உலகின் முன்னணி சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக் தனது வர்த்தகத்தை மேம்படுத்த குறிப்பாக மார்கெட்பிளேஸ் வர்த்தகத்தை மேம்படுத்த நியூயார்க் நகரத்தை தலைமையிடமாக கொண்ட கஸ்டமர் (Kustomer) என்னும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் மென்பொருள் நிறுவனத்தை 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தொகைக்கு கைப்பற்றியுள்ளது.
பேஸ்புக் தனது மெசேஜிங் சேவையின் மூலம் வருமானம் மற்றும் வர்த்தகத்தை ஈட்டும் முயற்சியில் இறங்கியுள்ளதை அடுத்து Kustomer நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகம்
ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் மெசேஜிங் ஆப்களான வாட்ஸ்அப், மெசேஞ்சர் போன்ற தளத்தில் சேட் செய்யும் சேவையை விரிவாக்கம் செய்ய பேஸ்புக் முடிவு செய்துள்ளது.
மெசேஜ்-ன் முக்கியதுவம்
பொதுவாக வர்த்தகங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு போன்கால் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு இந்த டிஜிட்டல் வர்த்தக உலகில் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு மெசேஜ்-ம் முக்கியம். இந்த மாற்றத்தை வர்த்தக அமைப்புகள் வேகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேஸ்புக் ஊழியர்கள் தங்களது பிளாக் போஸ்ட்டில் தெரிவித்துள்ளனர்
1 பில்லியன் டாலர்
இந்நிலையில் பேஸ்புக் தற்போது 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் கஸ்டமர் (Kustomer) வாடிக்கையாளர்களின் கேள்விகள், தேவைகள் அனைத்தையும் Bots மூலம் நிர்வாகிக்கும் ஒரு பிரத்தியேக சேவையை அளித்து வருகிறது.
இது ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுப்படும் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
வாட்ஸ்அப்
வாஸ்ட்அப் மூலம் வர்த்தகம் மற்றும் வருவாய் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள பேஸ்புக் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் பல வர்த்தக சேவைகளை அளிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல நாடுகளில் பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
வர்த்தகர்கள் - வாடிக்கையாளர்கள்
வாட்ஸ்அப் மூலம் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு தங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கவும், பொருட்களை வாங்கவும், பொருட்கள் குறித்த கேள்விகளை கேட்கவும், வாடிக்கையாளர் சேவையில் பல தரப்பட்ட சேவைகள் அனைத்தும் வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட முறையில் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டு பேஸ்புக் இயங்கி வருகிறது.
வருமானம்
தற்போது பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் மூலம் பெரிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பும் சேவைக்காக கட்டணம் வசூலித்து வருகிறது. குறிப்பாக ஜியோமார்ட், ரெட்பஸ், ஹெச்டிஎப்சி போன்ற பல நிறுவனங்கள் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்காக வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறது.
ஒப்புதல்
இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செய்யும் முயற்சியில் தான் தற்போது கஸ்டமர் (Kustomer) நிறுவனத்தை கைபற்றியுள்ளது. இந்நிறுவன கைப்பற்றலுக்கு அமெரிக்க சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications