உலக அளவில் மதிப்பு மிக்க நாணயமாக அமெரிக்க டாலர் இருக்கிறது. உலக வர்த்தகத்தில் ஈடுபட நாம் டாலரை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்தும் நம் நாட்டு நாணயங்களின் மதிப்பு சரிந்தும் வருகின்றன.
அமெரிக்க டாலரை மதிப்பிழக்க செய்ய வேண்டும் என்பதில் மிக தீவிரமாக களமிறங்கி இருக்கிறது சீனா. இதற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான ஒரு ஆயுதமாக சீனா தங்கத்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதன் பின்னணியில் இருந்தது சீனா தான் . ஏனெனில் சீன அரசாங்கம் அதாவது சீன நாட்டு மத்திய வங்கி போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.

இதே பாணியை தான் பல்வேறு நாடுகளும் தற்போது பின்பற்ற தொடங்கி இருக்கின்றன . அதாவது தங்கள் கைவசம் தங்கத்தின் இருப்பை அதிகரிக்கும் போது தங்கள் நாட்டு நாணயம் வலுப்பெறும் எதிர்காலத்தில் டாலரின் மதிப்பு குறைந்தால் கூட தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பல்வேறு நாடுகளின் தற்போதைய மனநிலையாக இருக்கிறது. இதற்கு பின்னணியில் இருப்பது சீனா தான்.
சீனா மத்திய வங்கி தொடர்ந்து 13ஆவது மாதமாக தங்கத்தை வாங்கி கையிருப்பாக வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. சீன நாட்டு மத்திய வங்கி நவம்பர் மாதத்தில் மட்டும் கூடுதலாக 30,000 டிராய் அவுன்ஸ் தங்கத்தை வாங்கி இருக்கிறது . இதன் மூலம் அந்த நாட்டு வங்கியின் வசம் இருக்கும் தங்கத்தின் மொத்த அளவு 74.12 மில்லியன் டிராய் அவுன்ஸ்களாக மாறி இருக்கிறது . அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் சீன நாட்டின் மத்திய வங்கி தங்கத்தை வாங்கி இருக்கிறது என ப்ளூம்பர்க் செய்தி குறிப்பிடுகிறது.
இது மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளையும் தொடர்பு கொண்டு உங்கள் நாட்டுத் தங்கங்களை எங்கள் நாட்டில் பாதுகாப்பாக வையுங்கள் என ஆஃபர் கொடுத்து வருகிறதாம் சீனா. அந்த வகையில் கம்போடியா உள்ளிட்ட சில நாடுகள் தங்களின் தங்கத்தை சீனாவிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. அந்த வகையில் சீனா தங்கத்தை வைத்து பெரிய திட்டமிடுவது தற்போது உறுதியாக இருக்கிறது.
2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை உயர்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணியாக பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்கும் போக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் சீனா பிரேக்கே விடாமல் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்குகிறது என்றால் 2026 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை நிச்சயம் உயரும் என பல நிறுவனங்களும் வைக்கும் கணிப்புகளுக்கு வலுக்கூட்டம் வகையில் அமைந்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications