உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை உயர்வு குறித்து தான் பரபரப்பாக பேசி வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் ஒரு நிறுவனம் 10 கிலோ தங்கத்தில் ஒரு உடையை உருவாக்கி சாதனை படைத்திருப்பது தற்போது பெரிய பேச பொருளாக மாறி இருக்கிறது.
சவுதி அரேபியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய ஒரு நகைக்கடை நிறுவனம் 10 கிலோ எடையில் ஒரு தங்க உடையை வடிவமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறது. அல் ரொமைசான் என்ற தங்கம் மற்றும் நகை விற்பனை நிறுவனம் சவுதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது . இந்த நிறுவனம் சார்பாக தான் சார்ஜா கண்காட்சியில் இந்த தங்க உடை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 10.0812 கிலோ எடைக்கு தங்கத்தை பயன்படுத்தி இந்த உடையை தயார் செய்திருக்கிறார்கள். இதன் மொத்த மதிப்பு 11 கோடி ரூபாய். த துபாய் டிரஸ் என அழைக்கப்படும் இந்த தங்க உடை தற்போது புதிய கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறது. இந்த கண்காட்சிக்கு வருபவர்கள் அனைவருமே தவறாமல் இந்த உடையை தான் பார்த்துவிட்டு போகிறார்கள். 21 கேரட் தங்கத்தை கொண்டு இந்த துபாய் டிரஸ்ஸினை வடிவமைத்திருக்கிறார்கள்.
நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த உடை தயாரிக்கப்பட்டதாக அல் ரொமைசான் தங்க விற்பனை நிறுவனம் கூறுகிறது. முதலாவதாக தங்க கிரீடம் 398 கிராம் எடையில் வடிவமைக்கப்பட்டதாம் அடுத்ததாக நெக்லஸ் 8,810.60 கிராம் தங்கம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது . காதணி 134.1 கிராம் இடையில் உருவாக்கப்பட்டிருக்கிறது அடுத்ததாக மற்ற பாகங்கள் 738. 5 கிராம் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தங்க நகையோடு பல்வேறு கற்களும் பொறிக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான வடிவம் இதற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அமீரகத்தின் பாரம்பரியமும் நவீனத்துவமும் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டே இந்த தங்க ஆடையை வடிவமைத்து இருப்பதாக அந்த நிறுவனம் பெருமைப்பட தெரிவித்திருக்கிறது.
தற்போது சார்ஜா கண்காட்சியிலேயே அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட ஒரு உடை தங்க உடையாக இது மாறி இருக்கிறது இது தவிர இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது .அதிக மதிப்பு கொண்ட தங்க உடை என்ற கின்னஸ் சாதனையை இந்த உடை என்பது படைத்திருக்கிறது . இந்த கண்காட்சியில் 500க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை பார்வைக்கு வைத்திருக்கின்றன. 1800 வடிவமைப்பாளர்கள், தங்க நகை உற்பத்தியாளர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்த கண்காட்சியில் தங்க சைக்கிள் கூட பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!



Click it and Unblock the Notifications