இதேபோல் சீனாவின் ஷான்டாங் பகுதியில் 39 வயதான ஒருவர் போலியான சீன கட்டுமான வங்கி என்ப்படும் China Construction Bank பெயரில் போலியான வங்கிக்கிளையை நடத்தி வந்தார். மேலும் தனது வாடிக்கையாளருக்குக் கிரேட் கார்டு கூட அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின் இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டார்.

சீனாவில் போலி வங்கியின் கதை தொடர்கதையாகியுள்ளது சீன வங்கித்துறைக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

 

கடிதம்...

கடிதம்...

இவ்வங்கிக் குறித்துச் சீன அரசுக்கு வந்த கடித்ததில் இந்தப் போலியான கோல்டுமேன் சேச்சஸ் வங்கி Cheung Chitai குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சூதாட்டம் நிறுவனத்தின் தலைமையில் நடந்து வருகிறது.

சீனாவில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டதால் சூதாட்டத்தில் வருமானம் குறைந்துள்ளது இதனால் Cheung Chitai குடும்பத்தினர் இத்தகைய மோசடிகள் செய்து வருவதாக இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நடவடிக்கை

நடவடிக்கை

இக்கடிதத்திற்குப் பிறகு சீன அரசும், அமெரிக்க வங்கியும் இணைந்து இத்தகைய முறைகேடுகளின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் கண்டிப்பான விதிமுறைகளும் விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+